- இறை மகனாகிய இயேசு பெருமான் பெத்தலகேமில் மரியன்னைக்கு மகனாகப் பிறந்தார்.
- இயேசு பெருமானின் தந்தை - சோசப்
- குழந்தை இயேசுவை, ஏரோது மன்னனின் கொடுமையிலிருந்து காப்பாற்றும் பொருட்டுத், தந்தை சோசப்பும் தாய் மரியன்னையும் குழந்தையோடு எகிப்துக்குச் சென்றனர்.
- இயேசு யூதேய காட்டிலிருந்து புனித யோவானிடம் திருமுழுக்குப் பெற்றார்.
- இயேசுவைக் காட்டிக் கொடுத்தவர் - யூதாசு
- இயேசு, யூதேய மரபுகளை மீறினார் எனப் பொய்க் குற்றஞ் சாட்டி, பிலாந்து மன்னன் மரணதண்டனை விதித்தான்.
- இயேசுவின் தோள்களில் சிலுவையினைச் சுமத்தித் துன்புறுத்திக் கல்வாரிமலைக்குக் கொண்டு சேர்த்தனர்.
- ஈண்டு - இவ்விடம்
- புகல்வது - சொல்வது
- காண்டகு - காணத்தக்க
- இருப்பாணி - இரும்பு ஆணி
- கடாவினார் - அடித்தார்
- கீண்டு - தோண்டி
- செற்றம் - சினம்
- குருசு - சிலுவை
- சொற்ற - சொன்ன
- துளக்கம் - விளக்கம்
- சுருதிமுதல் - மறை முதல்வராகிய இயேசுநாதர்
- சதைப்புண்டு - சிதைக்கப்பட்டு
- பன்னரிய - சொல்லுதற்கரிய
- பலபாடு - பல துன்பம்
- இரும்பொறை - பெரும்போறுமை
- வித்தகன் - ஆண்டவன்
- தொழும்பர் - அடியார்
- இசைபெறுதல் - புகழ்பெறுதல்
- துஞ்சினவர் - உறங்கியவர்
- கீண்டு - பிளந்து
- இருப்புமுனை - ஆணியின் நுனி
- வதைப்புண்டு - துன்பமடைந்து
- மாண்டுபடும்போது - இறக்கும்நிலையில்
- இரட்சகர் - காப்பவர்
- மன்றாடும் - மிக வேண்டுதல்
- ஆகடியம் - ஏளனம்
- செங்கை, சேவடி, வெவ்விருப்பு - பண்புத்தொகைகள்
- இருப்பாணி - வலித்தல் விகாரம்
- கனிவாய் - உவமைத்தொகை
- வன்மறவோர் பண்புத்தொகை
- ஈண்டினியான் - ஈண்டு+இனி+யான்
- காண்டகு - காண் + தகு
- சேவடி - செம்மை + அடி
- வெவ்விருப்பாணி - வெம்மை + இரும்பு+ ஆணி
- மற்றிரண்டு - மற்று+இரண்டு
- குருசேற்றி - குருசு + ஏற்றி
- தன்னரிய - தன் + அரிய
- தவிப்பெய்தி - தவிப்பு + எய்தி
- இத்தகைய - இ+தகைய
- மனநலம் - மனம் + நலம்
- எடுத்துரைக்கும் - எடுத்து + உரைக்கும்
- ஈண்டிவரே - ஈண்டு + இவரே
- இருப்புமுனை - இரும்பு
- எழுத்திட்டார் - எழுத்து + இட்டார்
- என்றாகடியமான - என்று + ஆகடியம் + ஆன
- பங்கிட்டார் - பங்கு + இட்டார்
- இரட்சணிய யாத்திரக நூலாசிரியர் எச்.ஏ.கிருட்டினனார். திருநெல்வேலி மாவட்டத்தில்லுள்ள கரையிருப்பு என்னும் ஊரில் 1827 ஏப்ரல் 23 ஆம் தேதி பிறந்தார்.
- தந்தை - சங்கர நாராயணர் பெரும் புலவராக விளங்கினார்.
- அன்னையார் - தெய்வ நாயகி அமமாள்.
- இவர்கள் ரெட்டியாபட்டியில் வாழ்ந்தவர்கள். பிறகு கரையிருப்பு சென்று வாழ்ந்த கிருட்டினனார், 30வது வயது தம் பெயரை எச்.ஏ.கிருட்டினனார் என மாற்றிக் கொண்டார்.
- தந்தையிடம் தமிழ் இலக்கியங்களையும், மாணிக்கவாசகத்தேவரிடம் இலக்கணங்களையும், பிலவணச் சோதிடரிடம் வடமொழியையும் கற்றார்.
- சாயர்புரம் பள்ளியில் தமிழாசிரியராகப் பணியாற்றினார்.
- இரட்சணிய சமய நிர்ணயம், இரட்சணிய மனோகரம். இரட்சணியக்குறள் என்னும் நூல்களையும் இயற்றினார்.
- கிறித்துவக் கம்பர் எனப் புகழ்பெற்ற பெருங்கவிஞர் 1900 ஆண் ஆண்டு பிப்ரவரி 3 ஆண் தேதி இயற்கை எய்தினார்.
- இரட்சணியயாத்திரிகம் என்பதன் பொருள் (உயிர், தன்னைக் காக்க வேண்டி) இறைவனை நோக்கிச் செல்லும் பயணம் என்பது, ஆன்ம ஈடேற்றத்தை விரும்புபவர் என்பதும் பொருந்தும்.
- ஜான் பன்யன் என்னும் புகழ்பெற்ற ஆங்கில நூலாசிரியர் இயற்றிய பிலிகிரிம்ஸ் புரோகிரஸ் என்னும் நூலைத்தழுவி ஹென்றி ஆல்பர்ட்டு கிருட்டினனார் வழிநூலாகத் தமிழில் இரட்சணிய யாத்திரிகம் என்னும் பெயரில் இயற்றினார்.
No comments:
Post a Comment