முத்தே பவளமே மொய்த்தபசும் பொற்சுடரே
சித்தேஎன் னுள்ளத் தெளிவே பராபரமே
கண்ணே கருத்தேயென் கற்பகமே கண்ணிறைந்த
விண்ணே ஆனந்த வியப்பே பராபரமே
- தாயுமானவர்
சொற்பொருள்:
- சுடர் - ஒளி
- ஆனந்தம் - மகிழ்ச்சி
- பராபரம் - மேலான பொருள், இறைவன்
ஆசிரியர் குறிப்பு:
- பெயர் - தாயுமானவர்
- திருச்சி மலைமீது உள்ள இறைவனான தாயுமானவர் அருளாள் பிறந்தமையால் இவருக்கு தாயுமானவர் என்று பெயர் சூட்டப்பட்டது.
- பெற்றோர் - கேடிலியப்பர் - கெசவல்லி அம்மையார்.
- மனைவி - மட்டுவார்குழலி
- ஊர்: நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள திருமறைக்காடு(வேதாரண்யம்)
- நூல்: தாயுமானவர் திருப்பாடல் திரட்டு
- பணி: திருச்சயை ஆண்ட விசய ரகுநாத சொக்கலிங்கரிடம் கருவூல அலுவலர்.
- காலம்: கி.பி.18ம் நூற்றாண்டு
- தாயுமானவர் நினைவு இல்லம் இராமநாதபுரம் மாவட்டம் இலட்சுமிபுரத்தில் உள்ளது.
நூல் குறிப்பு: இப்பாடல் "தாயுமானவர் திருப்பாடல் திரட்டு" என்னும் நூலில் "பராபரக்கண்ணி" என்னும் தலைப்பில் உள்ளது.
No comments:
Post a Comment