பெண்மை - 9 ஆம் வகுப்பு சமச்சீர்


அன்பும் ஆர்வமும் அடக்கமும் சேர்ந்தும்
உண்மைத் தன்மையும் உறுதியும் மிகுந்தும்
தன்னல மறுப்பும் சகிப்புத் தன்மையும்
இயல்பாய் அமைந்தும் இன்பச் சொரூபமாய்த்
தாயாய் நின்று தரணியைத் தாங்கும்;      

தாரமாய் வந்து தளர்வைப் போக்கும்;
உடன்பிறப் பாகி உறுதுணை புரியும்;
மகளாய்ப் பிறந்து சேவையில் மகிழும்;
அயலார் தமக்கும் அன்பே செய்யும்;
நாணம் கெடாமல் நட்புகொண் டாடும்.

சொற்பொருள்:
  • உறுதி - உளஉறுதி
  • சொரூபம் - வடிவம்
  • தரணி - உலகம்
  • தாரம் - மனைவி
  • சேவை - தொண்டு
  • அயலார் - உறவல்லாதோர்
  • இலக்கணக்குறிப்பு:
  • அன்பும் ஆர்வமும் அடக்கமும் - எண்ணும்மை
  • இன்ப சொரூபம் - உருவகம்
ஆசிரியர் குறிப்பு:
  • கவிஞர் வெ.இராமலிங்கனார், நாமக்கல் மாவட்டம் மோகனூரில் பிறந்தார்.
  • பெற்றோர் :வெங்கடராமன் - அம்மணி அம்மாள்
  • தமிழக அரசின் முதல் அரசவைக் கவிஞர்.
  • இவருக்கு நடுவண் அரசு "பத்ம பூஷன்" விருது வழங்கிச் சிறப்பித்தது.
  • இவரின் காலம் கி.பி.1888 முதல் 1972 வரை.
  • இவர் தமிழக மக்களால் காந்தியக் கவிஞர் எனப் பெருமையுடன் வழங்கப் பெற்றார்.
நூற்குறிப்பு:
  • நாமக்கல் கவிஞர் பாடல்கள் என்னும் கவிதைத் தொகுப்பில் தெய்வத் திருமலர், தமிழ்த் தேன்மலர், காந்திமலர், தேசிய மலர், சமுதாய மலர், பெரியோர் புகழ் மலர், திருநாள் மலர், சிறுகாப்பிய மலர், இசைமலர், அறிவுரை மலர், பல்சுவை மலர் ஆகிய தலைப்புகளில் கவிதைகள் அமைந்துள்ளன. இப்பாடல், சமுதாய மலர் என்னும் தலைப்பில் இடம் பெற்றுள்ளது.
படைப்புகள்:
  • இசை நாவல்கள் - 03
  • கட்டுரைகள் - 12
  • தன்வரலாறு - 03
  • புதினங்கள் - 05
  • இலக்கியத்திறனாய்வுகள் - 07
  • கவிதைத் தொகுப்புகள் - 10
  • சிறுகாப்பியங்கள் - 05
  • மொழிபெயர்ப்புகள் - 04

No comments:

Post a Comment

இன்பத்தமிழ் - Class 6 Tamil New Syllabus Term 1

தமிழ் வணக்கம்   தற்கால இலக்கிய மரபாகிவிட்டது  பாரதிதாசனின் இயற்பெயர்   சுப்புரத்தினம்.  பாரதியாரின் கவிைதகள்  மீது கொண்ட  பற்றின் காரணமா...