மணிமேகலை - 9 ஆம் வகுப்பு சமச்சீர்


சொற்பொருள்:
  • ஆயம் - தோழியர் கூட்டம்
  • ஆசனம் - இருக்கை
  • நாத்தொலைவில்லை - சொல் சோர்வின்மை
  • யாக்கை - உடல்
  •  பிணிநோய் - நீங்கா நோய்
  • பேதைமை - அறியாமை
  • செய்கை - இருவினை
  • உணர்வு - அறிவியல் சிந்தனை
  • அரு - உருவமற்றது
  • உரு - வடிவம்
  • வாயில் - ஐம்பொறிகள்
  • ஊறு - புலன்களின் இயல்பு
  • நுகர்வு - இன்பதுன்ப நுகர்ச்சி
  • வேட்கை - விருப்பம்
  •  பவம் - பயன் நோக்கிய செயல்
  • தோற்றம் - பிறப்பு
  • பெரும்பேறு - வீடுபேறு
  • கொடு - கொம்பு
  • அலகில - அளவற்ற
  • தொக்க விலங்கு - விலங்குத்தொகுதி
  • குரலை - புறம் பேசுதல்
  • வெஃகல் - பெருவிருப்பம்
  • வெகுளல் - கடுஞ்சினம் கொள்ளுதல்
  • பொல்லாக் காட்சி - மாயத் தோற்றம்
  • சீலம் - ஒழுக்கம்
  • தானம் - கொடை
  • புரைதீர் - குற்றம் நீங்கிய
  • கேண்மின் - கேளுங்கள்
  • உய்ம்மின் - போற்றுங்கள்
  • உறைதல் - தங்குதல்
  • கூற்று - எமன்
  • மாசில் - குற்றமற்ற
  • புக்கு - புகுந்து
  • இடர் - இன்னல்
  • முத்தேர் நகை - முத்துச் சிரிப்பு
  • தொழுது - வணங்கி
இலக்கணக் குறிப்பு:
  • தேவியும் ஆயமும் - எண்ணும்மை
  • அருந்தவர், நல்வினை - பண்புத்தொகை
  • வாழ்க - வியங்கோள் வினைமுற்று
  • செய்தவம், வீழ்கதிர் - வினைத்தொகை
  • பெரும்பேறு - பண்புத்தொகை
  • ஆழ்நரகு - வினைத்தொகை
  • பல்லுயிர், நல்லவினை, தீவினை, பேரின்பம் - பண்புத்தொகை
  • ஆய்தொடி நல்லாய் - இரண்டாம் வேற்றுமா உருபும் பயனும் பயனும் உடன் தொக்க தொகை
  • காமத்தீ - உருவகம்
  • கடுஞ்சொல் - பண்புத்தொகை
  • பொல்லக்காட்சி - ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்
  • தெளிதல் - தொழிற்பெயர்
  • பயன் தெரிபுலவர் - வினைத்தொகை
  • அரைசன் - இடைப்போலி
  •  நல்லறம் - பண்புத்தொகை
பிரித்தறிதல்:
  • எழுந்தெதிர் = எழுந்து + எதிர்
  • அறிவுண்டாக = அறிவு + உண்டாக
  • இயல்பீராறு = இயல்பு + ஈறு + ஆறு
  • நன்மொழி = நன்மை + மொழி
  • எனக்கிடர் = எனக்கு + இடர்
  • நல்லறம் = நன்மை + அறம்
  • தொழுதேத்தி = தொழுது + ஏத்தி
  • உண்டென்று = உண்டு + என்று
ஆசிரியர் குறிப்பு:
  • மணிமேகலையின் ஆசிரியர் கூலவாணிகன் சீத்தலைச் சாத்தனார்.
  • சாத்தான் என்பது இவரின் இயற்பெயர்.
  • இவர் திருச்சியில் உள்ள சீத்தலை என்னும் ஊரில் பிறந்து மதுரையில் வாழ்ந்தவர்
  • தானிய வாணிகம் செய்தவர்.
  • தண்டமிழ் ஆசான், சாத்தன் நன்நூர்புலவன் என்று இளங்கோவடிகள் இவரை பாராட்டியுள்ளார்.
  • இவரது காலம் கி.பி. இரண்டாம் நூற்றாண்டு.
  • இவர் கடைச்சங்கப் புலவர்களுள் ஒருவர்.
  • இளங்கோவடிகளும் இவரும் சமகாலத்தவராவர்.
நூல் குறிப்பு:
  • இந்நூல் ஐம்பெரும்காபியங்களுள் ஒன்று.
  • சிலப்பதிகாரமும் மணிமேகலையும் ஒரே கதைத் தொடர்புடையவை.
  • இவை இரண்டும் "இரட்டை காப்பியங்கள்" என அழைக்கப்படும்.
  • மணிமேகலையின் துறவு வாழ்க்கையைக் குறுவதனால் இந்நூலுக்கு "மணிமேகலை துறவு" என்ற பெயரும் உண்டு.
  • இந்நூல் பெளத்த சமயச் சார்பு உடையது.
  • முப்பது காதைகள் கொண்டது. இருபத்தி நான்காவது காதை என்பது ஆபுத்திரன் நாடு அடைந்த காதை பாடப் பகுதியாக இடம்பெற்றுள்ளது.
  • கோவலனுக்கும் மாதவிக்கும் பிறந்த மகள் - மணிமேகலை
  • தீவதிலகையின் உதவியால் அழுத சுரபியைப் பெற்றுப் புகார் நகரை மணிமேகலை அடைந்தாள்.
ஐம்பெரும்காப்பியங்கள்:
  • சிலப்பதிகாரம்
  • மணிமேகலை
  • சீவக சிந்தாமணி
  • வளையாபதி
  • குண்டலகேசி

No comments:

Post a Comment

இன்பத்தமிழ் - Class 6 Tamil New Syllabus Term 1

தமிழ் வணக்கம்   தற்கால இலக்கிய மரபாகிவிட்டது  பாரதிதாசனின் இயற்பெயர்   சுப்புரத்தினம்.  பாரதியாரின் கவிைதகள்  மீது கொண்ட  பற்றின் காரணமா...