பொன்னின் குவை எனக்கு வேண்டியதில்லை-என்னை
போற்றும் புகழ் எனக்கு வேண்டியதில்லை
மன்னன் முடிஎனக்கு வேண்டியதில்லை-அந்த
மாறன் அழகு எனக்கு வேண்டியதில்லை
கன்னி தமிழ் எனக்கு வேணுமேயடா-உயிர்க்
கம்பன் கவி எனக்கு வேணுமேயடா !
நூல்கள் கனித்தமிழில் அள்ளிட வேண்டும் - அதை
நோக்கித் தமிழ்ப்பசியும் ஆறிட வேண்டும்
சொற்பொருள்:
போற்றும் புகழ் எனக்கு வேண்டியதில்லை
மன்னன் முடிஎனக்கு வேண்டியதில்லை-அந்த
மாறன் அழகு எனக்கு வேண்டியதில்லை
கன்னி தமிழ் எனக்கு வேணுமேயடா-உயிர்க்
கம்பன் கவி எனக்கு வேணுமேயடா !
நூல்கள் கனித்தமிழில் அள்ளிட வேண்டும் - அதை
நோக்கித் தமிழ்ப்பசியும் ஆறிட வேண்டும்
சொற்பொருள்:
- குவை - குவியல்
- மாரன் - மன்மதன்
- இயற்பெயர் - க.சச்சிதானந்தன்
- ஊர் - இலங்கையில் யாழ்ப்பாண மாவட்ட பருத்தித்துறை
- பணி - ஆசிரியர் பயிற்சி கல்லூரியில் விரிவுரையாளர் பணி
- புலமை - தமிழ், ஆங்கிலம், சமஸ்கிருதம் ஆகிய மும்மொழிகளில் புலமை.
- படைப்புகள் - ஆனந்தத்தேன்(கவிதைத்தொகுதி - 1954), அன்னபூரணி (புதினம்), யாழ்பாணக்காவியம்
- சிறப்பு - மகாவித்துவான் நவநீதகிருட்டின பாரதியின் மாணவர். இவர் தம் பாடல்களில் கம்பனின் மிடுக்கையும், பாரதியின் சினப்போக்கையும் ஒருமித்துக் காணலாம்.
No comments:
Post a Comment