சிறந்த பத்து
1.ஆர்கலி உலகத்து மக்கட்கு எல்லாம் -
ஓதலின் சிறந்தன்று, ஒழுக்கம் உடைமை.
- ஆர்கலி - கடல்
- ஓதலின் - கற்றலைப் பார்க்கிலும்
2. காதலின் சிறந்தன்று, கண் அஞ்சப்படுதல்.
- காதலின் - பிறரால் அன்பு செய்யப்படுவதைக் காட்டிலும்
- சிறந்தன்று - சிறப்புடையது
3. மேதையின் சிறந்தன்று, கற்றது மறவாமை.
- கற்றது - கற்ற பொருளை
- மறவாமை - மறவாதிருத்தல்
4. வண்மையின் சிறந்தன்று, வாய்மை உடைமை.
- வண்மையின் - வளமையோடிருத்தலை விட
5. இளமையின் சிறந்தன்று, மெய் பிணி இன்மை.
- மெய் - உடம்பு
- பிணி இன்மை - நோயில்லாமலிருத்தல்
6. நலன் உடைமையின் நாணுச் சிறந்தன்று.
- நலன் உடமையின் - அழகுடைமையை விட
- நாணு - நாணமுடைமை
7. குலன் உடைமையின் கற்புச் சிறந்தன்று.
- குலன் உடைமையின் - நல்ல குணத்தையுடைமையினும்
- கற்பு - கல்வியுடைமை
8. கற்றலின் கற்றாரை வழிபடுதல் சிறந்தன்று.
- கற்றாரை - கற்ற பெரியாரை
- வழிபடுதல் - போற்றியொழுகுதல்
9. செற்றாரைச் செறுத்தலின் தற் செய்கை சிறந்தன்று.
- செற்றாரை - பகைவரை
- செலுத்துதலின் - ஒறுத்தலினும்
10. முன் பெருகலின் பின் சிறுகாமை சிறந்தன்று.
- முன் பெருகலின் - முன்பு பெருகிப் பின் அழிதலைக் காட்டிலும்
- சிறுகாமை - நின்ற நிலையில் குறையாதிருத்தல்
சொற்பொருள்:
- ஆர்கலி – நிறைந்த ஓசையுடைய கடல்
- காதல் – அன்பு, விருப்பம்
- மேதை – அறிவு நுட்பம்
- வண்மை – ஈகை, கொடை
- பிணி – நோய்
- மெய் – உடம்பு
- பெயர்: மதுரை கூடலூர் கிழார்
- பிறந்த ஊர்: கூடலூர்
- சிறப்பு: இவர் தம் பாடல்களை நச்சினார்க்கினியர் முதலிய நல்லுரையாசிரியர்கள் மேற்கோள்களாக கையாண்டுள்ளர்கள்.
- காலம்: சங்க காலத்திற்குப்பின் வாழ்ந்தவர்.
- முதுமொழிக்காஞ்சி என்பது காஞ்சித்திணையின் துறைகளுள் ஒன்று.
- இந்நூல் பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று.
- இந்நூலை அறவுரைக்கோவை எனவும் கூறுவர்
- இந்நூலில் பத்து அதிகாரங்களும், அதிகாரத்திற்கு பத்துச் செய்யுள் வீதம் நூறு பாடல்களும் உள்ளன.
No comments:
Post a Comment