இன்பம் - 9 ஆம் வகுப்பு சமச்சீர்

                                  
கற்றவர் முன்தாம் கற்ற
கல்வியைக் கூறல் இன்பம்
வெற்றியை வாழ்வில் சேர்க்கும்
வினைபல புரிதல் இன்பம்
சிற்றினக் கயவரோடு
சேராது வாழ்தல் இன்பம்
பெற்றதை வழங்கி வாழும்
பெருங்குணம் பெறுதல் இன்பம்
- சுரதா

சொற்பொருள்:
  • இசைபட - புகழுடன்
  • கயவர் - கீழ்க்குணமுடையோர்
இலக்கணக்குறிப்பு:
  • தளிர்க்கை - உவமைத்தொகை
  • பழந்தமிழ், சிற்றினம், பெருங்குணம் - பண்புத்தொகை
  • வழங்கி - வினையெச்சம்
  • கற்றல், பெறுதல், வாழ்தல் - தொழிற்பெயர்
ஆசிரியர் குறிப்பு:
  • உவமை கவிஞர் சுரதா அவர்களின் இயற்பெயர் இராசகோபாலன்.
  • இவர் நாகை மாவட்டம் பழையனூரில் 23.11.1921 அன்று பிறந்தார்.
  • பெற்றோர் - திருவேங்கடம், செண்பகம்
  • பாவேந்தர் பாரதிதாசன் மீது கொண்ட பற்றின் காரணமாகத் தம் பெயரை சுப்புரத்தினதாசன் என மாற்றிக்கொண்டார். அதன் சுருக்கமே சுரதா.
படைப்புகள்:
  • தேன்மழை,
  • துறைமுகம்,
  • சுவரும் சுண்ணாம்பும், 
  • சுரதாவின் கவிதைகள்
நூல் குறிப்பு:
  • தேன்மழை நூலில் இயற்கையெழில் முதலாக ஆராய்ச்சி ஈறாகப் பதினாறு பகுதிகளாகக் கவிதைகள் இடம் பெற்றுல்ளன. அவற்றுள் தேன்துளிகள் என்னும் பகுதியில் இப்பாடல் இடம் பெற்றுள்ளது.
சிறப்பு:
  • இவரின் தேன்மழை நூல் தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் சிறந்த நூலுக்கானப் பரிசை பெற்றுள்ளது.
  • இவர் கலைமாமணி பட்டத்தையும், தமிழக அரசின் பாவேந்தர் விருதையும் பெற்றுள்ளார்.

No comments:

Post a Comment

இன்பத்தமிழ் - Class 6 Tamil New Syllabus Term 1

தமிழ் வணக்கம்   தற்கால இலக்கிய மரபாகிவிட்டது  பாரதிதாசனின் இயற்பெயர்   சுப்புரத்தினம்.  பாரதியாரின் கவிைதகள்  மீது கொண்ட  பற்றின் காரணமா...