1. இந்திய குடியரசுத்தலைவரின் அதிகாரப்பூர்வ இல்லம் - "ராஷ்டிரபதி பவன்' (குடியரசுத்தலைவர் மாளிகை).
2. உலகின் பெரிய ஜனநாயக நாட்டின் தலைவரின் இல்லம் - "ராஷ்டிரபதி பவன்'
3. புகழ்பெற்ற பிரிட்டீஷ் கட்டிடக் கலைஞர் சர் எட்வின் லாண்ட்சீர் லுட்யன்ஸ் மேற்பார்வையில் குடியரசுத் தலைவர் மாளிகை கட்டுமானப் பணி நடைபெற்றது.
4. ராஷ்டிரபதி பவன் - நான்கு மாடிகள், 340 அறைகள் கொண்டது. மொத்தம் 2 லட்சம் சதுர அடியில் கட்டப்பட்டுள்ளது. 70 கோடி செங்கல், 30 கோடி கற்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.
5. குடியரசுத் தலைவர் மாளிகைக்கான செலவு 8 லட்சத்து 77 ஆயிரத்து 136 பவுண்டுகளாகும். அந்த காலத்திய இந்திய பண மதிப்பு ரூ.2 கோடி.
6. இங்கிலாந்து வைஸ்ராய்கள் தங்குவதற்காக கட்டப்பட்ட மாளிகை - தற்போதைய குடியரசுத் தலைவர் மாளிகை.
7. 1911-ஆம் ஆண்டு இந்தியாவின் தலைநகரம் கொல்கத்தாவிலிருந்து தில்லிக்கு மாற்றப்படுகிறது என்று அறிவித்தவர் - ஜார்ஜ் மன்னன்.
8. குடியரசுத் தலைவர் மாளிகையில் குடியேறிய முதல் வைஸ்ராய் - லார்டு இர்வின்(1931.ஜனவரி 23-ல் குடியேறினார்)
9. குடியரசுத் தலைவர் மாளிகையில் குடியேறிய முதல் இந்தியர் - இந்தியாவின் முதல் கவர்னர் ஜெனரலான ராஜாஜி.
10. பொதுத்தேர்தல் முடிந்த பின் புதியதாக கூடும் மக்களவையின் முதல் கூட்டத்தொடரில் தற்காலிக சாபாநாயகரை நியமிப்பது - குடியரசுத் தலைவர்
11. யூனியன் பிரதேசங்கள் யார் ஆளுகைக்கு உட்பட்டது - குடியரசுத் தலைவர்
12. இந்திய ஒரு "குடியரசு" (Republic) ஏனெனில் அதனுடைய அரசின் தலைவர்
ஒரு குறிப்பிட்ட ஆண்டுகளுக்கு மறைமுகமாக மக்களால்(அதாவது மக்களின் பிரதிநிதிகளால்) தேர்ந்தெடுக்கப்படுகிறார்.
13. இந்தியாவின் முதல் குடியரசுத் துணைத்தலைவர் - டாக்டர் எஸ். இராதாகிருஷ்ணன்
14. குடியரசுத் தலைவர் ஆட்சி ஒவ்வொரு 6 மாதங்கள் காலக்கட்டத்திலும் நீட்டிப்பு செய்யப்பட வேண்டும்.
15. நாடாளுமன்ற உறுப்பினர் பதவி விலகாமல் குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிடக் கூடாது.
16. இந்திய குடியரசுத் தலைவரால் நியமிக்கப்படாதவர் - துணைக் குடியரசுத் தலைவர்
17. குடியரசுத் தலைவர் ஆட்சி ஒரு மாநிலத்தில் சாதாரணமாக 3 வருடங்கள் நீடிக்கலாம்.
18. மக்களவையின் சபாநாயகராகவும், குடியரசுத் தலைவராகவும் இருந்தவர் - சஞ்சீவி ரெட்டி
19. மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் உறுப்பினரை எக்காரணத்திற்காக குடியரசுத் தலைவர் நீக்கலாம் - 1. திவால் ஆனாவர் என்றால் 2. உறுப்பினராக இருக்கும் காலகட்டத்தில், ஊதியத்திற்காக வேறு பணி புரிந்தால் 3. குடியரசுத் தலைவர், உறுப்பினரின் உள்ளம் மற்றும் உடலால் நலமில்லாதவர் என்று நினைத்தால் இவை
அனைத்திற்காகவும் நீக்கலாம்.
20. குடியரசுத் தலைவர் மாளிகையில் குடியேறிய முதல் இந்திய குடியரசுத் தலைவர் - டாக்டர் இராஜேந்திர பிரசாத்.
21. ராஷ்டிரபதி பவன் - இந்து, புத்த, ஜெயின் சமூக மரபை பிரலிபதிப்பதாக அமைந்துள்ளது.
22. இந்தியா சுதந்திரம் பெற்று ராஜாஜி இந்தியாவின் கடைசி கவர்னர் ஜெனரலாக பதவியில் இருந்த போது, அவர் பயன்படுத்திய அறைகள் - தற்போது வெளிநாட்டுதலைவர்கள் சந்திக்கும் இடமாக விளங்குகிறது.
23. ராஷ்டிரபதி வளாகத்தில் - முகுல் கார்டன், ஹெர்பல் கார்டன் தோட்டங்கள் அமைந்துள்ளன. 7. தில்லியைத் தவிர, சிம்லா (வடக்கு) மற்றும் ஐதராபாத் (தெற்கு) ஆகிய இடங்களில் குடியரசுத் தலைவருக்கான "ராஷ்டிரபதி நிலையம்' அமைந்துள்ளது.
24. இந்திய பாராளுமன்றத்தின் மேலவையின் தலைவர் - சமநிலை முரண்படும்போது மட்டும் வாக்களிப்பதில் உரிமை பெறுகிறார்.
25. அடிப்படை உரிமைகள் - குடியரசுத் தலைவரால் நிறுத்தி வைக்கப்படலாம்
26. இந்திய அரசியலமைப்பை உருவாக்கியவர்கள் அடிப்படை உரிமைகள் என்ற கருத்தை - அமெரிக்க ஐக்கிய நாட்டு அரசியலமைப்பில் இருந்து பெற்றனர்
27. அரசுக் கொள்கையினை நெறிப்படுத்தும் கோட்பாடுகள் சேர்க்கப்பட்டுள்ள பகுதி - அரசியலமைப்பின் பகுதி IV
28. இந்திய அரசியலமைப்பின் பொதுப் பட்டியலில் இடம் பெற்றுள்ள வகைகள் - 47 வகைகள்
29. இந்திய அரசியலமைப்பில் இருந்து வேறுபட்டது - குடியரசுத் தலைவர் முறை அரசாங்கம்
30. இந்திய உச்சநீதிமன்றம் - அரசியலமைப்பால் அமைக்கப்பட்டது
31. அடிப்படை உரிமைகளின் பாதுகாவலன் - நீதித்துறை
32. எந்த அரசியலமைப்பு திருத்ததின் மூலம் அடிப்படை கடமைகள் வரையறுக்கப்பட்டன - 42வது அரசியலமைப்பு திருத்தம்
33. 44வது அரசியலமைப்பு திருத்தம் அமல்படுத்துப்பட்டபின், சொத்துரிமையானது - அடிப்படை உரிமையிலிருந்து நீக்கப்பட்டு சட்ட உரிமையாக மட்டும் ஏற்கப்பட்டுள்ளது
34. இந்திய அரசியலமைப்பில் 14 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு இலவசக் கட்டாயக் கல்வி வழங்க வழி வகை செய்யப்பட்டுள்ள பகுதி - அரசு வழிகாட்டு நெறிமுறை கோட்பாடுகள்.
நன்றி - தினமணி
நன்றி - தினமணி
No comments:
Post a Comment