தெண்கடல் வளாகம் பொதுமை இன்றி
வெண்குடை நிழற்றிய ஒருமை யோர்க்கும்
நடுநாள் யாமத்தும் பகலும் துஞ்சான்
கடுமாப் பார்க்கும் கல்லா ஒருவற்கும்
உண்பது நாழி உடுப்பவை இரண்டே
பிறவும் எல்லாம் ஓர் ஒக்கும்மே
செல்வத்துள் பயனே ஈதல்
துய்ப்போம் எனினே தப்புன பலவே.
-நக்கீரனார்
சொற்பொருள்:
- நிழற்றிய – நிழல் செய்த
- துஞ்சான் – துயிலான்
- மா – விலங்கு
- நாழி – அளவுப்பெயர்
- ஈதல் – கொடுத்தல்
- துய்ப்போம் – நுகர்வோம்
இலக்கணக்குறிப்பு:
- வெண்குடை – பண்புத்தொகை
- நாழி – ஆகுபெயர்
- ஈதல் – தொழிற்பெயர்
- மதுரை கணக்காயனார் மகனார் நக்கீரனார்.
- இவர் இறையனார் எழுதிய களவியலுக்கு உரை கண்டவர்.
- பத்துப்பாட்டில் “திருமுருகாற்றுப்படை”, “நெடுநல்வாடை” எனும் இரு நூல்களை படைத்துள்ளார்.
- புறம் + நான்கு + நூறு = புறநானூறு
- புறப்பொருள் பற்றிய நானூறு பாடல்களைக் கொண்டது இந்நூல்.
- இது எட்டுத்தொகை நூல்களுள் ஒன்று.
- இந்நூலின் சில பாடல்களை ஜி.யு.போப் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்துள்ளார்.
No comments:
Post a Comment