நகைச்சுவை:
- இலக்கியச் சுவைகளில் மிகவும் நுட்பமானது நகைச்சுவை.
- இச்சுவையை உணர்ந்து போற்ற தனி ஆற்றல் வேண்டும்.
- நகைச்சுவையை போற்றுவதற்குத் தேவைப்படும் ஆற்றல், அதைக் கவிதைகளில் வடிபதிலேயே உள்ளது.
- நகைச்சுவையுணர்வு இல்லாதவருக்குப் பகலும் இருளாய் தோன்றும்.
- "முள்ளு முனையிலே மூணு குளம் வெட்டினேன்" எனத் தொடங்கும் நகைச்சுவை உணர்வு மிக்க பாடல் நாட்டுப்புறப்பாடலில் இடம் பெற்றுள்ளது.
- தொல்காப்பியம், "எள்ளல், இளமை, அறியாமை, மடமை" ஆகிய நான்கு காரணங்களால் நகைச்சுவை தோன்றும் என்கிறது.
- நகைச்சுவையின் இன்றியமையாமைப் புலப்படுத்த வந்த வள்ளுவர்,
பகலும்பாற் பட்டன் றிருள்.
என நகைச்சுவை உணர்வு இல்லாதவர்களுக்கு பகலும் இருளாகத் தோன்றும் என்கிறார்.
காந்தியடிகள்:
இலக்கியங்களில் நகைச்சுவை:
வெஞ்சின வாழி, மீலான், வாளும்போய் வீழ்ந்ததன்றே
கலிங்கத்துப்பரணி:
காளமேகப்புலவர்:
காலெங்கே? ஊன்வடிந்த கண்ணெங்கே? - சாலப்
புவிராயர் போற்றும் புலவர்காள்! நீங்கள்
கவிராயர் என்றிருந்தக் கால்.
எனும் பாடலைப் பாடினார்.
பாரதிதாசன்:
எட்டிப் பார்க்கா திருப்ப தற்கே
இயற்கை யன்னை இப்பெண் கட்கெல்லாம்
குட்டைக் கழுத்தைக் கொடுத்தான்; உனக்கோ
கறையொன் றில்லாக் கலாப மயிலே!
நிமிர்ந்து நிற்க நீள் கழுத்து அளித்தான்.
காந்தியடிகள்:
- காந்தியடிகள், நகைச்சுவை உணர்வு மட்டும் தனக்கு இல்லையெனில், எப்பொழுதோ தனது வாழ்க்கையை இழந்திருக்கக்கூடும் எனக் கருதினார்.
இலக்கியங்களில் நகைச்சுவை:
- கம்பராமாயணத்தில் கம்பரின் நகைச்சுவை உணர்வு அவர் தம் பாடல்களின் மூலம் அறியலாம்.
வெஞ்சின வாழி, மீலான், வாளும்போய் வீழ்ந்ததன்றே
- வாலியை பற்றி அனுமனிடம் இராவணன் வினவும் போது, அனுமன் அதற்கு, "அஞ்ச வேண்டா! அரக்கர் தலைவா, வாலியும் இறந்தான், அவனது வாழும் இறந்துவிட்டது! ஆனால் சூரியகுலத் தோன்றலாகிய வாலியின் அழிவுக்குக் காரணமானது இராமனின் ஒரு கணையே என்பதை மட்டும் மறந்துவிடாதே!: எனக் கூறினார்.
கலிங்கத்துப்பரணி:
- சிற்றிலக்கியங்களில் ஓன்றான் கலிங்கத்துப் பரணியில் செயங்கொண்டார் நகைச்சுவை உணர்வு தோன்ற, பல பாடல்களைப் பாடியுள்ளார்.
- காணமுடியாத பேய்களை உருவாக்கி, உயிருள்ள உண்மைப்பிறவிகள் போல் நம் கண்முன்னே நடமாடவிட்டு நகைச்சுவைக்குரிய செயல்களை அவற்றிடையே காட்டியுள்ளார்.
காளமேகப்புலவர்:
- இரு பொருள் தருமாறு பாடுவதில் வல்லவர்.
- "நாங்கள் கவிராசர்கள்" என்று செருக்குடன் கூறிய புலவர்களின் செருக்கை அடக்கும்படி, கவி எனபதற்கு குரங்கு என்னும் பொருள் தோன்றுமாறு
காலெங்கே? ஊன்வடிந்த கண்ணெங்கே? - சாலப்
புவிராயர் போற்றும் புலவர்காள்! நீங்கள்
கவிராயர் என்றிருந்தக் கால்.
எனும் பாடலைப் பாடினார்.
பாரதிதாசன்:
- பாவேந்தர் பாரதிதாசன் மயிலின் கழுத்து நீண்டு இருப்பதாய் நகைச்சுவையுடன் பாடியுள்ளார்.
எட்டிப் பார்க்கா திருப்ப தற்கே
இயற்கை யன்னை இப்பெண் கட்கெல்லாம்
குட்டைக் கழுத்தைக் கொடுத்தான்; உனக்கோ
கறையொன் றில்லாக் கலாப மயிலே!
நிமிர்ந்து நிற்க நீள் கழுத்து அளித்தான்.
- பெண்களின் கழுத்து நீண்டிருந்தால், அண்டைவீடு அறையிலே நடப்பதை ஆர்வத்தோடு பார்ப்பார்களாம் மயில் அப்படிப் பார்காதாம்: எனக் கூறுகிறார்.
- நாஞ்சில் நாடு கவிஞர் கவிமணி தேசிய விநாயகம், மருமக்கள் வழி மான்மியம்" என்னும் நகைச்சுவை நூலினை அளித்துள்ளார்.
- இந்நூல் நகைச்சுவை களஞ்சியம் எனப்படுகிறது.
No comments:
Post a Comment