எளிய நடையில் தமிழ்நூல் எழுதிடவும் வேண்டும்.
இலக்கண நூல் புதிதாக இயற்றுதலும் வேண்டும்.
வெளியுலகில், சிந்தனையில் புதிது புதிதாக
விளைந்துள்ள எவற்றினுக்கும் பெயர்களெல்லாங் கண்டு
தெளியுறுத்தும் படங்களொடு சுவடியெலாம் செய்து
செந்தமிழைச் செழுந்தமிழாய்ச் செய்வதுவும் வேண்டும்.
எளிமையினால் ஒரு தமிழன் படிப்பில்லை என்றால்
இங்குள்ள எல்லோரும் நாணிடவும் வேண்டும்.
உலகியலின் அடங்கலுக்கும் துறைதோறும் நூற்கள்
ஒருத்தர்தயை இல்லாமல் ஊரறியும் தமிழில்
சலசலென எவ்விடத்தும் பாய்ச்சிவிட வேண்டும்
தமிழொளியை மதங்களிலே சாய்க்காமை வேண்டும்
இலவசநூற் கழகங்கள் எவ்விடத்தும் வேண்டும்
எங்கள்தமிழ் உயர்வென்று நாம்சொல்லிச் சொல்லித்
தலைமுறைகள் பலகழித்தோம்; குறைகளைந்தோ மில்லை
தகத்தகாயத் தமிழைத் தாபிப்போம் வாரீர்.
-பாவேந்தர் பாரதிதாசன்
சொற்பொருள்:
- தெளிவுறுத்தும் – விளக்கமாய் காட்டும்
- சுவடி – நூல்
- எளிமை – வறுமை
- நாணிடவும் – வெட்கப்படவும்
- தகத்தகாய – ஒளிமிகுந்த
- சாய்க்காமை – அழிக்காமை
- நூற்கழகங்கள் - நூலகங்கள்
- களைந்தோம் - நீக்கினோம்
- தாபிப்போம் – நிலைநிறுத்துவோம்
இலக்கணக்குறிப்பு:
- புதிது புதிது, சொல்லிச் சொல்லி – அடுக்குத்தொடர்
- செந்தமிழ் – பண்புத்தொகை
- சலசல – இரட்டைக்கிளவி
- வெளியுலகில் = வெளி + உலகில்
- செந்தமிழ்= செம்மை + தமிழ்
- ஊரறியும் =ஊர் + அறியும்
- எவ்விடம் = எ + இடம்
- பாவேந்தர் பாரதிதாசனின் இயற்பெயர் கனக சுப்புரத்தினம்.
- இவர் 1891ஆம் ஆண்டு ஏப்பிரல் 29ஆம் நால் புதுவையில் பிறந்தார்.
- தந்தை கனகசபை, தாய் இலக்குமி.
- இவர் பாவேந்தர், புரட்சிக்கவிஞர் எனச் சிறப்பிக்கபடுவார்.
- குடும்ப விளக்கு, இருண்ட வீடு, தமிழியக்கம், பாண்டியன் பரிசு, அழகின் சிரிப்பு முதலியன இவர்தம் படைப்புகள்.
how to download all classes all lessons notes?will you help me?
ReplyDeletebecause naan search pannumbothu 7tha=na 1 lesson notes mattum varuthu,balance lessons notes eppadi paarikirathu?any one can tell you?
ReplyDelete