- கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே வாளோடு முன்தோன்றிய மூத்தகுடி - புறப்பொருள் வெண்பாமாலை
- உலகில் உள்ள 235 நாடுகளில் ஏறத்தாழ 154 நாடுகளில் தமிழர்கள் உள்ளனர்.
- இருபது நாடுகளில் இலட்சத்திற்கு மேற்பட்ட தமிழர் வாழ்கின்றனர்.
- சாதுவன் வணிகம் செய்யும் பொருட்டு கடல் கடந்து சென்ற குறிப்பு மணிமேகலையில் உள்ளது.
- வாணிகம், வேலைவாய்ப்பு காரணமாகவே தமிழர்கள் அயல்நாடுகளுக்கு சென்று வந்தனர்.
- இது குறித்து செய்தி சங்க இலக்கியங்களிலும் காணப்படுகிறது.
- திரைகடலோடியும் திரவியம் தேடு என்றவர் - ஒளவையார்.
- சிங்கப்பூர், மலேசியா, பினாங்குத் தீவு ஆகிய நாடுகளில் கோவில்கள் கட்டி ஆண்டுதோறும் திருவிழாக்களைச் சிறப்பாக நடத்தி வருகின்றனர்.
- ரியூனியன் தீவில் வாழ்பவர்கள் பெரும்பாலும் தமிழர்களே.
- அவர்கள் பிரெஞ்சுகாரர்களால் ஒப்பந்தக் கூலிகளாக குடியர்தப்பட்டனர்
- இலங்கையில் வாழும் தமிழர்களில் 95 விழுக்காட்டினர் தொடக்கப் பள்ளி முதல் பல்கலைக்கழகம் வரை தமிழிலேயே கல்வி கற்கின்றனர்.
- இலங்கை, சிங்கப்பூர், மலேசியா ஆகிய நாடுகளில் தமிழ், ஆட்சிமொழியாகத் திகழ்கிறது.
- தமிழர் இலங்கை ,சிங்கப்பூர் ,மலேசியா முதலிய நாடுகள் பலவற்றில் உள்ளாட்சி தேர்தல்களில் வெற்றிபெற்று உறுப்பினர் , அமைச்சர் எனப் பல பதவிகள் வகித்து சிறப்பாக தொண்டாற்றி வருகின்றனர் .
- இந்தியாவில் மட்டுமல்லாமல் சிங்கப்பூர் மலேசியா ஆகிய நாடுகளில் குடியரசுத் தலைவர்களாகவும் தமிழர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர் என்பது தமிழினத்துக்கு பெருமை சேர்க்கிறது .
- உலகெங்கும் அச்சு ஒலி, ஒளி ஊடகங்களை தமிழர் நடத்தி வருகின்றனர்
உலகளாவிய தமிழர்- 9 ஆம் வகுப்பு சமச்சீர்
Subscribe to:
Posts (Atom)
இன்பத்தமிழ் - Class 6 Tamil New Syllabus Term 1
தமிழ் வணக்கம் தற்கால இலக்கிய மரபாகிவிட்டது பாரதிதாசனின் இயற்பெயர் சுப்புரத்தினம். பாரதியாரின் கவிைதகள் மீது கொண்ட பற்றின் காரணமா...
-
* தமிழை பக்தி மொழி (இரக்கத்தின் மொழி) என்று கூறியவர் மறைத்திரு தனிநாயக அடிகள். * சமய மறுமலர்ச்சிக் காலம் என்பதும், பக்தி இலக்கியக் க...
-
சொற்பொருள்: அகழ்வாரை – தோண்டுபவரை இகழ்வார் - இழிவுபடுத்துவோர் தலை – சிறந்த பண்பு பொறுத்தல் – பொறுத்துக்கொள்ளுதல் இறப்பினை - பிறர...

No comments:
Post a Comment