01 August, 2014

மக்சேசே விருது

ரமன் மக்சேசே விருது (Ramon Magsaysay Award) ராக்பெல்லர் சகோதரர்கள் நிதியம் (RBF) பொறுப்பாளர்களால் ஏப்ரல் 1957இல் நிறுவப்பட்டது. பிலிப்பைன்ஸ் அரசின் உடன்பாட்டுடன் அந்நாட்டு அதிபர் மறைந்த ரமன் மக்சேசே நினைவாகவும், அவரது அரசியல் நேர்மை, மக்கள் சேவை இவற்றை காட்டாக வளரும் நாடுகளில் பரப்பவும் இப்பரிசு ஏற்படுத்தப்பட்டது. இது ஆசியாவின் நோபல் பரிசு என அறியப்படுகிறது

ஒவ்வொரு ஆண்டும் ரமன் மக்சேசே விருது நிறுவனம் ஆசியாவில் தங்கள் துறையில் சிறந்து விளங்கும் தனிநபர்களுக்கும் நிறுவனங்களுக்கும் பரிசு வழங்கி வருகிறது. ஆறு வகைகளில் இப்பரிசு வழங்கப்படுகிறது:


1.அரசுப்பணி
2.பொது சேவை
3.சமூக தலைமை
4.தாளியல்,இலக்கியம் மற்றும் மக்கள் தொடர்பு கலை
5.அமைதி மற்றும் பன்னாட்டு புரிதல்
6.வளரும் தலைமை

"வளரும் தலைமை" என்ற வகை 2000ஆம் ஆண்டு ஆறாவது பகுப்பாக தொடங்கப்பட்டது. இப்பரிசு "தங்கள் சுற்றுப்புறத்தில் சமூக மாற்றங்களை ஏற்படுத்த சிறப்பாக பணியாற்றிய,ஆனால் வெளியே அதிகம் அறியப்படாத, நாற்பது வயதிற்கு குறைவான தனிநபர்களுக்கு" வழங்கப்படுகிறது.

2008 வரை வழங்கப்பட்டுள்ள 254 விருதுகளில், 47 இந்தியர்களுக்கும்,39 பிலிப்பைன் நாட்டவருக்கும்,23 ஜப்பானியருக்கும் மற்றவை ஆசியாவின் பிற நாட்டினருக்கும் அளிக்கப்பட்டுள்ளது.

2014 ஆம் ஆண்டுக்கான விருது 

சீனாவைச் சேர்ந்த பெண் பத்திரிகையாளர், சுற்றுச்சூழல் துறை சார்ந்த வழக்குரைஞர் உள்பட 6 பேருக்கு இந்த ஆண்டுக்கான மகசேசே விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

சீனாவைச் சேர்ந்த பெண் பத்திரிகை ஆசிரியர் ஹூ ஷூலி (61), அந்நாட்டின் சுற்றுச்சூழல் துறை சார்ந்த வழக்குகளில் வாதிடும் வழக்குரைஞர் வாங் கான்ஃபா (55), இந்தோனேசிய மானுடவியல் நிபுணர் சார் மார்லினா மானுருங், ஆஃப்கானிஸ்தான் தேசிய அருங்காட்சியக இயக்குநர் ஒமரா கான் மசூதி, பாகிஸ்தானைச் சேர்ந்த தன்னார்வ அமைப்பான தி சிட்டிசன்ஸ் ஃபவுண்டேஷன், ஃபிலிப்பின்ஸ் ஆசிரியர் ராண்டி ஹலாசன் ஆகியோர் மகசேசே விருதுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

No comments:

Post a Comment

இன்பத்தமிழ் - Class 6 Tamil New Syllabus Term 1

தமிழ் வணக்கம்   தற்கால இலக்கிய மரபாகிவிட்டது  பாரதிதாசனின் இயற்பெயர்   சுப்புரத்தினம்.  பாரதியாரின் கவிைதகள்  மீது கொண்ட  பற்றின் காரணமா...