சிலப்பதிகாரம் 10 - ஆம் வகுப்பு சமச்சீர்


பொருள் கூறு
  1. கொற்கை – பாண்டிய நாட்டின் துறைமுகம்
  2. தென்னம் பொருப்பு – தென்பகுதியில் உள்ள பொதிகைமலை
  3. பலியோடு படரா – மறநெறியில் செல்லாத
  4. அடர்த்துஎழு குருதி - வெட்டப்பட்ட இடத்தினின்றும் பீறிட்டு எழும் செந்நீர்
  5. பசுந்துணி – பசிய துண்டம்
  6. தடக்கை – நீண்ட கைகள்
  7. அறுவற்கு இளைய நங்கை – பிடாரி
  8. இறைவனை ஆடல் கண்டருளிய அணங்கு - இறைவனை நடனமாடச் செய்த காளி
  9. கானகம் – காடு
  10. உகந்த – விரும்பிய
  11. தாருகன் – அரக்கன்
  12. பேர்உரம் கிழித்த பெண் - அகன்ற மார்பினைப் பிளந்த துர்க்கை
  13. செற்றம் – கறுவு
  14. செயிர்த்தனள் - சினமுற்றவள்
  15. பொற்றொழில் சிலம்பு - வேலைப்பாடுமிக்க பொற்சிலம்பு
  16. கடையகத்தாள் - வாயிலின் முன்னிடத்தாள்
  17. நீர்வார்கண் - நீரொழுகும் கண்கள்
  18. தேரா – ஆராயாத
  19. எள்ளறு - இகழ்ச்சி இல்லாத
  20. இமையவர் - தேவர்
  21. புள் – பறவை
  22. புன்கண் – துன்பம்
  23. கடைமணி - அரண்மனை வாயில்மணி
  24. ஆழி – தேர்ச்சக்கரம்
  25. ஏசா -பழியில்லா
  26. கோறல் - கொல்லுதல்
  27. கொற்றம் - அரச நீதி
  28. நற்றிறம் - அறநெறி
  29. படரா – செல்லாத
  30. வாய்முதல் – உதடு
இலக்கணக் குறிப்பு
  1. மடக்கொடி – அன்மொழித்தொகை
  2. தேரா மன்னாஏகாச் சிறப்பின,; படராப் பஞ்சவஅடங்காப் பசுந்துணி– ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்
  3. தடக்கை – உரிச்சொற்றொடர்
  4. புன்கண்பெரும்பெயர,அரும்பெறல்பெருங்குடிகடுங்கோல்செங்கோலன்நன்மொழி– பண்புத்தொகை
  5. உகுநீர்சூழ்கழல்செய்கொல்லன் – வினைத்தொகை
  6. அவ்வூர் – சேய்மைச்சுட்டு
  7. வாழ்தல் – தொழிற்பெயர்
  8. என்கால் என்பெயர்நின்னகர்என்பதி – ஆறாம் வேற்றுமைத்தொகை
  9. புகுந்து – வினையெச்சம்
  10. தாழ்ந்ததளர்ந்த – பெயரெச்சம்
  11. வருகதருககொடுக – வியங்கோள் வினைமுற்று
பிரித்தறிதல்:
  1. எள்ளறு = எள் + அறு
  2. புள்ளுறு = புள் + உறு
  3. அரும்பெறல் = அருமை + பெறல்
  4. பெரும்பெயர் = பெருமை + பெயர்
  5. அவ்வூர் = அ + ஊர்
  6. பெருங்குடி = பெருமை + குடி
  7. புகுந்தீங்கு = புகுந்து + ஈங்கு
  8. பெண்ணணங்கு = பெண் + அணங்கு
  9. நற்றிறம் = நன்மை + திறம்
  10. காற்சிலம்பு = கால் + சிலம்பு
  11. செங்கோல் = செம்மை + கோல்
நூலெழுந்த வரலாறு:
  • சேரன் செங்குட்டுவன்சீத்தலைச்சாத்தனாரோடும் இளங்கோவடிகளோடும் மலைவளம் காணச் சென்றான்.
  • அங்கிருந்த மலைவாழ் மக்கள், “வேங்கை மரத்தின்கீழ் ஒரு பெண் தெய்வத்தைப் பார்த்தோம்” என்று கூறஉடனிருந்த பெரும்புலவர் அப்பெண்ணின் வரலாற்றை யானறிவேன்” என்று கோவலன் கண்ணகி வரலாற்றைச் சுருக்கமாகக் கூறினார்.
  • அதனைக் கேட்ட இளங்கோவடிகள், “இக்கதையைச் சிலப்பதிகாரம் என்னும் பெயரால் யாம் இயற்றுவோம்” என்று கூறினார்.
  • சாத்தனாரும், “அடிகள் நீரே அருளுக” என்றார்.
நூற்கூறும் உண்மை:
  • அரசியல் பிழைத்தோருக்கு அறம் கூற்றாகும்
  • உரைசால் பத்தினியை உயர்ந்தோர் ஏத்துவர்
  • ஊழ்வினை உருத்துவந்து ஊட்டும்
நூல் குறிப்பு:
  • சிலம்பு + அதிகாரம் = சிலப்பதிகாரம்
  • கண்ணகியின் சிலம்பால் விளைந்த கதையை முதன்மையாகக் கொண்டது ஆதலின்சிலப்பதிகாரமாயிற்று.
  • இக்காப்பியம் புகார்க்காண்டம்மதுரைக்காண்டம்வஞ்சிக்காண்டம் என்னும் முப்பெரும் காண்டங்களையும் முப்பது காதைகளையும் உடையது.
  • புகார்க்காண்டம் = 10 காதை
  • மதுரைக்காண்டம் = 13 காதை
  • வஞ்சிக்காண்டம் = 7 காதை
  • இக்காப்பியம் உரையிடை இட்ட பாட்டுடைச்செய்யுள்” என அழைக்கப்படுகிறது.
  • முதற் காப்பியம்முத்தமிழ்க் காப்பியம்குடிமக்கள் காப்பியம்ஒற்றுமைக் காப்பியம்நாடகக் காப்பியம் எனச் சிலப்பதிகாரத்தைக் போற்றிப் புகழ்வார்.
  • நெஞ்சையள்ளும் சிலப்பதிகாரம் என்றோர் மணியாரம் படைத்த தமிழ்நாடு” எனப் பாரதியார் புகழ்கிறார்.
  • வழக்குரைக் காதை மதுரைக்கான்டத்தின் பத்தாவது காதை.
  • இசை நாடகமே” சிலப்பதிகாரக் கதையின் உருவம்.

1 comment:

இன்பத்தமிழ் - Class 6 Tamil New Syllabus Term 1

தமிழ் வணக்கம்   தற்கால இலக்கிய மரபாகிவிட்டது  பாரதிதாசனின் இயற்பெயர்   சுப்புரத்தினம்.  பாரதியாரின் கவிைதகள்  மீது கொண்ட  பற்றின் காரணமா...