23 November, 2014

இன்றைய கேள்விகள் - 23/11/14

1.தூற்றும் -பிரித்தெழுதுக
A.தூற்று + உம்
B.தூற்றி +உம் 
C.தூ + ஊற்றும் 
D.தூற்+றி+உம்

2.பொருத்துக 
சொல்               -           பொருள் 
a.தொடை                 1.பெண்யானை 
b.நறை                       2 .மாலை 
c.பிடி                           3.தேனீ
d.மதுகரம்                 4.  தேன்
         a         b        c         d
A.    2          4       3         1
B.    2          1       3         4
C.    3          2       1         4
D.    2          4       1         3

3.'மேழி பிடிக்கும் கை '   மேழி என்பதன் பொருள் யாது ?
A.வேல் 
B.வில் 
C.ஏர்
D.செங்கோல் 

4. கீழ்க்கண்டவற்றில் பொருந்தா இணையைத் தேர்க 
A.கனகம்            -  பொன் 
B.கடுகி                -  தாமதமாக 
C.நிவேதனம்    -  படையலமுது 
D.திரு                  -  செல்வம் 

5.பொருத்துக 
           நூல்                       -             ஆசிரியர்              
a.திரிகடுகம்                         1.பெருவாயின் முள்ளியார் 
b.பழமொழி                         2 .காரியாசான் 
c.ஆசாரக்கோவை            3.நல்லாதனார் 
d.சிறுபஞ்சமூலம்             4.  மூன்றுறையறையனார்
         a         b        c         d
A.    2          3       1         4
B.    3          4       1         2
C.    4          2       3         1
D.    4          3       2         1

6.சங்கரதாஸ் சுவாமிகள் ஒரே இரவில் எழுதிய நாடக நூல் 
A.வள்ளிதிருமணம் 
B.சதிஅனுசுயா 
C.வீர அபிமன்யு 
D.பவளக்கொடி
(http://www.tamilvu.org/courses/diploma/d041/d0413/html/d0413557.htm
சங்கரதாஸ் சுவாமிகள்
இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் நாடகப்பணி புரிந்து, தமிழ் நாடகத்தைச் சிறக்கச் செய்த துறவி இவர். தெருக்கூத்து வகை புகழ்பெற்றுத் திகழ்வதைப் பார்த்து அதே பாணியில் நாடகங்களை எழுதி மேடையேற்றிப் புகழ் பெற்றார். இவருடைய நாடகங்களில் பாடல்கள் மிகுதியாக இருக்கும். பாடல், பேச்சு ஆகிய இரண்டும் செந்தமிழ் நடையில், இலக்கணப் பிழையின்றிக் காணப்படும். அவை புராணக் கதைகளை ஒட்டியவை; நீதி போதனை மிக்கவை. பிரகலாதன், சிறுத்தொண்டர், பவளக்கொடி, லவகுசா போன்ற நாற்பது நாடகங்களை எழுதி இவர் மேடையேற்றியுள்ளார்.
நூற்றுக்கு மேற்பட்ட பாடல்களடங்கிய ‘அபிமன்யு’ நாடகத்தை ஒரே இரவில் எழுதினார் . இவர் காலத்திற்குப் பிறகு சதி சுலோசனா, சதி அனுசூயா, அபிமன்யு சுந்தரி போன்ற சில நூல்கள் மட்டுமே அச்சிடப்பட்டுள்ளன. இவரை இன்றைய ‘தமிழ் நாடகத் தந்தை’ என்று போற்றுகிறார்கள்.
)

7. 'புலவரேறு ' என்று போற்றப்பட்டவர் 
A.நாமக்கல் கவிஞர் 
B.கவிமணி 
C.அ . வரதநஞ்சையப் பிள்ளை 
D.வேதநாயக சாஸ்திரியார் 

8.' பகட்டு ' என்பதன் எதிர்ச்சொல் என்ன ?
A.எளிமை 
B.ஆடம்பரம் 
C.இனிமை 
D.உரிமை 

9. ' புகலு தற்கரி தடவியுண் டவ்வழி பொருந்தி ' 
     ' அடவி '- எதிர்ச்சொல் காண்க 
A.அடவி    X காடு 
B.அடவி   X   நாடு 
C.அடவி   X  மண் 
D.அடவி  X  விண் 

10.வழூஉச் சொல்லைக் கண்டெழுதுக 
A.அருகில் 
B.ஆற்றங்கரை 
C.சுவற்றில் 
D.எண்ணெய்

No comments:

Post a Comment

இன்பத்தமிழ் - Class 6 Tamil New Syllabus Term 1

தமிழ் வணக்கம்   தற்கால இலக்கிய மரபாகிவிட்டது  பாரதிதாசனின் இயற்பெயர்   சுப்புரத்தினம்.  பாரதியாரின் கவிைதகள்  மீது கொண்ட  பற்றின் காரணமா...