இனியவை நாற்பது -8 ஆம் வகுப்பு சமச்சீர்

tnpsctamilnotes.blogspot.com

குழவி பிணியின்றி வாழ்தல் இனிதே
கழறும் அவையஞ்சான் கல்வி இனிதே
மயரிக ளல்லராய் மாண்புடையார்ச் சேரும்
திருவுந்தீர் வின்றேல் இனிது.

சலவரைச் சாரா விடுதல் இனிதே
புலவர்தம் வாய்மொழி போற்றல் இனிதே
மலர்தலை ஞாலத்து மன்னுயிர்க் கெல்லாம்
தகுதியால் வாழ்தல் இனிது
- பூதந்சேந்தனார்.

சொற்பொருள்:
  • குழவி - குழந்தை
  • பிணி - நோய்
  • கழறும் - பேசும்
  • மயரி - மயக்கம்
  • சலவர் - வஞ்சகம்
  • மன்னுயிர் - நிலைபெற்ற உயிர்
ஆசிரியர் குறிப்பு:
  • பெயர் - மதுரைத் தமிழாசிரியர் மகனார் பூதந்சேந்தனார்.
  • ஊர் - மதுரை
  • காலம் - கி.பி. இரண்டாம் நூற்றாண்டு
நூல் குறிப்பு:
  • பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று.
  • இனிய கருத்துக்களை நாற்பது பாடல்களில் தொகுத்துரைப்பதால் இனியவை நாற்பது எனப் பெயர்பெற்றது.
  • ஒவ்வொரு பாடலும் மூன்று அல்லது நான்கு நற்கருத்துகளை இனிமையாகக் கூறும்.

No comments:

Post a Comment

இன்பத்தமிழ் - Class 6 Tamil New Syllabus Term 1

தமிழ் வணக்கம்   தற்கால இலக்கிய மரபாகிவிட்டது  பாரதிதாசனின் இயற்பெயர்   சுப்புரத்தினம்.  பாரதியாரின் கவிைதகள்  மீது கொண்ட  பற்றின் காரணமா...