- பொருள் என்பது ஒழுக்கமுறை. அறவழியில் பொருளீட்டிப் பல்லாரோடு பகுத்துண்டு வாழும் வாழ்வியல் நெறிமுறைகளைப் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே போற்றிக் காத்தவர், தமிழர்.
- பொருளிலக்கணம் அகம், புறம் என இருவகைப்படும்.
அகப்பொருள்:
- அன்புடைய தலைவன் தலைவி பற்றிய ஒழுக்கத்தினைக் கூறுவது அகத்திணை எனப்படும்.
- குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை, கைக்கிளை, பெருந்தினண என அகத்திணைகள் எழுவகைப்படும்.
- அவற்றுள் முதலைந்தும் அன்பின் ஐந்திணை என்று வழங்கப்படும்.
- அகப்பொருளுக்குரிய பொருள்கள் முதற்பொருள், கருப்பொருள், உரிப்பொருள் என்பன.
முதற்பொருள்:
- அகவொழுக்கம் நிகழ்தற்குக் காரணமான நிலமும் பொழுதும் முதற்பொருள் எனப்படும்.
நிலம் ஐவகைப்படும்.
ஐவகை நிலங்கள்
1. குறிஞ்சி - மலையும் மலைசார்ந்த இடமும்
2. முல்லை - காடும் காடு சார்ந்த இடமும்
3. மருதம் - வயலும் வயல்சார்ந்த இடமும்
4. நெய்தல் - கடலும் கடல்சார்த்த இடமும்
5. பாலை - மணலும் மணல்சார்ந்த இடமும்.
பொழுது பெரும்பொழுது, சிறுபொழுது என இருவகைப்படும்.
பெரும்பொழுது (ஓராண்டின் ஆறு கூறுகள்)
1. கார்காலம் - ஆவணி, புரட்டாசி
2. குளிர்காலம் - ஐப்பசி, கார்த்திகை
3. முன்பனிக்காலம் - மார்கழி, தை
4. பின்பனிக்காலம் - மாசி, பங்குனி
5. இளவேனிற்காலம் - சித்திரை, வைகாசி
6. முதுவேனிற்காலம் - ஆனி, ஆடி.
சிறுபொழுது (ஒருநாளின் ஆறு கூறுசுள்)
1. காலை - காலை 6 மணிமுதல் 10 மணிவரை
2. நண்பகல் - காலை 10 மணிமுதல் 2 மணிவரை
3. எற்பாடு - பிற்பகல் 2 மணிமுதல் 6 மணிவரை
4. மாலை - மாலை 6 மணிமுதல் இரவு 10 மனரிவரை
5. யாமம் - இரவு 10 மணிமுதல் இரவு 2 மணிவரை
6. வைகறை - இரவு 2 மணிமுதல் காலை 6 மணிவரை.
(எற்பாடு - எல்+ பாடு. எல் - ஞாயிறு, பாடு - மறையும் நேரம்.)
திணையும் பொழுதும்
|
கருப்பொருட்கள்
குறிஞ்சியின்
கருப்பொருட்கள்:
கடவுள்
|
முருகக்கடவுள்
|
மக்கள்
|
பொருப்பன், வெற்பன், சிலம்பன், குறத்தி, குறவன், கொடிச்சி, வேம்பன், கானவர்
|
புள்
|
கிளி, மயில்
|
விலங்கு
|
புலி, கரடி, யானை
|
ஊர்
|
சிறுகுடி
|
நீர்
|
அருவி நீர், சுனை நீர்
|
பூ
|
வேங்கை, குறிஞ்சி, காந்தள், குவளை
|
மரம்
|
ஆரம் (சந்தனம்), தேக்கு, அகில்ம் அசோகம், நாகம், மூங்கில்
|
உணவு
|
மலைநெல், மூங்கில் அரிசி, தினை
|
பறை
|
தொண்டகப்பறை
|
யாழ்
|
குறிஞ்சி யாழ்
|
பண்
|
குறிஞ்சிப்பண்
|
தொழில்
|
வெறியாடல், மலைநெல் விதைத்தல், தினைப்புனம் காத்தல், தேன் அழித்தல், நெல் குற்றுதல், கிழங்கு எடுத்தல், அருவி மற்றும்
சுனை நீர் ஆடல்
|
பாலையின்
கருப்பொருட்கள்:
கடவுள்
|
கொற்றவை (துர்க்கை)
|
மக்கள்
|
விடலை, காளை, மீளி, எயினர், எயிற்றியர், மறவர், மறத்தியர்
|
புள்
|
புறா, பருந்து, எருவை, கழுகு
|
விலங்கு
|
செந்நாயும் வலிமை அழிந்த யானை, புலி
|
ஊர்
|
குறும்பு
|
நீர்
|
நீரில்லாகுழி, நீரில்லாகிணறு
|
பூ
|
குரா, மரா, பாதிரி
|
மரம்
|
உழிஞை, பாலை, ஓமை, இருப்பை
|
உணவு
|
வழிப்பறி பொருள், பதியில் கவர்ந்த பொருள்
|
பறை
|
துடி
|
யாழ்
|
பாலை யாழ்
|
பண்
|
பாலைப்பண்
|
தொழில்
|
வழிப்பறி
|
முல்லையின்
கருப்பொருட்கள்:
கடவுள்
|
மாயோன் (திருமால்)
|
மக்கள்
|
குறும்பொறை நாடன், தோன்றல், மனைவி, கிழத்தி, இடையர், இடைச்சியர், ஆயர், ஆய்ச்சியர், பொதுவர், பொதுவியர், கோவலர்
|
புள்
|
காட்டுக்கோழி
|
விலங்கு
|
மான், முயல்
|
ஊர்
|
பாடி, சேரி, பள்ளி
|
நீர்
|
குறுஞ்சுனை நீர், கான்யாற்று நீர் (காட்டாறு)
|
பூ
|
குல்லை, முல்லை, பிடவம், தோன்றிப்பூ
|
மரம்
|
கொன்றை, காயா, குருந்தம்
|
உணவு
|
வரகு, சாமை, முதிரை
|
பறை
|
ஏறுகோட்பறை
|
யாழ்
|
முல்லை யாழ்
|
பண்
|
முல்லைப்பண்
|
தொழில்
|
சாமை விதைத்தல், வரகு விதைத்தல், அவற்றின் களை
கட்டல் மற்றும் அரிதல், கடா விடுதல், கொன்றை குழல் ஊதல், ஆவினம் மேய்த்தல், கொல்லேறு தழுவல், குரவை கூத்தாடல், கான்யற்று
நீராடல்.
|
மருதத்தின்
கருப்பொருட்கள்:
கடவுள்
|
வேந்தன் (இந்திரன்)
|
மக்கள்
|
மள்ளர், ஊரன், மகிழ்நன்,கிழத்தி, மனைவி, உழவர், உழத்தியர், கடையர், கடைசியர்
|
புள்
|
வண்டானம், மகன்றில், நாரை, அன்னம், பெருநாரை, கம்புள், குருகு, தாரா.
|
விலங்கு
|
எருமை, நீர்நாய்
|
ஊர்
|
பேரூர், மூதூர்
|
நீர்
|
ஆற்று நீர், கிணற்று நீர்
|
பூ
|
தாமரை, கழுனீர்
|
மரம்
|
காஞ்சி, வஞ்சி, மருதம்
|
உணவு
|
செந்நெல் அரிசி, வெண்ணெல் அரிசி
|
பறை
|
நெல்லரிகிணை, மணமுழவு
|
யாழ்
|
மருத யாழ்
|
பண்
|
மருதப்பண்
|
தொழில்
|
விழாச்செய்தல், வயற்களைகட்டல், நெல் அரிதல், கடாவிடுதல், குளம் குடைதல், புது நீராடல்
|
நெய்தலின்
கருப்பொருட்கள்:
கடவுள்
|
வருணன்
|
மக்கள்
|
சேர்ப்பன், புலம்பன், பரத்தி, நுழைச்சி, கொண்கண், துறைவன், நுளையர், நுளைச்சியர், பரதர், பரத்தியர், அளவர், அளத்தியர்
|
புள்
|
கடற்காகம், அன்னம், அன்றில்
|
விலங்கு
|
சுறா, உமண் பகடு
|
ஊர்
|
பாக்கம், பட்டினம்
|
நீர்
|
உவர்நீர் கேணி, மணற்கேணி
|
பூ
|
நெய்தல், தாழை, முண்டகம், அடம்பம்
|
மரம்
|
கண்டல், புன்னை, ஞாழல்
|
உணவு
|
மீனும் உப்பும் விற்று பெற்றவை
|
பறை
|
மீன்கோட்பறை, நாவாய் பம்பை
|
யாழ்
|
விளரி யாழ்
|
பண்
|
செவ்வ்வழிப்பண்
|
தொழில்
|
மீன்பிடித்தல், உப்பு விளைத்தல், மீன் உணக்கல், பறவை ஓட்டுதல், கடலாடுதல்
|
very use
ReplyDelete