ஆற்றில் தவறிவிழுந்த தனது பாட்டியைக் காப்பாற்றிய நாகாலாந்து மாநிலம், வோக்கா மாவட்டத்தைச் சேர்ந்த 8 வயது சிறுமியான மோன்பேனி தேசிய வீரதீர விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
நாஸா உள்ளிட்ட அமெரிக்க ஆய்வு நிறுவனங்களின் புள்ளிவிவரப்படி 2014-ஆம் ஆண்டுதான் அதிக வெப்பம் மிகுந்த ஆண்டாகும்.1880-ஆம் ஆண்டிலிருந்து புவியின் சராசரி வெப்பம் 0.8 டிகிரி செல்சியஸ் அதிகரித்துள்ளது. கடந்த 30-லிருந்து 40 ஆண்டுகளில் புவி வெப்பமயமாதல் அதிக அளவில் நிகழ்ந்துள்ளது.நியூயார்க்கிலுள்ள நாஸாவின் கட்டார்டு விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம், தேசிய கடல் பரப்பு ஆய்வு மையம் ஆகிய அமைப்புகள் இந்த ஆய்வை மேற்கொண்டன.இதில், கடந்த 2014-ஆம் ஆண்டுதான் மிகவும் வெப்பமான ஆண்டு எனத் தெரியவந்துள்ளது.
தலைமைத் தேர்தல் ஆணையர் வி.எஸ்.சம்பத் இன்று வியாழக்கிழமை (ஜன.15) ஓய்வு பெறுகிறார்.புதிய தலைமை தேர்தல் கமிஷ்னராக ஹச்.எஸ்.பிரம்மா நியமிக்கப்பட்டுள்ளார். இவர் இன்று புதிய தேர்தல் கமிஷ்னராக பதவியேற்று கொள்ள உள்ளார். பிரம்மா, அசாம் மாநிலத்தை சேர்ந்தவர். இவரும் மத்திய அரசில் பல்வேறு பதவிகளை வகித்துவிட்டு 2010-ம் ஆண்டு ஆகஸ்டு 25-ந் தேதி தேர்தல் கமிஷனராக பதவி ஏற்றார். இவரது பதவிக்காலம் 3 மாதங்கள் மட்டும்தான். இவர், வரும் ஏப்ரல் மாதம் 18-ந் தேதி ஓய்வு பெற உள்ளார்.
இந்தியா முழுவதும் 83 கோடி வாக்காளர்கள் உள்ளனர் என்று தலைமைத் தேர்தல் ஆணையர் ஹெச்.எஸ். பிரம்மா தெரிவித்தார்.
இதுதொடர்பாக தில்லியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:
கடந்த 1951ஆம் ஆண்டு, இந்தியாவில் நடந்த முதல் தேர்தலின்போது வாக்காளர்களின் எண்ணிக்கை 17.32 கோடியாக இருந்தது. இந்த எண்ணிக்கையானது இம்மாதம் 5ஆம் தேதி நிலவரப்படி, 83 கோடியாக அதிகரித்துள்ளது.
2014ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் பங்கேற்ற வாக்காளர்களின் எண்ணிக்கையைக் காட்டிலும் இது 2 கோடி அதிகமாகும். அதுபோல, ஐரோப்பா கண்டத்தில் இருக்கும் அனைத்து வாக்காளர்களின் எண்ணிக்கையைக் காட்டிலும், இது அதிகமாகும். அடுத்த 5 ஆண்டுகளில், இந்திய வாக்காளர்களின் எண்ணிக்கை 85 கோடியை எளிதில் எட்டிவிடும்.
தமிழ்நாட்டைச் சேர்ந்த பரதநாட்டியக் கலைஞர் பத்மா சுப்ரமணியதுக்கு செவ்வாய்க்கிழமை, கேரள சுற்றுலாத் துறை சார்பாக "நிசாகந்தி புரஸ்காரம்" எனும் உயரிய விருது வழங்கப்பட உள்ளது.பத்மா சுப்ரமணியம் நம் நாட்டின் பிரபலமான பரதக் கலைஞர்களில் ஒருவராவார். பாரம்பரிய நடனத்தில் அவரின் பங்களிப்பை கௌரவிக்கும் விதமாக இந்த விருதுக்கு அவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இந்தியாவில் கடந்த 4 ஆண்டுகளில் புலிகளின் எண்ணிக்கை 30 சதவீதம் அதிகரித்துள்ளதாகவும், தற்போது மொத்தம் 2,226 புலிகள் இருப்பதாகவும் புலிகள் குறித்த கணக்கெடுப்பில் தெரிய வந்துள்ளது.இந்தியாவில் நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை புலிகள் கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது .
உலகப் பொருளாதார அமைப்பின் (டபிள்யூ.இ.எஃப்) ஐந்து நாள் உச்சி மாநாடு, சுவிட்ஸர்லாந்தில் உள்ள தாவோஸ் நகரில் செவ்வாய்க்கிழமை தொடங்கியது.அதில், உலகம் முழுவதிலும் இருந்து 2,500க்கும் மேற்பட்ட அரசியல் தலைவர்களும், தொழிலதிபர்களும் கலந்து கொள்கின்றனர்.
No comments:
Post a Comment