இன்றையக் கேள்விகள் - 21/01/15

1."சேர்ந்த புறவின் நிறைத்தான் திருமேனி
   ஈர்த்திட் டுயர்துலைதான்  ஏறினான் "
   என்ற வரிகளால் குறிப்பிடப்பட்ட மன்னன்
a.சேரன்
b.பாண்டியன்
c.சோழன் 
d.பல்லவன்

2.நூறில் ஒரு பங்குடைய அணுவின் பெயராகக் கம்பன்
கூறுவது ?
a.சதம்
b.கோண் 
c.தசம்
d.நவம்

3." ஆரிருள் " என்பதன் இலக்கணக் குறிப்பு எது ?
a.பண்புத்தொகை 
b.வினைத்தொகை
c.உவமைத்தொகை
d.உம்மைத்தொகை

4.கீழ்க்கண்டவற்றில் எது வாணிதாசனின் படைப்பன்று?
a.கொடிமுல்லை
b.தீர்த்தயாத்திரை
c.பொங்கற்பரிசு
d.பூங்கொடி 

5. "நெடிய மொழிதலும் கடிய உஊர்தலும்
      செல்வம் அன்றுதன்  செய்வினைப் பயனே "
     என்று குறிப்பிடும் இலக்கியம்
a.குறுந்தொகை
b.நற்றிணை 
c.ஐங்குறுநூறு
d.பதிற்றுப்பத்து

6.'பகுத்தறிவு கவிராயர் ' என்று மக்களால் அழைக்கப்படுபவர்
a.பாரதிதாசன்
b.சுரதா
c.உடுமலை நாராயணக்கவி 
d.பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்

7.தில்லையடி வள்ளியம்மை கலந்து கொண்ட போராட்டம் ?
a.வெள்ளையனே வெளியேறு
b.உப்பு சத்தியாக்கிரகம்
c.தென்னாப்பிரிக்கா வாழ் இந்தியர் அறப்போராட்டம் 
d.ஒத்துழையாமை இயக்கம்

8.சாதுவன் கடல் வணிகம் மேற்கொண்டான் என்னும் குறிப்பு
காணப்படும் நூல்
a.சிலப்பதிகாரம்
b.மணிமேகலை 
c.சீவகசிந்தாமணி
d.குண்டலகேசி

9.மீனவர்கள் வாழும் பகுதி
a.பட்டினம்
b.பாக்கம்
c.குப்பம் 
d.கரை

10. தாயுமானவர் பாடல்களின் தொகுப்பு எவ்வாறு
அழைக்கப்படுகிறது ?
a.திருவருட்பா
b.தாயுமானவர் திருப்பாடல் திரட்டு 
c.தாயுமானவர் பாடல்கள்
d.தாயுமானவர் பராபரக்கண்ணி

No comments:

Post a Comment

இன்பத்தமிழ் - Class 6 Tamil New Syllabus Term 1

தமிழ் வணக்கம்   தற்கால இலக்கிய மரபாகிவிட்டது  பாரதிதாசனின் இயற்பெயர்   சுப்புரத்தினம்.  பாரதியாரின் கவிைதகள்  மீது கொண்ட  பற்றின் காரணமா...