தகுதி வழக்கு

பொருள்களுக்கு அல்லது செயல்களுக்கு இயல்பாய் அமைந்த சொற்களை வழங்குவது தகுதியன்று எனக்கருதி, அவற்றை ஒழித்து (மறைத்து) தகுதியான வேறு சொற்களால் அப்பொருள்களை அல்லது செயல்களை வழங்குதல் தகுதி வழக்கு எனப்படும். அனைவரின் முன்னும் பேசத்தாகாத சொற்களுக்குப் பதிலியாக தகுதியான சொற்களைப் பேசுதலாம்.

தகுதிவழக்கின் வகைகள்

  1. இடக்கரடக்கல்
  2. மங்கலம்
  3. குழூஉக்குறி  என மூன்று வகைப்படும்.

1. இடக்கரடக்கல்
நன்மக்களிடத்தில் அல்லது சான்றோர்கள் அவையில் கூறத்தகாத சொற்களை மறைத்துப் பிற சொற்களால் கூறுவது 'இடக்கரடக்கல்' எனப்படும்.
சான்று:
மலம் கழுவி வந்தேன் → கால் கழுவி வந்தேன்.
மலம் என்ற சொல்லின் இடக்கரடக்கலாக 'கால்' என்ற சொல் வழங்கி வருகிறது)

2. மங்கலம்
மங்கலமல்லாத சொற்களைக் கூறாமல் ஒழித்து, மங்கலமான சொற்களைக் கூறுதல் 'மங்கலம்' எனப்படும்.
சான்று:
செத்தார் → துஞ்சினார், இறைவனடி சேர்ந்தார்
சுடுகாடு → நன்காடு
ஓலை → திருமுகம்
பொய்யாகிய உடல் → மெய்
தாலி அறுந்தது → தாலி பெருகிற்று
கருப்பு ஆடு → வெள்ளாடு

3. குழூஉக்குறி
ஒரு குறிப்பிட்ட கூட்டத்தைச் சேர்ந்தவர்கள் ஏதேனும் ஒரு காரணத்தால் ஒரு பொருளை அல்லது செயலைக் குறிக்கும் சொல்லை ஒழித்து, வேறொரு சொல்லால் அப்பொருளை அல்லது அச்செயலைக் குறிப்பிடுவது 'குழூஉக்குறி' எனப்படும்.
சான்று:
பொன் → பறி( பொற்கொல்லர் பயன்படுத்துவது)
கள் → சொல்விளம்பி(வேடர்கள் பயன்படுத்துவது)
ஆடை → காரை(யானைப்பாகர் பயன்படுத்துவது)

No comments:

Post a Comment

இன்பத்தமிழ் - Class 6 Tamil New Syllabus Term 1

தமிழ் வணக்கம்   தற்கால இலக்கிய மரபாகிவிட்டது  பாரதிதாசனின் இயற்பெயர்   சுப்புரத்தினம்.  பாரதியாரின் கவிைதகள்  மீது கொண்ட  பற்றின் காரணமா...