- கோவூர் கிழார் சங்ககாலப் புலவர்களில் ஒருவர்.உறையூருக்கு அருகில் உள்ள கோவூரில் வேளாளர் மரபில் பிறந்தார் .
- மன்னர்கள் பகைமையின்றிக் கூடிவாழ இவர் பெரிதும் பாடுபட்டவர்.
- போரை விரும்பாதவர். சங்கப்புலவர்களில் சகோதரச் சண்டை பற்றிய குறிப்புகளைத் தந்திருப்பது கோவூர் கிழாரின் பாடல்கள்
- கோவூர் கிழார், சோழ மன்னர்களைப் பற்றியே அதிகம் பாடியுள்ளார்.
- நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, திருவள்ளுவமாலை ஆகியவற்றில் இவரின் 18 பாடல்கள் உள்ளன
- நலங்கிள்ளி உறையூரை முற்றியிருந்தான்.
- நெடுங்கிள்ளி கோட்டையை அடைத்துக்கொண்டு உள்ளே இருந்தான்.
- கோவூர் நெடுங்கிள்ளிக்கு அறிவுரை கூறினார். போரிடுபவன் சேரனோ, பாண்டியனோ அல்லன்.
- சோழன். யார் தோற்றாலும் சோழனுக்குத் தோல்வி. இதனைக் கண்டு பகைவர் நகைப்பர் என அறிவுரை கூறினார்.
- இதனைக் கேட்ட நெடுங்கிள்ளி, நலங்கிள்ளிக்கு விட்டுக்கொடுத்தான் எனத் தெரியவருகிறது.
- நலங்கிள்ளியிடம் இருந்த இளந்தத்தன் என்னும் புலவர் முற்றுகையின்போது உறையூருக்கு வந்தார.
- ஒற்று வந்தார் என்று நெடுங்கிள்ளி அவரைக் கொல்லப் புகுந்தார். புலவர் பிறருக்குத் தீங்கு செய்யத் தெரியாதவர் எனக் கோவூர் கிழார் விளக்கிப் புலவர் இளந்தத்தனைக் காப்பாற்றினார்.
- சோழன் குளமுற்றத்துத் தூஞ்சிய கிள்ளிவளவன் மலையமான் மக்களை யானைக் காலின் இட்டுக் கொல்லச் சென்றான்.
- யானையைக் கண்டவுடன் அழுகையை மறந்து சிரிக்கும் குழந்தை உள்ளத்தை எடுத்துச் சொல்லி கோவூர் கிழார் குழந்தைகளைக் காப்பாற்றினார்.
No comments:
Post a Comment