தமிழ்விடு தூது - 10 ஆம் வகுப்பு சமச்சீர்


  அரியா சனமுனக்கே யான லுனக்குச்
   சரியாரு முண்டோ தமிழே - விரிவார்
   
   திகழ்பா வொருநான்குஞ் செய்யுள்வரம் பாகப்
   புகழ்பா வினங்கண்மடைப் போக்கா - நிகழ்வே
   
   நல்லேரி னாற்செய்யு ணாற்கரணத் தேர்பூட்டிச்
   சொல்லே ருழவர் தொகுத்தீண்டி - நல்லநெறி
   
   நாலே விதையா நனிவிதைத்து நாற்பொருளும்
   மேலே பலன்பெறச்செய் விக்குநாள் - மேலோரிற்
   
   பாத்தனதாக் கொண்டபிள்ளைப் பாண்டியன் வில்லியொட்டக்
   கூத்தனிவர் கல்ல்லாது கோட்டிகொளும் - சீத்தையரைக்
   
   குட்டிச் செவியறுத்துக் கூட்டித் தலைகளெல்லாம்
   வெட்டிக் களைபறிக்க மேலாய்த்தூர் - கட்டி
   
   வளர்ந்தனைபான் முந்திரிகை வாழைக் கனியாய்க்
   கிளர்ந்தகரும் பாய்நாளி கேரத் - திளங்கனியாய்த்
   
   தித்திக்குந் தெள்ளமுதாய்த் தெள்ளமுதின் மேலான
   முத்திக் கனியேயென் முத்தமிழே - புத்திக்குள்
   
   உண்ணப் படுந்தேனே யுன்னோ டுவந்துரைக்கும்
   விண்ணப்ப முண்டு விளம்பக்கேள்

சொற்பொருள்:

  • அரியாசனம் – சிங்காதனம்
  • பா ஒரு நான்கு – வெண்பா, ஆசிரியப்பா, கலிப்பா, வஞ்சிப்பா
  • வரம்பு – வரப்பு
  • ஏர் – அழகு
  • நார்கரணம் – மனம், புத்தி, சித்தம், அகங்காரம்.
  • நெறிநாலு –பாஞ்சாலம்(சித்திரகவி),மாகதம்(வித்தாரகவி)                         வைதருப்பம்(ஆசுகவி),கௌடம்(மதுரகவி),
  • நாற்பொருள் – அறம், பொருள், இன்பம், வீடு
  • கோட்டிகொளும் - கூட்டமாகக் கூடும்
  • சீத்தையர் – கீழானவர், போலிப்புலவர்
  • தூர்கட்டி - பயிர் அடி பருந்து வளர்தல்
  • நாளிகேரம் – தென்னை
இலக்கணக்குறிப்பு:
  • செவியறுத்து - இரண்டாம் வேற்றுமைத்தொகை
பிரித்தறிதல்:
  • நாற்கரணம் = நான்கு + கரணம்
  • காரணத்தேர் = கரணத்து + ஏர்
  • நாற்பொருள் = நான்கு + பொருள்
  • செவியறுத்து - செவி + அறுத்து
  • இளங்கனி = இளமை + கனி
  • விண்ணப்பமுண்டு = விண்ணப்பம் + உண்டு
நூற்குறிப்பு:
  • தூது 96 வகை சிற்றிலக்கியங்களுள் ஒன்று.
  • கலிவெண்பாவில் உயர்திணைப் பொருளையோ அஃறினைப்பொருளையோ தூது அனுபுவதாகப் பாடுவது தூது இலக்கியம்.
  • இந்நூலின் ஆசிரியர் பெயர் தெரியவில்லை

2 comments:

இன்பத்தமிழ் - Class 6 Tamil New Syllabus Term 1

தமிழ் வணக்கம்   தற்கால இலக்கிய மரபாகிவிட்டது  பாரதிதாசனின் இயற்பெயர்   சுப்புரத்தினம்.  பாரதியாரின் கவிைதகள்  மீது கொண்ட  பற்றின் காரணமா...