30 October, 2014

அழ. வள்ளியப்பா


உயர்ந்த கருத்துக்களுக்கும் , எளிய வார்த்தைகளுக்கும், ஓசை நயத்துக்கும் சொந்தக்காரர் கவிஞர் அழ. வள்ளியப்பா. குழந்தை இலக்கியங்கள் படைத்த மிக முக்கியமான கவிஞர். இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கான பாடல்களை எழுதியவர்.

’அம்மா இங்கே வா... வா...

ஆசை முத்தம் தா... தா...’

‘மாம்பழமாம் மாம்பழம்...

மல்கோவா மாம்பழம்...’
‘கை வீசம்மா கை வீசு...

 கடைக்குப் போகலாம் கை வீசு...’

 - தலைமுறைகள் தாண்டினாலும் மாறாத குழந்தைகளின் மனநிலையைப் புரிந்து கொண்டு இது போன்ற எண்ணற்ற எளிய பாடல்களை எழுதியவர் குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பா. 

பிறப்பு: புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள இராயவரத்தின் நகரத்தார் சமூகத்தைச் சேர்ந்த அழகப்ப செட்டியார் - உமையாள் ஆச்சி தம்பதியருக்கு மகனாக 07.11.1922 பிறந்தார். பெற்றோர் இவருக்குச் சூட்டிய பெயர் வள்ளியப்பன்

இதழ் ஆசிரியர் பணி: 1951 முதல் 1954 வரை பூஞ்சோலை என்ற இதழுக்கும், ஒய்வு பெற்ற பின்பு 1983 முதல் 1987 வரை கல்கி வெளியீடான கோகுலம் இதழில் ஆசிரியராக பணியாற்றினார்.

குழந்தை எழுத்தாளர் சங்கம்: குழந்தை எழுத்தாளர்கள் பலரைத் திரட்டி 1950-ல் குழந்தை எழுத்தாளர்கள் சங்கம் என்ற அமைப்பை உருவாக்கினார்.

எழுதிய நூல்கள்:

மலரும் உள்ளம் - 1

பாப்பாவுக்குப் பாட்டு

சின்னஞ்சிறு பாடல்கள்

சுதந்திரம் பிறந்த கதை

ஈசாப் கதைப் பாடல்கள்

ரோஜாச் செடி

உமாவின் பூனைக் குட்டி

அம்மாவும் அத்தையும்

மணிக்குமணி

மலரும் உள்ளம் - 2

கதை சொன்னவர் கதை

மூன்று பரிசுகள்

எங்கள் கதையைக் கேளுங்கள்

நான்கு நண்பர்கள்

பர்மாரமணி

எங்கள் பாட்டி

மிருகங்களுடன் மூன்று மணி

நல்ல நண்பர்கள்

பாட்டிலே காந்தி கதை (பாடல் தொகுதி)

குதிரைச் சவாரி

நேரு தந்த பொம்மை

நீலாமாலா

பாடிப் பணிவோம் (பாடல் தொகுதி)

வாழ்க்கை விநோதம்

சின்னஞ்சிறு வயதில்

பெரியோர் வாழ்விலே சுவையான நிகழ்ச்சிகள்

No comments:

Post a Comment

இன்பத்தமிழ் - Class 6 Tamil New Syllabus Term 1

தமிழ் வணக்கம்   தற்கால இலக்கிய மரபாகிவிட்டது  பாரதிதாசனின் இயற்பெயர்   சுப்புரத்தினம்.  பாரதியாரின் கவிைதகள்  மீது கொண்ட  பற்றின் காரணமா...