- நாடகம் என்னும் சொல் நாடு + அகம் = நாடகம் எனப் பிரியும்
- நாட்டை அகத்தில் கொண்டது நாடகம்
- நாட்டின் கடந்த காலத்தையும் நிகழ்காலத்தையும் வருங்காலத்தையும் தன் அகத்தே காட்டுவதால், நாடகம் எனப் பெயர் பெற்றது
- கதையை, நிகழ்ச்சியை, உணர்வை நடித்துக் காட்டுவதும், கூத்தாக ஆடிக்காட்டுவதும் நாடகம் என்பர்.
- இதற்குக் நாடகக்கலைஎன்னும் பெயர் உண்டு.
நாடகக்கலையின் தோற்றமும் வளர்ச்சியும்:
- தமிழின் தொன்மையான கலை வடிவம் நாடகம்.
- நாடகம் என்பது போலச் செய்தல் என்னும் பண்பு அடிப்படையாக அமைதலைக் காணலாம்
- பிறர் செய்வதைப்போல தாமும் செய்து பார்க்க வேண்டும் என்ற மனித உணர்சித்தான் நாடகம் தோன்றக் காரணம்.
- பண்டைய மரப்பவைக்கூத்து , பொம்மலாட்டமாக வளர்ச்சி அடைந்த பின்னர் தோல்பாவைக் கூத்து ,நிழற் பாவைக்கூத்து ஆகியன முறையே பாவைக் கூத்தின் வளர்ச்சி நிலைகளாக இருந்தன
இலக்கியங்களில் நாடகம் பற்றிய குறிப்புகள்
- தொல்காப்பிய மெய்பாட்டியல் நாடகப்பாங்கிலான உணர்வுகளுக்கு இலக்கணம் வகுத்துள்ளது.
- " கூத்தாட் டவைக்குல்லாத் தற்றே "என்னும் குறள் வழியாக நாடக அரங்கம் இருந்த செய்தி தெரிய வருகிறது .
- சிலப்பதிகாரத்தில் இளங்கோவடிகள், நாடகமேத்தும் நாடகக் கணிகை என்று நாட்டியமாடும் மாதவியை குறிப்பிடுகிறார்
இலக்கணம் வகுத்த நாடக நூல்கள்
- தமிழ் நூல்களில் முறுவல், சயந்தம், செயிற்றியம், மதிவாணர் நாடகத்தமிழ் நூல், விளக்கத்தார் கூத்து, குணநூல், கூத்து நூல் முதலிய பல நாடக நூல்கள் நாட்டியத்திற்கும் நாடகத்திற்கு இலக்கணம் வகுத்துள்ளது.
- பரிதிமாற்கலைஞர், செய்யுள் வடிவில் இயற்றிய தம் நாடகவியல் எனும் நூலில் நாடகம் அதன் விளக்கம், வகைகள், எழுதப்பட வேண்டிய முறைகள் நடிப்புக்குரிய இலக்கணம் நடிப்பவர்களுக்குரிய இலக்கணம் போன்றவற்றை குறிப்பிட்டுள்ளார்.
- சுவாமி விபுலானந்தர் எழுதிய மதங்க சூளாமணியும் மறைமலையடிகள் எழுதிய சாகுந்தலமும் நாடகத்தைப் பற்றிய ஆராய்ச்சி நூல்கள் ஆகும்
- பம்மல் சம்பந்தனார், நாடகத்தமிழ் என்ற தம் நூலில் தொழில் முறை நாடக அரங்குகளைப்பற்றிய செய்திகளை நன்கு ஆராய்ந்து எழுதியுள்ளார்.
காலம்தோறும் நாடகக்கலை
- ஏழாம் நூற்றாண்டில் மகேந்திரவர்ம பல்லவன் மத்தவிலாசம் என்ற நாடக நூலை எழுதியுள்ளான்.
- பதினொன்றாம் நூற்றாண்டில் இராசராசசோழன் ஆட்சிக் காலத்தில் இராசராசேச்சுவர நாடகம்நடைபெற்றதாகக் கல்வெட்டு குறிப்பிடுகிறது.
- நாயக்க மன்னர்கள் ஆட்சிக்காலத்தில் குறவஞ்சி நாடகம் தோன்றின.
- பள்ளு நாடக வகை உழவர்களின் வாழ்க்கையை கூறுகிறது
- பதினேழாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் நொண்டி நாடகம் தோன்றின.
- பதினெட்டாம் நூற்றாண்டில் அருணாச்சலக் கவிராயரின் இராம நாடகம், கோபால கிருட்டின பாரதியின் நந்தனார் சரித்திரம் ஆகியன கட்டியங்காரன் உரையாடலோடு முழுவதும் பாடல்களாக அமைந்தன.
- சமுதாய சீர்திருத்த நாடகங்களில் காசி விஸ்வநாதரின் டம்பாச்சாரி விலாசம் , பேராசிரியர் சுந்தரனார் மனோன்மணியம் என்னும் கவிதை நாடகக் காப்பியத்தை கி பி 1891 ஆம் ஆண்டு வெளியிட்டார்.
- இந்நூல் லிட்டன் எழுதிய மறைவழி என்னும் ஆங்கில கதையை தழுவியது
- கதரின் வெற்றி நாடகம் தான் தமிழ்நாட்டில் முதன் முதலாக நடத்தப்பட்ட தேசிய சமுதாய நாடகம்.
- இதனைத் தொடர்ந்து தேசியக்கொடி, தேசபக்தி முதலிய நாடகங்கள் நடத்தப்பட்டன
- சங்கரதாசு சுவாமிகள் என்று தமிழ் நாடக உலகின் இமயமலை, தமிழ் நாடக பேராசிரியர் என்று அழைக்கப்பட்டார்
- பிரகலாதன் ,சிறுத்தொண்டர், இலவகுசா ,பவளக்கொடி , அபிமன்யு ,சுந்தரி முதலிய நாற்பதுக்கும் மேற்ப்பட்ட நாடகங்களை எழுதியுள்ளார்
- தமிழ் நாடகத்தந்தை என்று போற்றப்பட்ட பம்மல் சம்பந்தனார் ஷேக்ஸ்பியரின் பல நாடகங்களை மொழிப் பெயர்த்துள்ளார் .
- இவரது மனோகரன் நாடகம் எழுபது ஆண்டுகளாக தமிழ் நாடக மேடைகளில் புகழ் பெற்று விளங்கியது .
- மதுரையில் ஒளவையார் நாடகம் அரங்கேறியது .இதில் ஒளவையாராக நடித்த தி க சண்முகனார் ஒளவை சண்முகனார் என்று அழைக்கப்பட்டார்.
- நாடகச் சாலையொத்த நற்கலாசாலையொன்று நீடுலகில் உண்டோ நிகழ்த்து என்பது நாடகம் பற்றிய கவிமணியின் கருத்து
நன்று
ReplyDelete