ஓய்வாக இருக்கையிலே தம்பி - நீ
ஓவியம் வரைந்து பழகு !
தூய்மையோ டமைதி சேரும் - நன்கு
தோன்றிடும் உள்ள அழகு !
பாக்களும் இயற்றிப் பழகு - நல்லப்
பாடலைப் பாடி மகிழ்வாய் !
தாக்குறும் துன்பம் யாவும் - இசைத்
தமிழினில் மாய்ந்து போகும் !
அறிவியல் ஆய்வு செய்வாய் - நீ
அன்றாடச் செய்தி படிப்பாய்!
செறிவுறும் உன்றன் அறிவு - உளச்
செழுமையும் வலிவும் பெறுவாய்!
மருத்துவ நூல்கள் கற்பை - உடன்
மனநூலும் தேர்ந்து கற்பாய்!
திருத்தமெய்ந் நூல்கள் அறிவாய் -வருந்
தீமையடையும் பொய்யும் களைவாய்!
-பெருஞ்சித்திரனார்
ஆசிரியர் குறிப்பு:
- பாவலேறு பெருஞ்சித்திரனார் அவர்களின் இயற்பெயர் துரை.மாணிக்கம்
- இவர் சேலம் மாவட்டம் சமுத்திரம் பகுதியை சேர்ந்தவர்.
- பெற்றோர் - துரைசாமி, குஞ்சம்மாள்
- 10.03.1933 அன்று பிறந்த இவர் 11.06.1995 ஆம் தேதி மறைந்தார்.
- கனிச்சாறு, ஐயை, கொய்யாக்கனி, பாவியக்கொத்து, பள்ளிப்பறவைகள், நூறாசிரியம் போன்ற நூல்களை இயற்றியுள்ளார்.
- தென்மொழி, தமிழ்ச்சிட்டு, தமிழ்நிலம் ஆகிய இதழ்கள் மூலம் தமிழ் உணர்வை ஊட்டினார்.
No comments:
Post a Comment