திரு.வி.கலியாணசுந்தனாரின் தமிழ்ப்பணி - 9 ஆம் வகுப்பு சமச்சீர்


பிறப்பும் கல்வியும்:
  • சென்னைக்கு அருகே துள்ளம் என்னும் ஊரில் விருதாச்சலனார் - சினம்மையாரின் மகனாக 26.08.1883 ஆம் நாள் பிறந்தார்.
  • சென்னை ராயப்பேட்டை வெஸ்லி பள்ளியில் படித்தார்.
  • கதிரைவேலனாரிடம் தமிழ் இலக்கியங்களையும் சைவ சித்தாந்த சாத்திரங்களையும் படித்தார்.
தமிழ் பற்று:
  •  "எங்கும் தமிழ், எதிலும் தமிழ்" என்பதை முழு மூச்சாக கொண்டார்.
  • வடமொழிச் சொற்களை கலவாமல் தூய தமிழிலே எழுதவும் பேசவும் செய்தார்.
பிறமொழியறிவு:
  • தமிழை வளர்க்க பிற மொழியை வெறுக்க வேண்டும் என்பது பொருளல்ல என்றார்.
  • ஆங்கிலத்தில் மிக்க புலமை பெற்றிருந்தார்.
  • காந்தியடிகள் தமிழகம் வந்த போதெல்லாம் அவரின் மேடை பேச்சை மொழிபெயர்த்தார்.
இளைஞர்களுக்கு அறிவுரை:
  • இளைஞர்களே! தமிழுலகின் இழிந்த நிலை ஒருங்கள்; ஓர்ந்து உங்கள் பொறுப்பை உணருங்கள்; தமிழ்த்தையைப் புதுப்போர்வையில் ஒப்பனை செய்து அரியாசனத்தில் அமர்த்த சூள்கொண்டு எழுங்கள்; எழுங்கள்; பழந்தமிழ் வீரத்துடன் எழுங்கள்" என்று அறைகூவல் விடுத்தார்.
பேசுப்பணி:
  • "திரு.வி.க நடை" என்ற ஒரு தனி நடையை நடைமுறைப் படுத்தினார்.
  • பேசுவது போலவே எழுதுவது, எழுதுவது போலவே பேசுவது ஆகும்.
  • அறிஞர் அண்ணா உள்ளிட்ட அக்கால இளைஞர்களை தன் உணர்ச்சிமிகு பேச்சால் தம்பால் ஈர்த்தார்.
எழுத்துப்பணி:
  • உரைநடை எழுதுவது எனது தொழில் என்று கூறினார்.
  • "அவருக்கு வாய்ந்த மொழிநடை மலை எனத் தமிழுலகில் ஓங்கி உயர்ந்துள்ளது" என்று தெ.பொ.மீனாட்சிசுந்தரனார் பாராட்டி உள்ளார்.
 உரைநடை நூல்கள்:
  • மனித வாழ்கையும் காந்தியடிகளும்
  • பெண்ணின் பெருமை அல்லது வாழ்க்கைத் துணைநலம்
  • இமயமலை அல்லது தியானம்
  • முருகன் அல்லது அழகு
  • சைவத்திறவு
  • சைவத்தின் சமரசம்
  • கடவுட் காட்சியும் தாயுமானவரும்
  • இராமலிங்க சுவாமிகள் திருவுள்ளம்
  • தமிழ்நாடும் நம்மாழ்வாரும்
  • நாயன்மார் வரலாறு
  • தமிழ்நூல்களில் பெளத்தம்
  • காதலா? முடியா? சீர்திருத்தமா?
  • என் கடன் பணிசெய்து கிடப்பதே
  • இந்தியாவும் விடுதலையும்
  • தமிழ்ச்சோலை
  • உள்ளொளி
செய்யுள் நூல்கள்:
  • முருகன் அருள்வேட்டல்
  • திருமால் அருள்வேட்டல்
  • கிருத்துவின் அருள்வேட்டல்
  • அருகன் அருள்வேட்டல்
  • உரிமை வேட்டல்
  • பொதுமை வேட்டல்
  • பொருளும் அருளும் அல்லது மார்க்சியமும் காந்தியடிகளும்
இதழ்ப்பணி:
  • தேசபக்தன், நவசக்தி என்னும் இதழ்களின் வாயிலாகத் தொழிலாளர் முன்னேற்றம் பெறப் பாடுபட்டார்.
தமிழ் வாழ்வினர்:
  • வயதாகி படுக்கையில் இருந்த போதும் வளர்ச்சியும் வாழ்வும் அல்லது படுகைப் பிதற்றல்" என்னும் நூலை மு.வ உதவியுடன் வெளியிட்டார்.
  • அவர் மனைவி இறந்த போதும், "நான் தனியாக வாழவில்லை; தமிழோடு வாழ்கிறேன்" எனக் கூறியவர்.
  • 1953 ஆம் ஆண்டு செப்டம்பர் திங்கள் பதினேழாம் நாள் தமது எழுபத்தோரம் வயதில் இறந்தார்

No comments:

Post a Comment

இன்பத்தமிழ் - Class 6 Tamil New Syllabus Term 1

தமிழ் வணக்கம்   தற்கால இலக்கிய மரபாகிவிட்டது  பாரதிதாசனின் இயற்பெயர்   சுப்புரத்தினம்.  பாரதியாரின் கவிைதகள்  மீது கொண்ட  பற்றின் காரணமா...