சீக்கிரம் செல்லுக நேர் வழியில் - அதைச்
செத்தைகள் கூடியே தூர்க்கு முன்னே
நோக்கிய அத்திசை நேர்த்திசையில் - துளிச்
சோம்பலுமின்றி நடை எடு நீ
.
.
.
.
.
இன்றிளைப் பாறுவம் என்றிருந்தால் – வழி
என்னென்ன வாகுமோ ஓரிரவில்
சென்றிளைப் பாறுக முற்றிடத்தே – தம்பி
தேன்வந்து பாயும் உன் நெஞ்சிடத்தே!
சாதனைப் பூக்களை ஏந்துமுன்னே – இங்கு
நல்லசெடி இளைப் பாறிடுமோ?
வேதனை யாவும் மறந்ததுபார் – செடி
வெற்றி கொண்டேந்திய பூவினிலே
-சாலை இளந்திரையன்
சொற்பொருள்:
- செத்தை – குப்பைகூளம்
- இளைப்பாறுதல் – ஓய்வெடுத்தல்
- சாலை. இளந்திரையனின் பெற்றோர் இராமையா, அன்னலட்சுமி.
- இவர் திருநெல்வேலி மாவட்டம் சாலைநயினார் பள்ளிவாசல் என்னும் இடத்தில் பிறந்தார்.
- தில்லிப் பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறைத் தலைவாரக இருந்தார்.
- உலகத்தமிழ் ஆராய்சிக் கழகம், இந்தியப் பல்கலைக்கழகத் தமிழாசிரியர் மன்றம், தில்லித் தமிழ் எழுத்தாளர் சங்கம், உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கம் தோன்றக் காரணமாக இருந்தவர்.
- 1991இல் “பாவேந்தர் விருதினை” பெற்றவர்.
- காலம் - 06.09.1930 – 04.10.1998.
- இப்பாடல் “பூத்தது மானுடம்” என்னும் கவிதைத் தொகுப்பில் உள்ளது
- மேலும் இவர் புரட்சி முழக்கம், உரை வீச்சு போன்ற நூல்களை படைத்துள்ளார்.
No comments:
Post a Comment