பிறப்பு
- பிறப்பு: 22.12.1887
- ஊர்: ஈரோடு
- பெற்றோர்: சீனுவாசன் - கோமளம்
- இவர் பிறந்து மூன்று ஆண்டுகள் வரை பேசும் திறன் இல்லாமல் இருந்தார்.
- தனது தாயாரின் தந்தை ஊரான காஞ்சிபுரத்தில் திண்ணை பள்ளியில் படித்தார்.
- இராமனுஜனின் தாத்தாவின் பணிநிமித்தம் "கும்பகோணம்" வந்தால், பின்பு அவரின் கல்வி கும்பகோணத்தில் தொடர்ந்தது.
- ஒருமுறை வகுப்பில் அவரின் ஆசிரியர் "பூஜ்யத்திற்கு மதிப்பில்லை" என கூற, அதற்கு இராமானுஜன் பூஜ்யத்திற்கு மதிப்புண்டு என்று விளக்கி எடுத்துரைத்தார்.
- இராமானுஜர் தமது சிறுவயது முதலே கணிதப்பாடத்தில் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தார்.
- 1880இல் இலண்டன் நகரில் "கார்" என்பவர் பதினைந்தாவது வயதிலேயே கணிதத்தில் சிறந்து விளங்கியதுப்போல, இவரும் சிறு வயதிலேயே கணிதத்தில் சிறந்து விளங்கினார்.
- தந்தை சீனுவாசனின் முயற்சியால் இவருக்கு சென்னை துறைமுகத்தில் "எழுத்தர்" சிறந்து விளங்கினார்.
- தான் கண்டுபிடித்த தேற்றங்களையும், எடுகோள்களையும் கேள்விகளாகத் தொகுத்து இந்தியக் கணிதக் கழகப் பத்திரிகைக்குச் சென்னை துறைமுகத்தின் தலைமை பொறியாளர் ஃபிரான்சிஸ் ஸ்ப்ரிங் என்பார் மூலம் அனுப்பினார். "பெர்னெளலிஸ் எண்கள்" எனும் தலைப்பில் வெளியான அவரது கட்டுரை, மிகந்த வரவேற்பை பெற்றது.
- தனது கண்டுப்பிடிப்புகளை இந்தியக் கணிதக் கழகப் பத்திரிகைக்கு இராமானுஜம் ஃபிரான்சிஸ் ஸ்பிரிங் மூலம் அனுப்பினார்
- பெர்னெளலிஸ் எனும் தலைப்பில் வெளியான இராமானுஜத்தின் கட்டுரை கணித வல்லுநர்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றது.
- இராமானுஜம் சென்னை பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி மாணவராகச் சேர்ந்தார்.
- இராமானுஜம் தனது கண்டுபிடிப்புகள் ஆராய்ச்சிகள் ஆகியவற்றை விவரமாக எழுதி இங்கிலாந்திலுள்ள கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகப் பேராசிரியர் ஹார்டி என்பவருக்கு கடிதமாக அனுப்பினார்.
- இலண்டன் கேம்பிரிட்ஸ் பல்கலைக்கழகத்துடன் இணைந்துள்ள கல்லூரியின் பெயர் - திரினிட்டி கல்லூரி.
- கணிதத் திறமையால் விஞ்ஞான உலகினைப் பிரமிக்கச் செய்து வரலாற்றில் குறிப்பிடத்தக்க ஓர் இடத்தைப் பெற்ற பிறவிக் கணித மேதை என்று கூறியவர் - இந்திரா காந்தி.
- ஜாகோபி ஜெர்மனி நாட்டில் வாழ்ந்தார்
- ஜாகோபி 19 ஆம் நூற்றாண்டின் கணிதமேதை
- ஆய்லராக இல்லாவிட்டாலும் இராமானுஜன் குறைந்தபட்சம் ஒரு ஜாகோபி என்று கூறியவர் - லிட்டில் வுட்டு
- ஆய்லர் சுவிட்சர்லாந்து நாட்டைச் சேர்ந்தவர்
- ஆய்லர் 18 ஆம் நூற்றாண்டின் இணையற்ற கணிதமேதை ஆவார்.
- திரினிட்டி கல்லூரியின் பேராசிரியர் ஈ.எச். நெவில் சென்னைப் பல்கலைக்கழகத்திற்குச் சொற்பொழிவாற்ற வந்தார்.
- இராமானுஜம் எந்த ஆண்டு 1914 ஆம் ஆண்டு மார்ச் 17 ஆம் நாள் இங்கிலாந்துக்குப் புறப்பட்டார்.
- திரினிட்டி கல்லூரியில் 18.04.1914 ஆம் ஆண்டு ஆராய்ச்சி மாணவராக சேர்ந்தார்.
- கிங்ஸ் கல்லூரியின் கணிதப் பேராசிரியர் - ஆர்தர் பெர்சி.
- இராமானுஜத்தின் வழிமுறைகளை நூலாக வெளியிட்டு அவருக்கு பெருமை சேர்ந்தவர் - ஹார்டி
- ஹார்டி ரோசரஸ் இராமானுஜன் கண்டுபிடிப்புகள் என்னும் தலைப்பில் இராமானுஜத்தின் வழிமுறைகளை நூலாக வெளியிட்டார்.
- இங்கிலாந்துப் பல்கலைக்கழகத்தில் உறுப்பினராக இராமானுஜம் 1918 ஆண் ஆண்டு சேர்க்கப்பட்டார்.
- இங்கிலாந்து பல்கலைக்கழகம் இராமானுஜத்திற்கு எஃப்.ஆர்.எஸ் பட்டம் வழங்கியது.
- எஃப்.ஆர்.எஸ் பட்டம் பெற்ற இராமானுஜத்தை திரினிட்டி கல்லூரி பாராட்டிச் சிறப்பித்தது.
- ஹார்டியின் பரிந்துரையின் பேரில் சென்னைப் பல்கலைக் கழகமும் 250 பவுண்டுத் தொகையை ஐந்து ஆண்டுக்கும் கொடுக்க முன்வந்தது.
- இராமானுஜம் 50 பவுண்டைத் தம் பெற்றோருக்கும் 200 பவுண்டை ஏழை எளிய மாணவர்களுக்கும் வழங்கி வருமாறு கடிதம் எழுதினார்.
- இராமானுஜத்தைப் பார்க்க வந்த ஹார்டி 1729 என்ற எண் கொண்ட வாடகை மகிழுந்தில் வந்தேன் எனக் கூறினார்.
- இராமானுஜம் இந்தியாவிற்கு திரும்பி வந்த ஆண்டு - 1919 ஆம் ஆண்டு மார்ச் 27ம் தேதி.
- இராமானுஜம் மறைந்த ஆண்டு 1920 ஆம் ஆண்டு ஏப்ரல் 26ம் தேதி.
- இராமானுஜம் சாதாரண மனிதரல்லர் அவர் இறைவன் தந்த பரிசு என்று கூறியவர் - பேராசிரியர் ஈ.டி. பெல்
- இராமானுஜன் முதல்தரமான கணித மேதை என்று கூறியவர் - பேராசிரியர் சூலியன் கக்சுலி
- இராமானுஜத்தின் குறிப்பேடுகளில் 3000 முதல் 4000 தோற்றங்கள் இருந்தன.
- 1957 ஆம் ஆண்டு டாடா அடிப்படை ஆராய்ச்சி நிலையம் இராமானுஜத்தின் தேற்றங்களை ஒளிப்படம் எடுத்து நூலாக வெளியிடப்பட்டுள்ளது.
- 1962 டிசம்பர் 22 ஆம் தேதி இராமானுஜத்தின் 75வது பிறந்த நாள் ஆகும்.
- இராமானுஜத்தின் 75வது பிறந்த நாளை முன்னிட்டு நடுவணரசு பதினைந்து காசு அஞ்சல்தலை இருத்தைந்து இலட்சம் வெளியிட்டது.
- சென்னையில் 03.10.1972 ஆம் ஆண்டு அன்றைய முதல்வர் மு.கருணாநிதி அவர்களால் இராமானுஜம் கணித அறிவியல் நிறுவனம் திறந்து வைக்கப்பட்டது.
- சென்னை துறைமுகம் சார்பில் புதிதாக வாங்கிய குடிநீர்க்கப்பலுக்கு, சீனுவாச இராமானுஜம் எனப் பெயர் சூட்டப்பட்டது.
- ரிச்சர்ட்டும் ஆஸ்லேயும் இணைந்து 1984 ஆம் ஆண்டு இராமானுஜத்தின் மார்பளவு வெண்கலச் சிலையை இந்தியாவிற்குக் கொண்டு வந்து வழங்கினர்.
- கணிதக் குறிப்புகள் அடங்கிய எத்தனை குறிப்பேடுகளையும் ஆராய்ச்சிக் கட்டுரைகளையும் இராமானுஜம் விட்டுச் சென்றுள்ளார்.
- இராமானுஜன் எண்: 1729 என்பதை இராமானுஜன் எண் என்பர்.
No comments:
Post a Comment