- காவிரி பாயும் சோழவள நாடு, அது கலைகளின் விளைநிலம், வியக்கவைக்கும் கட்டடக்கலையும் சிற்பக்கலையும் கொழிக்கும் ஊர் - கும்பகோணம்.
- கும்பகோணத்திற்கு தென்புறம் பாயும் அரிசிலாற்றின் தென்கரையில் அமைந்துள்ள ஊர் - தாராசுரம்
- இங்குள்ள ஐராவதிஸ்வரர் கோயில் 800 ஆண்டுகளுக்கு முன் இரண்டாம் ராஜராஜ சோழனால் கட்டப்பட்டது.
- நூறு கோவில்களுக்குச் சென்று கண்ட சிற்பங்களின் பேரழகைப் பார்த்து மகிழ்ந்த அனுபவத்தை தரும் ஒரே கோவில் - ஐராவதீசுவரர் கோவில்
- முப்புரம் எரித்தவன் (திரிபுராந்தகன்) கதை ஒரு சிற்பம்.
- யானையை வதம் செய்து, அதன் தோலைத் தன் மீது உடுதிகொள்ளும் ஈசனின் யானை உரிபோர்த்தவர்(கஜம்ஹாரமூர்த்தி) கதை ஒரு சிற்பம்.
- அடிமுடி தேடவைக்கும் அண்ணாமலையார்(லிங்கோத்பவர்) கதை மற்றொரு சிற்பம்.
- கோவிலின் நுழைவாயிலில் அமைந்த 7 கருங்கற் படிகள் சரிகமபதநி எனும் 7 நாதப்படிகளாக வடிக்கப்பட்டுள்ளன.
- தாராசுரம் கோவிலின் கூம்பிய விமானத் தோற்றமும், அதற்குக் கீழே இருபுறமும் யானைகளும் குதிரைகளும் பூட்டிய இரதம்போல் அமைந்த மண்டபமும் வான்வெளி இரகசியத்தை காட்டுவதாக வானவியல் அறிஞர் கார்ல் சாகன் கூறுகிறார்.
- தஞ்சை அரண்மனைக்கு சொந்தமான இக்கோவில் தற்போது மத்தியத் தொல்பொருள் துறையினர் பாதுகாத்து வருகின்றன. இதை மரபு அடையாளச்சினமாக யுனெஸ்கோ அறிவித்துள்ளது. இக்கோவிலை கலைகளின் சரணாலயம் என்றே கூறலாம்.
10 November, 2014
கல்லிலே கலைவண்ணம் - 6 ஆம் வகுப்பு சமச்சீர்
Subscribe to:
Post Comments (Atom)
இன்பத்தமிழ் - Class 6 Tamil New Syllabus Term 1
தமிழ் வணக்கம் தற்கால இலக்கிய மரபாகிவிட்டது பாரதிதாசனின் இயற்பெயர் சுப்புரத்தினம். பாரதியாரின் கவிைதகள் மீது கொண்ட பற்றின் காரணமா...
-
* தமிழை பக்தி மொழி (இரக்கத்தின் மொழி) என்று கூறியவர் மறைத்திரு தனிநாயக அடிகள். * சமய மறுமலர்ச்சிக் காலம் என்பதும், பக்தி இலக்கியக் க...
-
ஆற்றவும் கற்றார்அறிவுடையார் அஃதுடையார் நாற்றிசையும் செல்லாத நாடில்லை - அந்நாடு வேற்றுநா டாகா தமவேயாம் ஆயினால் ஆற்றுணா வேண்டுவ தில். ...
No comments:
Post a Comment