02 August, 2014

இன்றைய கேள்விகள் - 02/08/14

1.திரு வி க வுக்கு  வாய்த்த மொழிநடை மலை
எனத் தமிழில் ஓங்கி உயர்ந்துள்ளது என்று கூறியவர்
  1. மு வரதராசனார்
  2. தெ பொ மீனாட்சி சுந்தரனார்
  3. புலவர் குழந்தை
  4. வாணிதாசன்

2.இராமலிங்க சுவாமிகள் திருவுள்ளம் என்ற நூலின் ஆசிரியர்
  1. தருமு சிவராமு
  2. சி இலக்குவனார்
  3. திரு வி க
  4. மறைமலையடிகள்

3.சாகித்ய அகாதமி பரிசு பெற்ற கண்ணதாசன்
அவர்களின் படைப்பு
  1. சேரமான் காதலி
  2. மாங்கனி
  3. இயேசு காவியம்
  4. ஆட்டனத்தி ஆதிமந்தி

4.வள்ளலார் இயற்றிய உரை நடை நூல்
  1. சின்மய தீபிகை
  2. தொண்டமண்டல சதகம்
  3. மனுமுறை கண்ட வாசகம்
  4. ஒழிவிலொடுக்கம்

5.தனி பாசுரத்தொகை என்ற நூலைப் பதிப்பித்தவர்
  1. பரிதிமாற்கலைஞர
  2. தேவநேயப்பாவணர்
  3. மறைமலையடிகள்
  4. கல்கி


6.குன்றேறி – இலக்கணக் குறிப்பு  
  1. ஆறாம் வேற்றுமைத்தொகை
  2. ஏழாம் வேற்றுமைத்தொகை
  3. வினைத்தொகை
  4. இரண்டாம் வேற்றுமைத்தொகை

7.ஊறா அமை
  1. சொல்லிசை அளபெடை
  2. செய்யுளிசை அளபெடை
  3. இன்னிசை அளபெடை
  4. வினையெச்சம்

8.தென் தமிழ்த் தெய்வப்பரணி என்று கலிங்கத்துப்பரணியை
புகழ்ந்தவர்
  1. ஒட்டக்கூத்தர்
  2. கம்பர்
  3. புகழேந்திப் புலவர்
  4. கபிலர்

9.விபுதர் – பொருள் கூறுக
  1. ஆசிரியர்
  2. அரசர்
  3. புலவர்
  4. அமைச்சர்

10.அடவிமலையாறு – இலக்கணக்குறிப்பு
  1. உம்மைத்தொகை
  2. உவமைத்தொகை
  3. உருவகம்
  4. வினைத்தொகை  

விடைகள் 
  1. தெ பொ மீனாட்சி சுந்தரனார்
  2. திரு வி க
  3. சேரமான் காதலி
  4. மனுமுறை கண்ட வாசகம்
  5. பரிதிமாற்கலைஞர்
  6. ஏழாம் வேற்றுமைத்தொகை
  7. செய்யுளிசை அளபெடை
  8. ஒட்டக்கூத்தர்
  9. புலவர்
  10. உம்மைத்தொகை
 


No comments:

Post a Comment

இன்பத்தமிழ் - Class 6 Tamil New Syllabus Term 1

தமிழ் வணக்கம்   தற்கால இலக்கிய மரபாகிவிட்டது  பாரதிதாசனின் இயற்பெயர்   சுப்புரத்தினம்.  பாரதியாரின் கவிைதகள்  மீது கொண்ட  பற்றின் காரணமா...