பிரேசிலின் அதிபராக, அந்த நாட்டின் தற்போதைய அதிபர் தில்மா ரூசெஃப் இரண்டாவது முறையாக பொறுப்பேற்றுக் கொண்டார்.
கடந்த அக்டோபர் மாதம் நடைபெற்ற பொதுத் தேர்தலில், கடுமையான போட்டிக்கிடையில் அவர் வெற்றியடைந்ததைத் தொடர்ந்து, அந்தப் பதவிக்கு அவர் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
ஏறத்தாழ நூறு ஆண்டுகளுக்குப் பிறகு, தொடர்ந்து ஏழாவது முறையாக ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒருவர் பிரேசில் அதிபராகப் பதவியேற்பது குறிப்பிடத்தக்கது.
102-வது இந்திய அறிவியல் மாநாடு
மும்பை பல்கலைக்கழகம் சார்பில் நடைபெறும் 102-வது இந்திய அறிவியல் மாநாட்டினை பிரதமர் நரேந்திர மோடி 03 ஜனவரி 2015 தொடங்கி வைத்தார்.
5 நாள்களுக்கு நடைபெறும் இம்மாநாட்டு நிகழ்ச்சிகள் தொழில்நுட்பம், மனிதவள மேம்பாடு ஆகியவற்றின் அடிப்படையில் இருக்கும் என மும்பை பல்கலைக்கழக துணைவேந்தர் ராஜன் வேளுகர் அறிவித்துள்ளார். இந்திய அறிவியல் மாநாட்டில், நோபல் பரிசு பெற்ற அறிஞர்கள், பிரபல விஞ்ஞானிகள், சர்வதேசப் பிரதிநிதிகள் உள்பட 12 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்க உள்ளனர். இன்றைய மாநாட்டில் நாட்டின் அறிவியல் வளர்ச்சி தொடர்பாக பல்வேறு திட்டங்களை பிரதமர் மோடி அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நக்ஸல்களை ஒடுக்க புதிய திட்டம்
ஒடிஸா- சத்தீஸ்கர்- ஆந்திர எல்லை நெடுகிலும் மாவோயிஸ்டுகளுக்கு எதிரான தாக்குதல்களை மத்திய அரசு தீவிரப்படுத்தவிருக்கிறது.
சத்தீஸ்கரிலும், ஆந்திரத்திலும் தொடர்ச்சியாக வன்முறைச் செயல்களில் ஈடுபட்டுவிட்டு ஒடிஸாவின் எல்லையோர மாவட்டங்களில் நக்ஸல்கள் பதுங்கியிருப்பதாக உளவுத் தகவல்கள் கூறுவதையடுத்து, அவர்கள் மீதான தாக்குதலைத் தீவிரப்படுத்த புதிய வழிகாட்டு நடைமுறைகளை மத்திய அரசு தயாரித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேற்கண்ட 3 மாநிலங்களின் எல்லைப் பகுதிகளிலும் இத்தாக்குதல் தொடங்கவிருக்கிறது. எல்லைப் பாதுகாப்புப் படை, மத்திய ரிசர்வ் போலீஸ் படை (சிஆர்பிஎஃப்), கோப்ரா அதிரடிப் படை ஆகியவை இணைந்து இத்தாக்குதலை கூட்டாக நடத்தும். இந்த தாக்குதல் நடவடிக்கைக்கு "ஆபரேஷன் ஆல் அவுட்' என பெயர் சூட்டப்பட்டுள்ளது என போலீஸ் உயரதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
பெண்கள் பாதுகாப்புக்கு கைப்பேசியில் நவீன வசதி
பெண்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு தில்லி காவல் துறைக்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட "ஹிம்மத்' (துணிச்சல்) என்ற "ஆன்ட்ராயிட்' கைப்பேசிகளுக்கான மென்பொருளை (அப்ளிகேஷன்) மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வியாழக்கிழமை (1, ஜனவரி ) அறிமுகப்படுத்தினார்.
தானாக இயங்கும் ரயில்
நாட்டிலேயே முதன் முறையாக, தானாக இயங்கும் ரயில் சேவையை ஹைதராபாத் மெட்ரோ ரயில் நிர்வாகம் பரிசோதனை செய்தது.இந்த சோதனை ஓட்டம், நகோல் ரயில் நிலையத்தில் இருந்து மேட்டுகுடா ரயில் நிலையம் வரை மேற்கொள்ளப்பட்டது.

திட்டக் குழுவுக்கு புதிய பெயர்
மத்திய அரசின் திட்டக் குழுவுக்கு ஆங்கிலப் புத்தாண்டு பிறப்பில் புதிய பெயர் சூட்டப்பட்டுள்ளது.
இதுவரை திட்டக் குழு என்றழைக்கப்பட்டது இனிமேல் நிதி ஆயோக்(மத்திய கொள்கைக் குழு) என்ற பெயரில் அழைக்கப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
கடந்த 65 ஆண்டுகளாகச் செயல்பட்டு வந்த திட்டக் குழுவுக்கு மாற்றாக "மத்திய கொள்கைக் குழு' என்ற புதிய அமைப்பை மத்திய அரசு வியாழக்கிழமை உருவாக்கியது. மத்திய, மாநில அரசுகளுக்கு கொள்கைகளை வகுக்கும் நிபுணர் குழுவாகச் செயல்பட உள்ள இந்த அமைப்பின் தலைவராக பிரதமர் நரேந்திர மோடி இருப்பார்.
சமையல் எரிவாயு நேரடி மானியத் திட்டம்
சமையல் எரிவாயு உருளைக்கான மானியத் தொகையை வாடிக்கையாளர்களுக்கு, அவர்களது வங்கிக் கணக்கில் அரசே நேரடியாகச் செலுத்தும் "பஹால்' திட்டம்
நாடு முழுவதும் வியாழக்கிழமை (ஜனவரி 1) முதல் அமல்படுத்தப்படுகிறது.
இந்தத் திட்டம் அமல்படுத்தப்படுவதால், வாடிக்கையாளர்களுக்கு இனிமேல் சந்தை விலையில் சமையல் எரிவாயு உருளைகள் விநியோகிக்கப்படும். அதன்பிறகு, அவர்களின் வங்கிக் கணக்கில் மானியத்துக்கான தொகை அரசால் செலுத்தப்படும்.நேரடி மானியம் செலுத்தும் திட்டம் என்று மத்திய அரசால் முன்பு பெயரிடப்பட்டிருந்த இந்த திட்டம், "பஹால்' என தற்போது பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment