திருக்குறள்-சான்றாண்மை - 9 ஆம் வகுப்பு சமச்சீர்

1.கடன்என்ப நல்லவை எல்லாம் கடன்அறிந்து
சான்றாண்மை மேற்கொள் பவர்க்கு.
2.குணநலம் சான்றோர் நலனே பிறநலம்
எந்நலத்து உள்ளதூஉம் அன்று.
3.அன்புநாண் ஒப்புரவு கண்ணோட்டம் வாய்மையொடு
ஐந்துசால் ஊன்றிய தூண்.
4.கொல்லா நலத்தது நோன்மை பிறர்தீமை
சொல்லா நலத்தது சால்பு.
5.ஆற்றுவார் ஆற்றல் பணிதல் அதுசான்றோர்
மாற்றாரை மாற்றும் படை.
6.சால்பிற்குக் கட்டளை யாதெனின் தோல்வி
துலையல்லார் கண்ணும் கொளல்.
7.இன்னாசெய் தார்க்கும் இனியவே செய்யாக்கால்
என்ன பயத்ததோ சால்பு.
8.இன்மை ஒருவற்கு இனிவன்று சால்பென்னும்
திண்மைஉண் டாகப் பெறின்.
9.ஊழி பெயரினும் தாம்பெயரார் சான்றாண்மைக்கு
ஆழி எனப்படு வார்.
10.சான்றவர் சான்றாண்மை குன்றின் இருநிலந்தான்
தாங்காது மன்னோ பொறை.

சொற்பொருள்:
  • கடன் - கடமை
  • சான்றோர் - நல்ல குணங்கள் நிறைந்தவர்
  •  நாண் - நாணம்
  •  ஒப்புரவு - உதவுதல்
  •  கண்ணோட்டம் - உயிர்களிடத்து இரக்கம்
  •  வாய்மை - உண்மை
  •  சால்பு - சான்றாண்மை
  •  ஆற்றுவார் - செயல் செய்பவர்
  •  ஆற்றல் - வலிமை
  •  மாற்றார் -பகைவர்
  •  துலையல்லார் - ஆற்றலில் குறைந்தவர்
  • .கட்டளை - உரைகடல்
  •  இன்னா - தீங்கு
  •  இனிய - நன்மை
  •  செய்யாக்கால் - செய்யாவிடத்து
  •  இன்மை - வறுமை
  •  இளிவன்று - இழிவானதன்று
  •  திண்மை - வலிமை
  •  ஊழி - உலகம்
  •  ஆழி - கடல்
  •  இருநிலம் - பெரிய நிலம்
  •  பொறை - சுமை

இலக்கணக் குறிப்பு:

  •  என்ப - பலர்பால் வினைமுற்று
  •  மேற்கொள்பவர் - வினையாலணையும் பெயர்
  •  உள்ளதூஉம் - இன்னிசையளபெடை
  •  அன்று - குறிப்புவினை முற்று
  •  கண்ணோட்டம் - தொழிற்பெயர்
  •  கொல்லா நலத்தது, சொல்லா நலத்தது - ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்
  •  பணிதல் - தொழிற்பெயர்
  •  ஆற்றுவார், மாற்றார் - வினையாலணையும் பெயர்
  •  இன்மை, திண்மை - பண்புப் பெயர்கள்
  •  சான்றவர் - வினையாலணையும் பெயர்
  •  இருநிலம் - உரிச்சொற்றொடர்
  •  மன், ஓ - அசைச்சொற்கள்


No comments:

Post a Comment

இன்பத்தமிழ் - Class 6 Tamil New Syllabus Term 1

தமிழ் வணக்கம்   தற்கால இலக்கிய மரபாகிவிட்டது  பாரதிதாசனின் இயற்பெயர்   சுப்புரத்தினம்.  பாரதியாரின் கவிைதகள்  மீது கொண்ட  பற்றின் காரணமா...