இயல்பு வழக்கு

வழக்கின் வகைகள்
தமிழ் இலக்கணத்தில் வழக்கு இருவகைப்படும்.
  1. இயல்பு வழக்கு
  2. தகுதி வழக்கு
இயல்பு வழக்கு
ஒரு பொருளுக்கு அமைந்துள்ள இயல்பான சொல்லால் அப்பொருளை வழங்குவது இயல்பு வழக்கு எனப்படும். இது
  1. இலக்கணம் உடையது
  2. இலக்கணப்போலி
  3. மரூஉ அல்லது மரூஉ மொழி என மூவகைப்படும்.
1. இலக்கணம் உடையது
இலக்கண நெறிப்படி முறையாக வரும் வழக்கு இலக்கணம் உடையது எனப்படும். சான்று:
நிலம், நீர், தீ, வளி, வெளி, மண், மலை. முதலியன.

2. இலக்கணப்போலி
இலக்கணம் இல்லாததாயினும் இலக்கணம் உடையதைப் போல சான்றோர்களால் தொன்று தொட்டு வழங்கப்படுவது இலக்கணப் போலி எனப்படும்.

சான்று:
இல்முன் → முன்றில்
கால்வாய் → வாய்க்கால்
கோவில் → கோயில்
நகர்ப்புறம் → புறநகர்
மிஞிறு → ஞிமிறு
கண்மீ → மீகண்
தசை → சதை
கொம்பு நுனி → நுனிக் கொம்பு
தடித்த எழுத்தில் உள்ளவை சரியான சொற்களின் இலக்கணப்போலிகள் ஆகும். நிலைமொழிகள் முன் பின்னாக மாறிவருதல் போலி. இவ்வாறு பயின்று வருதல் பிழை இல்லை என்று கருதப்படுகிறது.

இலக்கணப் போலி
1.முதற்போலி 
2. இடைப் போலி
3.கடைப்போலி  என மூவகைப்படும்

சான்று
1.முதற்போலி -  மஞ்சு -மைஞ்சு
2. இடைப் போலி - அரசன் - அரைசன்
3.கடைப்போலி - அறம் -அறன்

3. மரூஉ
தொன்று தொட்டு வழங்கி வருதல் மட்டுமின்றி, இடையில் சில எழுத்துகள் தோன்றியும் திரிந்தும் கெட்டும் இலக்கணம் சிதைந்து, தானே மருவி (மாறி) வழங்குவது மரூஉ என வழங்கப்படும்.

சான்று:
அருமருந்தன்ன → அருமந்த
தொண்டைமாநாடு → தொண்டைநாடு
தெற்குள்ளது → தெனாது
மலையமானாடு → மலாடு
பொழுது → போது
வாயில் → வாசல்
குளவாம்பல் → குளாம்பல்
உறையூர் → உறந்தை
கும்பகோணம் → குடந்தை
தஞ்சாவூர் → தஞ்சை
திருச்சிராப்பள்ளி → திருச்சி
கோயம்புத்தூர் → கோவை
இவ்வாறுசிதைந்து வருவது மரூஉ எனப்படும்.

No comments:

Post a Comment

இன்பத்தமிழ் - Class 6 Tamil New Syllabus Term 1

தமிழ் வணக்கம்   தற்கால இலக்கிய மரபாகிவிட்டது  பாரதிதாசனின் இயற்பெயர்   சுப்புரத்தினம்.  பாரதியாரின் கவிைதகள்  மீது கொண்ட  பற்றின் காரணமா...