1.செயற்கரிய யாவுள நட்பின் அதுபோல்
வினைக்கரிய யாவுள காப்பு.
2.நிறைநீர நீரவர் கேண்மை பிறைமதிப்
பின்னீர பேதையார் நட்பு.
3.நவில்தொறும் நூல்நயம் போலும் பயில்தொறும்
பண்புடை யாளர் தொடர்பு.
4.நகுதற் பொருட்டன்று நட்டல் மிகுதிக்கண்
மேற்செனறு இடித்தற் பொருட்டு.
5.புணர்ச்சி பழகுதல் வேண்டா உணர்ச்சிதான்
நட்பாங் கிழமை தரும்.
6.முகநக நட்பது நட்பன்று நெஞ்சத்து .
அகநக நட்பது நட்பு.
7.அழிவி னவைநீக்கி ஆறுய்த்து அழிவின்கண்
அல்லல் உழப்பதாம் நட்பு.
8.உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே
இடுக்கண் களைவதாம் நட்பு.
9.நட்பிற்கு வீற்றிருக்கை யாதெனின் கொட்பின்றி
ஒல்லும்வாய் ஊன்றும் நிலை.
10.இனையர் இவரெமக்கு இன்னம்யாம் என்று
புனையினும் புல்லென்னும் நட்பு.
வினைக்கரிய யாவுள காப்பு.
2.நிறைநீர நீரவர் கேண்மை பிறைமதிப்
பின்னீர பேதையார் நட்பு.
3.நவில்தொறும் நூல்நயம் போலும் பயில்தொறும்
பண்புடை யாளர் தொடர்பு.
4.நகுதற் பொருட்டன்று நட்டல் மிகுதிக்கண்
மேற்செனறு இடித்தற் பொருட்டு.
5.புணர்ச்சி பழகுதல் வேண்டா உணர்ச்சிதான்
நட்பாங் கிழமை தரும்.
6.முகநக நட்பது நட்பன்று நெஞ்சத்து .
அகநக நட்பது நட்பு.
7.அழிவி னவைநீக்கி ஆறுய்த்து அழிவின்கண்
அல்லல் உழப்பதாம் நட்பு.
8.உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே
இடுக்கண் களைவதாம் நட்பு.
9.நட்பிற்கு வீற்றிருக்கை யாதெனின் கொட்பின்றி
ஒல்லும்வாய் ஊன்றும் நிலை.
10.இனையர் இவரெமக்கு இன்னம்யாம் என்று
புனையினும் புல்லென்னும் நட்பு.
சொற்பொருள்:
- வினை - செயல்
- காப்பு - காவல்
- நீரவர் - அறிவுடையார்
- கேண்மை - நட்பு
- பேதையார் - அறிவிலார்
- நவில்தொறும் - கற்கக்கற்க
- நயம் - இன்பம்
- நகுதல் - சிரித்தல்
- நட்டல் - நட்புக்கொள்ளுதல்
- இடித்தல் - கடிந்துரைத்தல்
- கிழமை - உரிமை
- முகநக - முகம் மலர
- அகம் - உள்ளம்
- ஆறு - நல்வழி
- உய்த்து - செலுத்தி
- அல்லல் - துன்பம்
- உடுக்கை - ஆடை
- இடுக்கண் - துன்பம்
- களைவது - நீக்குவது
- கொட்பின்றி - வேறுபாடு இல்லாமல்
- ஊன்றும் - தாங்கும்
- புனைதல் - புகழ்தல்
- புல் - கீழான
ஆசிரியர் குறிப்பு:
- பெயர் - திருவள்ளுவர்
- வேறுபெயர்கள்: முதற்பாவலர், பொய்யில் புலவர், பெருநாவலர், செந்நாப்போதார்
- காலம் - கி.மு.31ம் நூற்றாண்டு.
- சிறப்பு: பாரதியார் இவரை "வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து வான்புகழ் கொண்ட தமிழ்நாடு " என்றார்.
- பாரதிதாசன் இவரை : வள்ளுவனைப் பெற்றதால் பெற்றதே புகழ் வையகமோ" என்றார்.
- இது பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று.
- குறள் வெண்பாக்களால் ஆனதால், குறள் எனவும், மேன்மை கருதி திரு என்னும் அடைமொழியுடன் திருகுறள் எனவும் அழைக்கப்பெறுகிறது.
- இது "உலகப்பொதுமறை" என போற்றப்படுகிறது.
- வாயுறை வாழ்த்து, பொதுமறை, பொய்யா மொழி, தெய்வ நூல் முதலிய பெயர்களும் இதற்கு உண்டு.
- உருசிய நாட்டில் அணு துளைக்காத கிரெம்ளின் மாளிகையில் உள்ள சுரங்கப் பாதுகாப்புப் பெட்டகத்தில் திருக்குறளும் இடம்பெற்றுள்ளது.
- இங்கிலாந்து நாட்டுக் காட்சிச்சாலையில் திருக்குறள் விவிலியத்துடன் வைக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment