9-வது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு ஜனவரி 29-ம் தேதி மலேசியாவில் தொடங்குகிறது.
இதுகுறித்து இந்திய மற்றும் தென்கிழக்காசிய நாடுகளுக்கான மலேசிய சிறப்புத் தூதரும், மாநாட்டின் தலைவருமான டத்தோ சாமிவேலு சென்னையில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:
9-வது உலகத் தமிழ் மாநாடு ஜனவரி 29-ம் தேதி தொடங்கி பிப்ரவரி 1-ம் தேதி வரை 3 நாள்கள் நடைபெறுகிறது.
27 நாடுகளில் இருந்து 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தமிழறிஞர்கள் இந்த மாநாட்டில் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கிறேன். இரு தினங்களுக்கு முன்பு தமிழக முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தை நேரில் சந்தித்து மாநாட்டுக்கு அழைத்திருக்கிறேன்.
இந்த மாநாட்டுக்கான ஆய்வுக் கட்டுரைகள் தமிழறிஞர்களிடமிருந்து வரவேற்கப்படுகிறது. ஆய்வுக் கட்டுரைகளை imtcindia@yahoo.com என்ற இ-மெயில் முகவரிக்கு டிசம்பர் 30-ம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும். மொத்தம் 29 வகையான தலைப்புகளில் ஆய்வுக் கட்டுரைகளை சமர்ப்பிக்கலாம். இதில் சிறந்த 4 கட்டுரைகளுக்கு பரிசுகளும் வழங்கப்படும். ஆய்வுக் கட்டுரை தலைப்புகள் மற்றும் மாநாடு குறித்த விவரங்களை www.91csts2014.um.edu.my என்ற இணையதளத்தில் பார்த்து தெரிந்துகொள்ளலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
நன்றி
தி இந்து
No comments:
Post a Comment