பரிதிமாற் கலைஞர் - 10 ஆம் வகுப்பு சமச்சீர்


பிறப்பு: 
  •  சூரிய நாராயண சாஸ்திரி என்னும் தம் பெயரைப் பரிதிமாற்கலைஞர் எனத் தனித்தமிழாக்கிக் கொண்டவர்.
  •  மதுரை அடுத்த விளாச்சேரியில் பிறந்தார்.
  •  பெற்றோர்:கோவிந்தசிவனார், இலட்சுமி அம்மாள். தம் பெற்றோருக்கு மூன்றாவது மகனாக, 1870 ஆம் ஆண்டு சூலைத் திங்கள் ஆறாம் தேதி பிறந்தார்.

 கல்வி:
  •  தந்தை கோவிந்த சிவனாரிடமே வடமொழி பயின்றார்.
  •  மகாவித்துவான் சபபதியாரிடம் தமிழ் பயின்றார்.
  •  சென்னை கிறித்துவக் கல்லூரியில் இளங்கலை பயின்றார்.
  •  இளங்கலை தேர்வில் தமிழிலும் தத்துவத்திலும் பல்கலைக்கழகத்தில் முதல் மாணவராக தேர்ச்சி பெற்றார்.

 இயற்றமிழ் மாணவர்:
  •  தமிழ் பயிலும் ஆர்வம் மிக்க மாணவர்களுக்குத் தம்முடைய இல்லத்திலேயே தமிழ் கற்பித்தவுடன், அவர்களை "இயற்றிமிழ் மாணவர்" எனப் பெயரிட்டு அழைத்தார்.

மதுரைத் தமிழ்ச்சங்கம்:
  • மதுரையில் நான்காம் தமிழ்ச்சங்கம் நிறுவ முயன்றவர்களுள் இவரும் ஒருவர்.
  •  பாசுகரசேதுபதி தலைமையில் பாண்டித்துரை தேவர் மேற்பார்வையில் பரிதிமாற்கலைஞர், உ.வே.சாமிநாதர், இராகவனார் ஆகிய பேராசிரியர்களின் துணையோடு மதுரைத் தமிழ்ச்சங்கம் நிறுவப்பட்டது.

திராவிட சாஸ்திரி:
  •  யாழ்பாணம் சி.வை.தாமோதரனார், பரிதிமாற்கலைஞரின் தமிழ்ப் புலமையும் கவிபாடும் திறனையும் கண்டு, "திராவிட சாஸ்திரி" என்னும் சிறப்புப் பட்டதை வழங்கினார்.

 தனிப்பாசுரத்தொகை:
  •  பரிதிமாற்கலைஞர், தாம் இயற்றிய "தனிப்பாசுரத்தொகை" என்னும் நூலில் பெற்றோர் இட்ட சூரியநாரா.ண சாஸ்திரி என்ற வடமொழிப் பெயரை மாற்றிப் பரிதிமாற்கலைஞர் எனத் தனித்தமிழ் பெயரைச் சூட்டிக்கொண்டார்.
  •  இந்நூலினை, ஜி.யு. போப் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார்.

கம்பராமாயண உவமை:
  •  பரிதிமாற் கலைஞர் சென்னைக் கிறித்துவ கல்லூரியில் படித்தபோது நடந்த நிகழ்வு.
  •  கல்லூரி முதல்வரும் ஆங்கிலப் பேராசிரியருமான வில்லியம் மில்லர் என்பவர் டென்னிசன் இயற்றிய "ஆர்தரின் இறுதி"என்னும் நூலில் இருந்து ஒரு பாடலில் படகின் துடுப்பு அன்னப்பறவைக்கு உவமையாக கூறப்பட்டது.
  •  தமிழில் இது போன்ற உவமைகள் உண்டா என அவர் கேட்க, பரிதிமாற் கலைஞர் கம்பராமாயண குகப்படலத்தில் உள்ள"விடுநனி கடிது" என்னும் பாடலை பாடி பொருள் கூறினார்.

தமிழ் சிறப்பை உணர்த்தல்:
  • வடமொழியும் தமிழ்மொழியும் கலந்து எழுதுதல் என்பது, தமிழ்மணியோடு பவளத்தைப்போலச் செந்நிறம் உடையதான மிளகாய்ப் பலம் கலந்தது போன்ற பயனையே தந்தது என்பது பரிதிமாற்கலைஞர் கருத்து.
  •  தமிழ்த்தாயின் எழில் மிகுந்த உடலுக்கு, மனிபிரவாள நடை எரிச்சலைத் தான் தரும் எனபதனை உணர்ந்த பரிதிமாற் கலைஞர், வடசொல் கலப்பைக் கண்டித்தார்.

 தமிழ்த்தொண்டு:
  •  பல்கலைக்கழகப் பாடத்திட்டத்தில் தமிழை விலக்கி வடமொழியை கொண்டு வர முடிவு செய்யப்பட்டது.
  • ஆனால் பரிதிமாற் கலைஞரின் உறுதியான எதிர்பால் பல்கலைக்கழகம் அம்முடிவை கைவிட்டது. 

படைப்புகள்:
  • ரூபாவதி, கலாவதி முதலிய நற்றமிழ் நாடகங்களை இயற்றினார்.
  • அவர் ரூபாவதி, கலாவதி என்னும் பெண்பால் வேடங்களும் புனைந்து நடித்தார்.
  •  "சித்திரக்கவி" என்னும் நூலைப் படைத்தார்.
  • குமரகுருபரரின் "நீதிநெறிவிளக்கம்" என்னும் நூலில் இருந்து 51 பாடல்களுக்கு உரை எழுதியுள்ளார்.

இதழ்ப் பணி:
  •  மு.சி.பூர்ணலிங்கம் தொடங்கி வைத்த "ஞானபோதினி"  என்னும் இதழைப் பரிதிமாற்கலைஞர் நடத்தினார்.
  • மும்மொழிப் புலமை உடையவர்.
  • மதுரைத் தமிழ்ச்சங்கத்தாரின் "செந்தமிழ்" இதழில் உயர்தனிச் செம்மொழி என்னும் தலைப்பில், தமிழின் அருமை பெருமைகளை விளக்கி அரியதொரு கட்டுரை வரைந்தனர்.
  • தமிழ்மொழி "உயர்தனிச் செம்மொழி" என முதன்முதலாக நிலைநாட்டினார்.

மறைவு:
  •  தமிழ் உள்ளங்கொண்டு அயராது தமிழ்த் தொண்டாற்றிய பரிதிமாற்கலைஞர் தமது 33 அகவையில் (02.11.1903) இயற்கை எய்தினார்.
  •  நடுவண் அரசு பரிதிமாற்கலைஞர்க்கு அஞ்சல்தலை வெளியிட்டு சிறப்பித்துள்ளது.
செம்மொழிக் காலக்கோடு:
  •  1901 - மதுரைத் தமிழ்ச்சங்க இதழான செந்தமிழ் பரிதிமாற் கலைஞரின் உயர்தனிச் செம்மொழி என்னும் கட்டுரை வெளியிடப்பட்டது.
  • 1918 - மேலைச்சிவபுரிச் சன்மார்க்க சபை, தமிழைச் செம்மொழியாக அறிவிக்க வேண்டித் தீர்மானம் நிறைவேற்றி, அதை இந்திய அரசுக்கும் இந்தியப் பல்கலைக்கழகங்களுக்கும் அனுப்பி வற்புறுத்தியது.
  • 1918 - சைவ சித்தாந்த மாநாட்டில் தமிழைச் செம்மொழியாக அறிவிக்க வேண்டுமெனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
  •  1919 - கரந்தைத் தமிழ்ச்சங்கம் தமிழைச் செம்மொழியாக அறிவிக்க வேண்டுமெனத் தீர்மானம் நிறைவேற்றியது.
  •  1966 - உயர்தனிச் செம்மொழி என்னும் ஆங்கில நூல் தேவநேயப்பாவாணரால் எழுதி வெளியிடப்பட்டது.
  •  2004 - நடுவணரசு தமிழைச் செம்மொழியாக அறிவித்தது.

பரிதிமாற்கலைஞரின் சொல்லாக்கங்கள்
  • Aesthetic - இயற்கை வனப்பு
  • Biology   - உயிர்நூல்
  • Classical Language - உயர்தனிச் செம்மொழி
  • Green Rooms - பாசறை
  • Instinct - இயற்கை அறிவு
  • Order of Nature - இயற்கை ஒழுங்கு
  • Snacks - சிற்றுரை

5 comments:

  1. Snacks என்பதற்கு சிற்றுண்டி என்றே பொருள்.தயவுசெய்து சரியாக பதிவிடுக

    ReplyDelete
  2. Nice article, good information and write about more articles about it.
    Keep it up! Keep writing. <a https://www.biofact.in/2020/07/rajam-krishnan-in-tamil.html

    ReplyDelete
    Replies
    1. எளிமை! அருமை!

      Delete
  3. Ithu parithimar kalaignarin sollakkam

    ReplyDelete
  4. Milakaai palamaa pazhama.......???

    ReplyDelete

இன்பத்தமிழ் - Class 6 Tamil New Syllabus Term 1

தமிழ் வணக்கம்   தற்கால இலக்கிய மரபாகிவிட்டது  பாரதிதாசனின் இயற்பெயர்   சுப்புரத்தினம்.  பாரதியாரின் கவிைதகள்  மீது கொண்ட  பற்றின் காரணமா...