திருவருட் பிரகாச வள்ளலார் - 10 ஆம் வகுப்பு சமச்சீர்


மறுமலர்ச்சிக் காலம்:
  • பத்தொன்பதாம் நூற்றாண்டை தமிழின் மறுமலர்ச்சிக் காலம் என்பர்.
  • அக்காலத்தே புலவர் பெருமக்களாலும் சமூகச் சீர்திருத்தச் செம்மல்களாலும் போற்றப்படும் பெருஞ்சிறப்பை பெற்றவர் வள்ளலார்.
  • கடலூர் மாவட்டம் சிதம்பரம் வட்டத்தில் உள்ள மருதூரில் 05.10.1823இல் இராமையா, சின்னம்மை இனையார்க்கு ஐந்தாவது மகவாக இராமலிங்கர் பிறந்தார்.
  • ஆலய அந்தணர் இவர் குழந்தையாக இருந்த பொழுது, இவரை “இறையருள் பெற்ற திருக்குழந்தை” என்று பாராட்டினார்.
  • “அகத்தே கறுத்துப் புறத்து வெளுத்து இருந்த உலகர் அனைவரையும் சகத்தே திருத்த”என இறைவன் தம்மை வருவிக்க உற்றதாகக் கூறுவார்.
  • இவர் சபாபதி என்பவரிடம் கல்வி கற்றார்.
  • ஒன்பது வயதிலேயே பாடல் புனையும் திறன் பெற்றிருந்தார்.

உத்தம மனிதர்:
  • திகம்பர சாமியார், இவரை “ஓர் உத்தம மனிதர்” என்றார்.

ஒருமையுணர்வு:
  • சென்னையில் உள்ள கந்தக்கோட்டத்து இறைவனை இராமலிங்கர் வணங்கி பாடிய பாடல்களின் தொகுப்பே “தெய்வமணிமாலை”.
  • ஒருமையுடன் நினது திருமலரடி நினைக்கின்ற உத்தமர்தம் உறவு வேண்டும் உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுவார் உறவு கலவாமை வேண்டும்.
  • இராமலிங்கர், “வடிவுடை மாணிக்கமாலை” என்னும் நூலையும், திருவெற்றியூர் சிவபெருமான் மீது “எழுந்தரியும் பெருமான் மாலை” என்னும் நூலையும் பாடினார்.

புரட்சித் துறவி:
  • ஒருமைவாழ்வு, ஒருமையரசு, ஒருமையுலகம் காண விரும்பினார்.
  • ஆணும் பெண்ணும் சமம் என்றார்.
  • ஒத்தாரும் உயர்ந்தாரும் தாழ்ந்தாரும் எவரும் ஒருமையுளர் ஆகிஉலா கியல்நடத்தல் வேண்டும்.
  • சங்கடம் விளைவிக்கும் சாதியையும் மதத்தையும் தவிர்த்தேன்

பசிப்பிணி மருத்துவர்:
  • “வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன்” என்று பயிர்வாடத் தாம் வாடினார்.
  • வடலூரில் “சத்திய தருமச்சாலை” நிறுவி அனைவர்க்கும் உணவளித்தார்.

பேரின்ப வீட்டின் திறவுகோல்:
  • “உயிரிரக்கமே பேரின்ப வீட்டின் திறவுகோல்” என்றார் வள்ளலார்.
  • கடவுளின் பெயரால் உயிர் கொலை செய்வதனை அறவே வெறுத்தார்.
  • போரில்லா உலகை படைக்க விழைந்தார்.

புதுநெறி கண்ட புலவர்:
  • ஆறு தொகுதிகள் கொண்ட இவரது பாடல்களைத் “திருவருட்பா” என மக்கள் போற்றுகின்றனர்.
  • இவர் உருவ வழிபாட்டை நீக்கி, ஒளி வழிபாட்டை மக்கள் பின்பற்றச் செய்தார்.
  • பாரதியார் இவரை “புதுநெறி கண்ட புலவர்” எனப் போற்றினார்.

தமிழ்ப்பற்று:
  • தமிழ் மொழியே இறவாத நிலை தரும் என்றார்.
  • பயில்வதற்கும் அறிதற்கும் மிகவும் இலேசுடையதாய், பாடுவதற்கும் இனிமை உடைய மொழி என்றார்.

இறைநிலை அடைதல்:

1874ஆம் ஆண்டு தைப்பூசத் திருநாள் அன்று இறவாநிலை எய்தினார்.
வளரும் பிள்ளைகளுக்கு வள்ளலார் வழங்கிய அறிவுரைகள்:
1. தந்தை தாய் மொழியைத் தள்ளி நடக்காதே.
2. குருவை வணங்கக் கூசி நிற்காதே.
3. வெயிலுக்கு ஒதுங்கும் விருட்சம் அழிக்காதே.
4. மனமொத்த நட்புக்கு வஞ்சகம் செய்யாதே.
5. நல்லோர் மனத்தை நடுங்கச் செய்யாதே.
6. பொருளை இச்சித்துப் பொய் சொல்லாதே.
7. ஏழைகள் வயிறு எரியச் செய்யாதே.
8. பசித்தோர் முகத்தைப் பாராதிராதே.
9. இரப்போர்க்குப் பிச்சை இல்லை என்னாதே.
10. தானம் கொடுப்போரைத் தடுத்து நிறுத்தாதே.

வள்ளலாரின் பன்முக ஆற்றல்கள்

1. சிறந்த சொற்பொழிவாளர்
2. போதகாசிரியர்
3. உரையாசிரியர்
4. சித்த மருத்துவர்
5. பசிப்பிணி போக்கிய அருளாளர்
6. பதிப்பாசிரியர்
7. நூலாசிரியர்
8. இதழாசிரியர்
9. இறையன்பர்
10. ஞானாசிரியர்
11. அருளாசிரியர்

வள்ளலார் பதிப்பித்த நூல்கள்
இயற்றிய உரைநடை நூல்கள்

1. சின்மய தீபிகை 1. மனுமுனற கண்ட வாசகம்
2. ஒழிவிலொடுக்கம் 2. ஜீவகாருண்ய ஒழுக்கம்
3, தொண்டமண்டல சதகம் திருவருட்பா ( ஆறு திருமுறைகள்)

1 comment:

இன்பத்தமிழ் - Class 6 Tamil New Syllabus Term 1

தமிழ் வணக்கம்   தற்கால இலக்கிய மரபாகிவிட்டது  பாரதிதாசனின் இயற்பெயர்   சுப்புரத்தினம்.  பாரதியாரின் கவிைதகள்  மீது கொண்ட  பற்றின் காரணமா...