கேள்வி - திருக்குறள் - 9 ஆம் வகுப்பு சமச்சீர்


1.செல்வத்துட் செல்வஞ் செவிச்செல்வம் அச்செல்வம் 
செல்வத்து ளெல்லாந் தலை.
2.செவுக்குண வில்லாத போழ்து சிறிது 
வயிற்றுக்கும் ஈயப் படும்.
3.செவியுணவிற் கேள்வி யுடையார் அவியுணவின் 
ஆன்றாரோ டொப்பர் நிலத்து.
4.கற்றில னாயினுங் கேட்க அஃதொருவற்கு 
ஒற்கத்தின் ஊற்றாந் துணை..
5.இழுக்கல் உடையுழி ஊற்றுக்கோல் அற்றே 
ஒழுக்க முடையார்வாய்ச் சொல்.
6.எனைத்தானும் நல்லவை கேட்க அனைத்தானும் 
ஆன்ற பெருமை தரும்
7.பிழைத்துணர்ந்தும் பேதைமை சொல்லா ரிழைத்துணர்ந் 
தீண்டிய கேள்வி யவர்.
8.கேட்பினுங் கேளாத் தகையவே கேள்வியால் 
தோட்கப் படாத செவி.
9.நுணங்கிய கேள்விய ரல்லார் வணங்கிய 
வாயின ராதல் அரிது.
10.செவியிற் சுவையுணரா வாயுணர்வின் மாக்கள் 
அவியினும் வாழினும் என்.

சொற்பொருள்:
  • செவிச்செல்வம் - கேள்விச்செல்வம்
  • தலை - முதன்மை
  • போழ்து - பொழுது
  • ஈயப்படும் - அளிக்கப்படும்
  • ஆவி உணவு - தேவர்களுக்கு வேல்வியின்போது கொடுக்கப்படும் உணவு
  • ஆன்றோர் - கல்வி, கேளவி, பண்பு
  • ஒப்பர் - நிகராவர்
  • ஒற்கம் - தளர்ச்சி
  • ஊற்று - ஊன்றுகோல்
  • ஊற்றுக்கோல் - ஊன்றுகோல்
  • ஆன்ற - நிறைந்த
  • வணங்கிய - பணிவான
  • அற்றே - போன்றதே
  • எனைத்தானும் - எவ்வளவு சிறிதே ஆயினும்
  • அனைத்தானும் - கேட்ட அளவிற்கு
  • பிழைத்துணர்ந்தும் - தவறாக உணர்ந்திருந்தாலும்
  •  பேதைமை - அறியாமையின் பாற்பட்ட தீய சொற்கள்.
  • இழைத்துணர்ந்து - நுட்பமாக ஆராய்ந்து
  • ஈண்டிய ஆய்ந்தறிந்த
  • தகையவே - நுட்பமாகிய
  • வணங்கிய - பணிவான
  • வாயினராதல் - மொழியினை உடையவர்
  • வாயுணர்வின் மாக்கள் -உணவுச் சுவை மட்டும் அறிந்தோர்.
  • அவியினும் - இறந்தாலும்
 இலக்கணக் குறிப்பு:
  • வயிற்றுக்கும் - இழிவு சிறப்பும்மை
  • கேட்க - வியங்கோள் வினைமுற்று
  • இழுக்கல், ஒழுக்கம் - தொழிற்பெயர்கள்
  • ஆன்ற - பெயரெச்சம்
  • அவியினும் வாழியினும் - எண்ணும்மை
  • அவியுணவு - இரு பெயரொட்டுப் பண்புத்தொகை
  • ஊற்றுக்கோல் - ஊன்று கோல் என்பதன் வலித்தல் விகாரம்
  • ஆன்ற பெருமை - பெயரெச்சம்
  • கேளாத் தகையவே - ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம் 
பிரித்தறிதல்:
  • சுவையுணரா = சுவை + உணரா
  • வாயுணர்வு = வாய் + உணர்வு
  • செவிக்குணவு = செவிக்கு + உணவு
 பொதுவான குறிப்புகள்:
  • திருக்குறளில் பத்து அதிகாரப் பெயர்கள் உடைமை என்னும் சொல்லில் அமைந்துள்ளன.
  • திருக்குறள் ஏழு சீர்களால் அமைந்த வெண்பாக்களைக் கொண்டது.
  • ஏழு எண்ணுப்பெயர் எட்டுக் குறட்பாகளில் இடம்பெற்றுள்ளது.
  • அதிகாரங்கள் 133. இதன் கூட்டுத்தொகை ஏழு.
  • மொத்த குறட்பாக்கள் 1330. இதன் கூட்டுத்தொகை ஏழு.
  •  செவிக்குணவாவது - கேள்வி
  • ஒழுக்கமுடையார் வாய்ச்சொல் - ஊற்றுக்கோல்
  • உடைமைகள் பத்துதிருக்குறலில் பத்து அதிகாரப் பெயர்கள் உடைமை என்னும் சொல்லில் அமைந்துள்ளன. அவை:அன்புடைமை, அடக்கமுடைமை, ஒழுக்கமுடைமை, பொறையுடைமை, அருளுடைமை, அறிவுடைமை, ஊக்கமுடைமை, ஆள்வினையுடைமை, பண்புடைமை, நாணுடைமை .

No comments:

Post a Comment

இன்பத்தமிழ் - Class 6 Tamil New Syllabus Term 1

தமிழ் வணக்கம்   தற்கால இலக்கிய மரபாகிவிட்டது  பாரதிதாசனின் இயற்பெயர்   சுப்புரத்தினம்.  பாரதியாரின் கவிைதகள்  மீது கொண்ட  பற்றின் காரணமா...