- அமெரிக்காவின் புகழ்பெற்ற எழுத்தாளராகவும் அரசியல் ஈடுபாடு கொண்டவராகவும் விளங்கியவர்.
- உங்களுக்கு விருப்பமான ஒன்றை பெற விரும்பினால் என்ன வேண்டும் என்று கேட்பீர்கள் என்று ஒருவர் கேட்ட கேள்விக்கு இந்த உலகத்தில் அமைதி மலர வேண்டும் எனக் கேட்பேன் என்றவர் கெலன்.
- கெலனின் கண்கள் பாரா, காதுகள் கேளா, வாய்பேசாது.பத்தொன்பது மாதக் குழந்தையாக இருந்த போது கெலன் கெல்லருக்கு ஏற்பட்ட கொடிய நோய் அவருடைய மூன்று புலன்களையும் பறித்துக்கொண்டது
- கெலன் கெல்லர் தனது ஆறாவது வயதில் அலெக்சாண்டர் கிரகாம்பெல் உதவியுடன் பெர்கின்ஸ் பள்ளியில் சேர்ந்தார்.
- பார்வையற்றோருக்கான பெர்கின்ஸ் பள்ளி அமெரிக்காவில் பாஸ்டன் நகரில் அமைந்துள்ளது.
- கெலனின் ஆசிரியர் - அன்னிசல்லிவான்
- ஹோரஸ்மான் பால்டனில் உள்ள காது கேளாதோருக்கான பள்ளியிலும், நியூயார்க்கில் உள்ள ரைட்ஹூமாசன் பள்ளியிலும் முறைப்படி பயின்றார்.
- கெலன் பிரெய்லி முறையில் எழுதவும் படிக்கவும் கற்றார்.
- ஆசிரியை அன்னிசல்லிவான் அளித்த பயிற்சியின் பயனாக கேம்பிரிட்ஜ் ரெட்கிளிஃப் கல்லூரியின் நுழைவுத் தேர்வில் வெற்றி பெற்று இளங்கலைப்பட்ட வகுப்பில் சேர்ந்தார்.
- கண்ணிழந்தோருக்கும், காதுகேளாதோர்க்கும் அல்லும் பகலும் அயராது உழைத்தவர் - கெலன்.
- பார்வையற்றோருக்கென தேசிய நூலகம் ஒன்றை உருவாக்கி உலகம் முழுவதிலும் இருந்து நூல்கள் வந்து குவிய ஏற்பாடு செய்தார்.
- கெலன் கெல்லர் நிதி என ஒன்றைத் தொடங்கி, அந்நிதியில் சேர்ந்த தொகையான ரூபாய் ஒன்றரைக் கோடியை அப்பள்ளிகளுக்கு வழங்கினார்.
- ஆசிரியர் அன்னிசல்லிவான் 1930 ஆண் ஆண்டு இறந்தார்.
- அன்னிசல்லிவான் இறந்த பிறகு பாலி தாம்சன் உதவியுடன் வாழ்ந்தார் கெல்வின்.
- கெலன் வாஷிங்டன் நகரின் புகழ்பெற்ற பெண்மணியாகத் திகழ்ந்தார்.
- கடவுளின் அருளால் மூன்று நாள் மட்டும் தமக்குப் பார்வை கிட்டியதாகக் கனவு கண்டார் கெலன்.
- கெலன் கெல்லர் முதல் நாள் பார்த்தது - ஆசிரியர்.
- இரண்டாவது நாள் கதிரவன் தோன்றுவதைக் கண்டார்.
- புகழ் பெற்ற லியினார் டோ டாவின்சி கலைஞர்களின் ஓவியங்களையும் கலைப் பொருள்களையும் கண்டு மகிழ்ந்தார்.
- மூன்றாவது நாள் நகரின் கிழக்கு பக்கத்திலுள்ள ஆற்றுப்பாலத்தை உற்று நோக்கினார். நியூயார்க்கில் உள்ள கம்பீரமான இரட்டைக் கோபுரக் கட்டடத்தைக் கண்டு களித்தார்.
- மக்களின் முகத்தில் வெளிப்படும் மகிழ்ச்சி, துன்பத்தைப் பார்த்து புரிந்துக் கொண்டார்.
- செகப்பிரியருடைய நாடகத்தைப் பார்த்தார்.
- "வாழ்க்கையில் இழப்பு என்பதே இல்லை, ஒன்று போனால் இன்னொன்று வரும். அந்த நம்பிக்கையிருந்தால் வாழ்க்கை வெறுமை ஆகாது" எனக் கூறியவர் கெலன்.
- நீங்கள் கண்பார்வை அற்றவராகவும் காது கேளாதவராகவும் இருந்தும் கூட எப்படி உங்களால் சாதிக்க முடிந்தது என கெலனிடம் கேட்டவர் - விக்டோரியா மகாராணி.
- 1880 சூன் 27ல் அமெரிக்காவில் உள்ள அலபாமா மாகாணத்தில் துஸ்கும்பியாவில் பிறந்து சாதனையாளராகத் திகழ்ந்த கெலன், 1968 ஆம் ஆண்டு சூன் முதல் நாள் இவ்வுலகை வாழ்வை நீத்தார். அவரது உடல் வாஷிங்டனில் அன்னி, பாலி ஆகியோரது உடல்களுக்கு அருகே நல்லடக்கம் செய்யப்பட்டது.
- உலகின் எட்டாவது அதிசயம் எனப் பாராட்டப் பெற்றவர் கெலன்.
கெலன் கெல்லர் - 9 ஆம் வகுப்பு சமச்சீர்
Subscribe to:
Posts (Atom)
இன்பத்தமிழ் - Class 6 Tamil New Syllabus Term 1
தமிழ் வணக்கம் தற்கால இலக்கிய மரபாகிவிட்டது பாரதிதாசனின் இயற்பெயர் சுப்புரத்தினம். பாரதியாரின் கவிைதகள் மீது கொண்ட பற்றின் காரணமா...
-
* தமிழை பக்தி மொழி (இரக்கத்தின் மொழி) என்று கூறியவர் மறைத்திரு தனிநாயக அடிகள். * சமய மறுமலர்ச்சிக் காலம் என்பதும், பக்தி இலக்கியக் க...
-
ஆற்றவும் கற்றார்அறிவுடையார் அஃதுடையார் நாற்றிசையும் செல்லாத நாடில்லை - அந்நாடு வேற்றுநா டாகா தமவேயாம் ஆயினால் ஆற்றுணா வேண்டுவ தில். ...
No comments:
Post a Comment