வான்பெற்ற நதிகமழ்தாள் வணங்கப் பெற்றேன்
மதிபெற்ற திருவுளத்தால் மதிக்கப் பெற்றேன்
தேன்பெற்ற துழாய் அலங்கல் களப மார்பும்
திருப்புயமும் தைவந்து தீண்டப் பெற்றேன்
ஊன்பெற்ற பகழியினால் அழிந்து வீழ்ந்தும்
உணர்வுடன்நின் திருநாமம் உரைக்கப் பெற்றேன்
யான்பெற்ற பெருந்தவப்பே(று) என்னை அன்றி
இருநிலத்தில் பிறந்தோரில் யார்பெற் றாரே.
சொற்பொருள்:
- வான்பெற்ற நதி – கங்கையாறு
- துழாய் அலங்கல் – துளசிமாலை
- களபம் – சந்தனம்
- புயம் – தோள்
- தைவந்து தொட்டுத்தடவி
- ஊன் – தசை
- பகழி – அம்பு
- இருநிலம் – பெரிய உலகம்
- நாமம் – பெயர்
- பெயர் – வில்லிபுத்தூரார்
- தந்தை – வீரராகவர்
- ஆதரித்தவர் – வக்கப்பாகையை ஆண்ட வரபதி ஆட்கொண்டான்
- காலம் – பதினான்காம் நூற்றாண்டு
- இந்நூல் பத்து பருவங்களை கொண்டது.
- நாலாயிரத்து முந்நூற்றைம்பது விருத்தப் பாடலால் ஆனது
- இப்பாடல் எட்டாம் பருவமாகிய கன்னபருவத்தில் இடம் பெற்றுள்ளது
No comments:
Post a Comment