ஐ.நா. பொருளாதார மற்றும் சமூக அமைப்பில் இந்தியா அதிக வாக்குகள் பெற்று மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுளளது.
ஐ.நா. மனித உரிமைகள் அமைப்பில் மறு தேர்வு பெற்ற ஒரு வாரத்துக்குள் இந்தியாவுக்கு கிடைத்த குறிப்பிடத்தக்க வெற்றி இதுவாகும்.
193 நாடுகள் உள்ள ஐ.நா. சபையில் பொருளாதார, சமூக அமைப்புக்காக புதன்கிழமை நடைபெற்ற தேர்தலில் 183 வாக்குகளை இந்தியா பெற்றது.
இந்த அமைப்புக்கான தேர்தலில், ஆசிய-பசிபிக் நாடுகளில் இதுவரை அதிகளவு வாக்குகள் பெற்ற நாடுகளில் இந்தியா முதன்மை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
ஐ.நா. பொருளாதார, சமூக அமைப்பில் மொத்தம் 54 உறுப்பு நாடுகள் உள்ளன. அவற்றில் 18 உறுப்பினர் இடங்களுக்கான தேர்தல் தற்போது நடைபெற்றது.
No comments:
Post a Comment