வேலு நாச்சியார்:
- ஆங்கிலேயரை எதிர்த்து ஆயதம் ஏந்தி போராடிய முதல் பெண்மணி
- இவர் இராமநாதபுரம் மன்னர் செல்லமுத்து சேதுபதியின் மகள்.
- சிவகங்கை மன்னர் முத்துவடுக நாதரை மணந்தார்.
- 1772 இல் ஆங்கிலேயருக்கு முத்துவடுக நாதருக்கும் ஏற்பட்ட போரில் முத்துவடுக நாதர் வீரமரணம் அடைந்தார்.
- பின்பு வேலு நாச்சியாரே தலைமை ஏற்று போர் புரிந்தார.
- வேலு நாச்சியாருக்கு உதவியவர் மைசூர் மன்னன் ஹைதர் அலி. இவர் 5000 படை வீரர்களை உதவிக்கு அனுப்பினார்.
- 1780 ஆண் ஆண்டு தம் கணவரை கொன்றவர்களை வென்று மீண்டும் சிவகங்கையை மீட்டார்.
கடலூர் அஞ்சலையம்மாள்:
- 1890 ஆம் ஆண்டு கடலூரில் உள்ள முதுநகரில் பிறந்தார்.
- 1921 ஆண் ஆண்டு காந்தியடிகள் ஒத்துழையாமை இயக்கத்தை தொடங்கியபோது இவரும் தம் பொதுவாழ்க்கையை தொடங்கினார்.
- நீலன் சிலையை அகற்றும் போராட்டம் உட்பட பல போராட்டங்களில் பங்கு பெற்று சிறைக்கு சென்றார்.
- வேலூர் சிறையில் இருந்த போது, கருவுற்ற நிலையில் இருந்த இவரை ஆங்கிலேயே அரசு வெளியில் அனுப்பிவிட்டு, மகப்பேற்றிற்குப் பின் மீண்டும் சிறையில் அடைத்தது.
- நீலன் சிலையை அகற்றும் போராட்டத்தில் தனது 9 வயது மகளையும் ஈடுபடுத்தினார். இவருடன் இவர் மகளும் சிறைத்தண்டனை பெற்றார்.
- காந்தியடிகள் சிறையில் வந்து பார்த்து, இவரின் மகள் அம்மாக்கண்ணுவை தன்னுடன் அழைத்து சென்று வார்தாவில் உள்ள ஆசிரமத்தில் படிக்க வைத்து அவருக்கு லீலாவதி எனப்பெயரும் இட்டார்.
- இவர் காந்தியடிகளால் "தென்னாட்டின் ஜான்சிராணி" என அழைக்கப்பட்டார்.
அம்புஜத்தம்மாள்:
- பிறப்பு: 1899 ஆம் ஆண்டு
- இவர் அனைனை கஸ்துரிபாயின் எளிமையான தோற்றத்தினால் கவரப்பட்டு எளிமையாக வாழ்ந்தார்.
- இவர் பாரதியாரின் பாடல்களை பாடி விடுதலை உணர்வை ஊட்டினார்.
- இவர் "காந்தியடிகளால் தத்தெடுக்கப்பட்ட மகள்" என்று அழைக்கப்பப்படுவர்.
- தன் தந்தையின் பெயரோடு காந்தியடிகளின் பெயரையும் இணைத்து "சீனிவாச காந்தி நிலையம்" *என்ற தொண்டு நிறுவனத்தை தொடங்கினார்.
- இவர் தம் எழுபதாண்டு நினைவாக, "நான் கண்ட பாரதம்" என்ற நூலை எழுதினார்.
- 1964 ஆம் ஆண்டு இவருக்கு "தாமரைத்திரு" (பத்மஸ்ரீ) என்ற விருது வழங்கப்பட்டது.
No comments:
Post a Comment