கடலூர் அஞ்சலையம்மாள்
- 1890 – ல் கடலூரில் உள்ள முதுநகரில் பிறந்தார்
- நீலன் சிலை அகற்றும் போராட்டம், உப்பு காய்ச்சும் போராட்டம் வெள்ளையனே வெளியேறு இயக்கம் முதலிய போராட்டங்களில் கலந்து கொண்டுள்ளார்
- வேலூர் சிறையில் இருந்த போது, கருவுற்ற நிலையில் இருந்த இவரை ஆங்கிலேய அரசு வெளியில் அனுப்பிவிட்டு, மகப்பேற்றிற்குப் பின் மீண்டும் சிறையில் அடைத்தது.
- நீலன் சிலையை அகற்றும் போராட்டத்தில் தனது 9 வயது மகளையும் ஈடுபடுத்தினார். இவருடன் இவர் மகளும் சிறைத்தண்டனை பெற்றார்.
- காந்தியடிகள் சிறையில் வந்து பார்த்து, இவரின் மகள் அம்மாக்கண்ணுவை தன்னுடன் அழைத்து சென்று வார்தாவில் உள்ள ஆசிரமத்தில் படிக்க வைத்து அவருக்கு லீலாவதி எனப்பெயரும் இட்டார்.
- காந்தியடிகள் அஞ்சலையம்மாலை தென்னாட்டின் ஜான்சிராணி என்று அழைத்தார்
No comments:
Post a Comment