இளமைப் பருவம்:
- விருதுநகர் மாவட்டத்தில் குமாரசாமி, சிவகாமி தம்பதியருக்கு மகனாய் 1903 ஆம் ஆண்டு சூலைத் திங்கள் 15 ஆம் நாள் பிறந்தார்.
- நாட்டாண்மைக்காரராக இருந்த காமராசரின் தாத்தா, பல சமயங்களில் பஞ்சாயத்துக் கூட்டங்களுக்குத் தன்பெயரன் காமராசரையும் அழைத்துச் செல்வார்.
- திண்ணைப் பள்ளியில் தமிழ் எழுத்துக்களைக் கற்று, அதன்பிறகு ஓர் ஆண்டு தமிழ்ப்பாடம் கற்றார்.
- அவருக்கு பன்னிரண்டு வயதிலேயே கல்வியில் நட்டமில்லாமல் போயிற்று.
- காமராசர் நாள்தோறும் செய்தித்தாள்களை படித்தும், அரசியல் கூட்டங்களில் தலைவர்களின் சொற்பொழிவுகளைக் கேட்டும் தம்முடைய அரசியல் அறிவை வளர்த்துக் கொண்டார்.
- "மெய்கண்டான் புத்தகசாலை" என்ற நூலை நிலையத்திற்கு சென்று இலெனின், கரிபால்டி. நெப்போலியன் போன்ற தலைவர்களின் வாழ்க்கை வரலாற்றை படித்து திறமையாக பேசவும் வாதம் புரியவும் கற்றுக் கொண்டார்.
- இளம் வயதிலேயே தேசிய இயக்கமான காங்கிரசில் சேர்ந்தார்.
- சைமன் குழு எதிர்ப்பு, உப்புச் சத்தியாகிரகம், வெள்ளையனே வெளியேறு முதலிய போராட்டங்களில் கலந்துகொண்டு பதினோராண்டுகள் சிறையில் கழித்தார்.
- அவரது தன்னலமற்ற உழைப்பைக் கண்டு தலைவர் சத்தியமூர்த்தி அவரை கட்சியின் செயலாளராக நியமித்தார்.
- காமராசரின் அரசியல் குரு சத்தியமூர்த்தி.
- 1937இல் சட்டப்பேரவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
- 1939 ஆம் ஆண்டு தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
- 12 ஆண்டுகள் அப்பதவியில் செல்வாக்குமிக்க தலைவராகத் திகழ்ந்தார்.
- 1945இல் பிரகாசம், 1947இல் ஒமந்தூர் இராமசாமி மற்றும் 1949இல் குமாரசாமி ஆகியோர் முதல்வராகப் பதவியேற்பதற்குக் காரணமாக இருந்தார்.
- நேருவின் மறைவுக்குப்பின் லால்பகதூர் சாஸ்திரியையும், பகதூர் மறைவுக்கு பின்பு இந்திரா காந்தியையும் நாட்டின் பிரதமராக ஆக்கியதில் இவர் பெரும்பங்காற்றினார்.
- பலர் ஆட்சி அமைக்க இவர் காரணமாக இருந்ததால் இவர் "தலைவர்களை உருவாக்குபவர்" என அழைக்கப்பட்டார்.
- 1954-இல் இராஜாஜி முதல்வர் பதவியில் இருந்து விலகியதும் காமராசர் அப்பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
- 1963 இல் தாமாகப் பதவி விலகும்வரை அப்பதவியில் திறம்படச் செயல்பட்டார்.
- காமராசர் ஆட்சிக் காலத்தில் முன்னாள் குடியரசுத் தலைவர் ஆர்.வெங்கட்ராமன் தொழில்துறை அமைச்சராகவும், சி.சுப்பிரமணியம் கல்வியமைச்சராகவும் பணியாற்றினார்.
- காமராசர் முதல்வராக இருந்த போது இரண்டாவது, மூன்றாவது ஐந்தாண்டுத் திட்டங்கள் நிறைவேற்றப்பட்டன.
- கிண்டி, அம்பத்தூர், ராணிப்பேட்டை முதலிய இடங்களில் பெரிய தொழிற்பேட்டைகளும், மாவட்டந்தோறும் சிறிய தொழிற்பேட்டைகளும் அமைக்கப்பட்டன.
- இவர் காலத்தில் கூட்டுறவு இயக்கம் சிறப்பாக நடைபெற்றது.
- நெய்வேலி நிலக்கரிச் சுரங்கத் தொழிற்சாலை, இந்துஸ்தான் போட்டோ பிலிம் தொழிற்சாலை, கிண்டி அறுவைசிகிச்சைக் கருவித் தொழிற்சாலை,சர்க்கரை ஆலை, சிமெண்ட் தொழிற்சாலை, பெரம்பூர்த் தொடர்வண்டிப் பெட்டித் தொழிற்சாலை, மேட்டூர் காகிதத் தொழிற்சாலை முதலியன இவரது காலத்தில் தொடங்கப்பெற்றன.
- காமராசர் காலத்தில் கட்டாயக் கல்வி நடைமுறைப்படுத்தப்பட்டது.
- "தெருதோறும் தொடக்கப்பள்ளி, ஊர்தோறும் உயர்நிலைப்பள்ளி" என்பதே நோக்கமாக அமைந்தது.
- பள்ளி வேலைநாள்களை 180 இல் இருந்து 200 ஆக உயர்த்தினார்.
- தொடக்கப்பள்ளியில் மதிய உணவுத் திட்டம் இவரால் தொடங்கப்பட்டது.
- ஈராண்டுகளில் பள்ளிச் சீரமைப்பு மாநாடுகள் 133 நடத்தி, பல கோடி ரூபாய் மதிப்புள்ள நன்கொடைகள் பெற்று பள்ளிகளுக்கு தேவையான அடிப்படை பொருட்கள் வாங்கப்பட்டன.
- மருத்துவக்கல்லூரி முதலான தொழிற்கல்லூரிகளில் பயிலும் ஏழை மாணவர்களுக்கு வட்டியில்லாக் கடனளிக்க ஏற்பாடு செய்தார்.
- தஞ்சாவூர்ப் பண்ணையாள் பாதுகாப்புச் சட்டத்தை திருத்தி, சாகுபடி செய்யும் தொழிலாளிக்கு அறுபது விழுக்காடு பங்கு கிடைக்க வழிவகை செய்தார்.
- நிலசீர்திருத்தம் இவரால் கொண்டுவரப்பட்டது.
- நில உச்ச வரம்பு முப்பது ஏக்கர் எனக் குறைக்கப்பட்டது.
- சிறுதொழிலாளர் நலத்திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டன.
- மக்கள் நலத்திட்டங்களில் ஓய்வூதியம் முக்கியமானது.
- 1962 ஆம் ஆண்டு சீனப்படையெடுப்புக்கு பின், காங்கிரஸ் கட்சியின் செல்வாக்கு சரியத் தொடங்கியது.
- கட்சியை வலுப்படுத்த மூத்த தலைவர்கள் அமைச்சர் பதவியில் இருந்து விலகி கட்சிப்பணியில் ஈடுபட வேண்டும் எனக் காமராசர் திட்டம் ஒன்றை கொண்டுவந்தார். அத்திட்டமே "காமராசர் திட்டம்" ஆகும்.
- முதலில் தாமே முதல்வர் பதவியைவிட்டு விலகிக் கட்சிப்பணிக்குத் திரும்பினார்.
- புவனேசுவர் நகரில் 1963 ஆம் ஆண்டில் கூடிய காங்கிரஸ் மாநாட்டில் காமராசர் அகில இந்தியக் காங்கிரஸ் தலைவராகப் பதவியேற்றார்.
- நாடெங்கும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு கட்சிப்பூசல்களைப் போக்கி, மக்களிடம் நேரடித் தொடர்புகொண்டார்.
- இந்தியப் பிரதமர் நேரு 1964 ஆம் ஆண்டு காலமானார்.
- சாஸ்திரி எதிர்பாராதமுறையில் 1966 ஆம் ஆண்டு தாஸ்காண்டில் உயிரிழந்தார். இந்த இரு சமயங்களிலும்ல் புத்தி சாதுர்யமாக செயல்பட்டு பிரதமரை தேர்வு செய்தார்.
- அனைத்துக் கட்சியினராலும் மதிக்கப்பெறும் பெருந்தலைவராக உயர்ந்தார்.
- காமராசரக்கு நடுவணரசு "பாரத ரத்னா விருது (இந்திய மாமணி)" அளித்துச் சிறப்பித்து,
- நாடாளுமன்றத்தில் இவருக்கு ஆளுயர வெண்கலச்சிலையை நிறுவியது.
- தமிழக அரசு இவரின் பெயரால்" மதுரை காமராசர் பல்கலைக்கழகம்" எனப் பெயர் சூட்டியது.
- கன்னியாகுமரியில் காமராசர் மணி மண்டபம் கட்டப்பட்டது.
- சென்னை மெரினா கடற்கரைச் சாலையில் சிலை அமைத்து சிறப்பித்தது.
- காமராசர் வாழ்ந்த சென்னை இல்லம் நினைவு இல்லமாக ஆக்கப்பட்டது.
- அவரின் விருதுநகர் இல்லமும் அரசுடைமை ஆக்கி நினைவு இல்லமாக்கப்பட்டது.
- தேனாம்பேட்டையில் காமராசர் அரங்கம் நிறுவப்பட்டது.
- காமராசர் பிறந்த நாளான சூலை 15 ஆம் நாள் ஆண்டுதோறும் "கல்வி வளர்ச்சி நாளாக" தமிழ அரசு அறிவித்துள்ளது.
- இவரை "கல்விக் கண் திறந்தவர்" எனத் தமிழுலகம் போற்றுகிறது.
- 1972 ஆம் ஆண்டு காந்தியடிகளின் பிறந்த நாளான அக்டோபர் இரண்டாம் நாள் இவ்வுலக வாழ்வை நீத்தார்.
- தன்னலமற்ற தலைவர்
- கர்மவீரர்
- கல்விக்கண் திறந்த முதல்வர்
- ஏழைப்பங்காளர்
காமராஜர் மறைவு 1975 oct 02
ReplyDelete