செம்மொழித் தமிழ் - 7 ஆம் வகுப்பு சமச்சீர்


உலக மொழிகள்:
  • உலகத்தில் ஆறாயிரத்திற்கும் மேற்பட்ட மொழிகள் உள்ளன. அவற்றுள் பல பேச்சு மொழிகளே.
  •  "எளிதில் பேசவும், எளிதில் பாடல் இயற்றவும் இயற்கையாக அமைந்தது தென்மொழியாகிய தமிழ் ஒன்றே" என்று வள்ளலார் அருள்கிறார்.
செம்மொழிகள்:
  • திருந்திய செவ்வியல்புகள் பொருந்திய மொழிகள் செம்மொழிகள் எனப்படும்.
  • கிரேக்கம், இலத்தின், சமஸ்கிருதம், சீனம், எபிரேயம், அரபு, ஈப்ரு ஆகியவற்றை செம்மொழிகள் எனப் பட்டியலிடுகிறார் மொழியியல் அறிஞர் ச.அகத்தியலிங்கம்.
திருக்குறள் பற்றி டாக்டர் கிரெளல்:
  • டாக்டர் கிரெளல், "தமிழ்மொழி அழகான சித்திர வேலைப்பாடமைந்த வெள்ளித்தட்டு, திருக்குறள் அதில் வைக்கப்பட்டுள்ள தங்க ஆப்பிள், தமிழ் என்னை ஈர்த்தது, குறளோ என்னை இழுத்தது" என்று மொழிந்து இன்புற்றார்.
தமிழின் தொன்மை:
  • உலகில் பழமையான நிலபகுதியான "குமரிக்கண்டத்தில்" தமிழ் தோன்றியதாக "தண்டியலங்கார" மேற்கோள் செய்யுள் கூறுகிறது.
"ஒங்க லிடைவந் துயர்ந்தோர் தொழவிளங்கி
ஏங்கொலிநீர் ஞாலத் திருளகற்றும் - ஆங்கவற்றுள்
மின்னேர் தனியாழி வெங்கதிரொன் றேனையது
தன்னே ரிலாத தமிழ்"

தமிழின் மேன்மை:
  • தமிழ் மெல்லலோசை மொழி, அதனாலேயே உலக முதன் மொழியாய்த் தோன்றியும் வழக்கொழியாமல் இன்றும் இளமை மாறாமல் கன்னித்தமிழாய் இருந்து வருகிறது.
தமிழ் மொழியின் தாய்மை:
  • பெற்றோரை குறிக்கும் "அம்மை, அப்பன்" என்னும் குமரிநாட்டுத் (நாஞ்சில் நாடு) தமிழ்ச்சொற்கள், வடமொழி உட்பட உலகப் பெருமொழிகள் பலவற்றிலும் வடிவு திரிந்து வழங்கி வருகின்றன.
தமிழ் மொழியின் தூய்மை:
  • "தமிழ் பிறமொழித் துணையின்றித் தனித்து இயக்குவது மட்டுமின்றித் தழைத்தோங்கவும் செய்யும்" என்று கூறினார் கால்டுவெல்.
தமிழ் மொழியின் செம்மை:
  • மொழிக்கு இலக்கான வரம்பும் சொற்களின் திருந்திய வடிவும் அவசியம். இவற்றை தமிழில் உள்ளது போல, வேறு எம்மொழியிலும் காண இயலாது. அதனாலேயே தமிழ், "செந்தமிழ்" எனப்பட்டது.
தமிழ் மொழியின் மும்மை:
  • முதற்சங்கத்திலிருந்தே இசையும் நாடகமும் இயற்றமிழோடு இணைந்து முத்தமிழென வழங்கி வரலாயிற்று. முதலிரு சங்கத்திலும் வழங்கிய இலக்கண நூல்கள் முத்தமிழ் பற்றியனவாகவே இருந்தன.
தமிழ் மொழியின் இயற்கை வளர்ச்சி:
  • "எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே"என்பது தொல்காப்பிய நூற்பா.
  • தமிழில் இடுகுறி பெயர்கள் குறைவு.
  • ஒருமை, பன்மை என்னும் இருவகை எண் மட்டுமே தமிழில் உண்டு.
  • வடமொழியில் ஒருமை, இருமை, பன்மையென மூவகை எண் உள்ளன.
  • தமிழில் உயிர்களுக்கு மட்டுமே பால்வேறுபாடு உண்டு, பொருள்களுக்குப் பால்வேறுபாடு இல்லை.
தமிழ்மொழியின் இலக்கண நிறைவு:
  • எல்லா மொழிகளும் "எழுத்துக்கும் சொல்லுக்கும் இலக்கணம் கூறும். ஆனால் தமிழ் அவற்றுடன் சேர்த்து வாழ்வியலுக்கான பொருள் இலக்கணத்தையும்" கூறிகிறது. * அதனையும் " அகம், புறம்" என இருவகையாகப் பகுத்துள்ளது.
 தமிழ் மொழியின் செய்யுள் சிறப்பு:
  • பண்டைத் தமிழ் இலக்கியங்களும் செய்யுள் வடிவிலேயே இருந்தன.
  • "கலிப்பா" முதலான் செய்யுள் வகைகள் வேறு எம்மொழியிலும் இல்லை.
தமிழ் மொழியின் அணிச் சிறப்பு:
  • புலவர்கள் செய்யுளுக்குச் சிறப்புச் சேர்க்க "உவமை, உருவகம்" முதலிய நூற்றுக்கணக்கான அணிகளைப் பயன்படுத்திப் பாடல்களை இயற்றியுள்ளார்கள்.
தமிழ் மொழியின் நூல் சிறப்பு:
  • ஆயிரக்கணக்கான தமிழ் நூல்கள் இயற்கைச் சீற்றங்களால் அழிந்துபோயின. கிடைத்தவற்றுள் சங்ககால நூல்கள் தமிழர்தம் மொழியையும் பண்பாட்டையும் விளக்குவனவாகத் திகழ்கின்றன.
  • விழுமிய வியத்தகு பண்பாடுகளையும் நூல்களையும் கொண்டது தமிழ்மொழி.
  • உலகின் மிகப்பழமையான நிலப்பகுதி - குமரிக்கண்டம்.
  • இன்று பேச்சு வழக்கில் இல்லாத மொழிகள் - கிரேக்கம், இலத்தீன், சமஸ்கிருதம்.
  • தொல்காப்பியம், பத்துப்பாட்டு, எட்டுத்தொகை, பதினெண்கீழ்க் கணக்கு, சிலப்பதிகாரம், மணிமேகலை, முத்தொள்ளாயிரம், இறையனார் அகப்பொருள் ஆகிய செவ்வியல் இலக்கியங்கள் ஆகும்.
  • பதினெண்கீழ்க்கணக்கில் ஒன்றான திருக்குறளுக்கு இணையான வேறு நூல் உலகில் இல்லை.
  • உலகின் மிகப்பழமையான நிலப்பகுதி - குமரிக்கண்டம்
  • தொல்காப்பிய நூற்பா என்பது - எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே.

No comments:

Post a Comment

இன்பத்தமிழ் - Class 6 Tamil New Syllabus Term 1

தமிழ் வணக்கம்   தற்கால இலக்கிய மரபாகிவிட்டது  பாரதிதாசனின் இயற்பெயர்   சுப்புரத்தினம்.  பாரதியாரின் கவிைதகள்  மீது கொண்ட  பற்றின் காரணமா...