பிள்ளைத்தமிழ் - இலக்கியம்


புலவர்கள் தம் அன்புக்குரிய ஒருவரைக் குழந்தையாக வைத்துப் பாடிமகிழ்ந்தார்கள். இதுவே பிள்ளைத்தமிழ் ஆயிற்று.
  • பெரியாழ்வார் பாடிய பிள்ளைத்தமிழ் பிள்ளைத்தமிழ் நூல்களுக்கு முன்னோடி.
  • பிள்ளைத்தமிழ் எனும் பெயரில் நமக்குக் கிடைக்கும் முதல் நூல் குலோத்துங்கன் பிள்ளைத்தமிழ். 
  • இது ஒட்டக்கூத்தரால் இயற்றப்பட்டது. கி.பி. 12-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது. இந்நூல் இரண்டாம் குலோத்துங்கச் சோழனைப் பாட்டுடைத் தலைவனாகக் கொண்டது.
  • பிள்ளைத்தமிழ் பற்றிய இலக்கணக் குறிப்பை முதலில் வழங்கும் நூல் தொல்காப்பியமே ஆகும்.
குழவி மருங்கினும் கிழவது ஆகும்
(தொல். பொருள். புறம். 24)
  • உரையாசிரியர் நச்சினார்க்கினியர் பிள்ளைத்தமிழ் இலக்கியத்திற்குரிய பத்துப் பருவங்களைச் சுட்டி இருக்கிறார்.
  •  காப்பு, செங்கீரை, தால், சப்பாணி, முத்தம், வருகை, அம்புலி, சிற்றில், சிறுதேர், சிறுபறை ஆகியன பிள்ளைத்தமிழின் பத்துப் பருவங்கள் ஆகும்
  • பொதுப்பருவங்கள் காப்பு, செங்கீரை, தால், சப்பாணி, முத்தம், வருகை, அம்புலி.
  • ஆண்பாற் பிள்ளைத்தமிழ் காப்பு, செங்கீரை, தால், சப்பாணி, முத்தம், வருகை, அம்புலி, சிற்றில், சிறுபறை, சிறுதேர் எனும் பத்துப் பருவங்களையுடையது. 
  • பெண்பாற் பிள்ளைத்தமிழில் காப்பு, செங்கீரை, தால், சப்பாணி, முத்தம், வருகை, அம்புலி, ஆகியவற்றைப் பொதுவாகக் கொண்டு இறுதியிலுள்ள மூன்று பருவங்களுக்கு பதிலாக அம்மானை ,நீராடல் ,ஊசல் ஆகியவற்றை உடையது.
புகழ் பெற்ற சில பிள்ளைத்தமிழ் நூல்கள்
  • மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ் - குமரகுருபரர்
  • முத்துக்குமார சாமி பிள்ளைத்தமிழ் - குமரகுருபரர்
  • திருச்செந்தூர் முருகன்  பிள்ளைத்தமிழ் - பகழிக்கூத்தர் 
  • சேக்கிழார் பிள்ளைத்தமிழ் - திரிசிரபுரம் மீனாட்சிசுந்தரம் பிள்ளை
  • திருமலை முருகன் பிள்ளைத்தமிழ் - கவிராசப் பண்ண்டாரத்தையா.
  • மறைமலையடிகள் பிள்ளைத்தமிழ் - சி அன்பானந்தம்
  • குலோத்துங்க சோழன் பிள்ளைத்தமிழ் - ஒட்டக்கூத்தர்
  • கலைசை செங்கழுநீர் விநாயகர் பிள்ளைத்தமிழ் - சிவஞான முனிவர்

No comments:

Post a Comment

இன்பத்தமிழ் - Class 6 Tamil New Syllabus Term 1

தமிழ் வணக்கம்   தற்கால இலக்கிய மரபாகிவிட்டது  பாரதிதாசனின் இயற்பெயர்   சுப்புரத்தினம்.  பாரதியாரின் கவிைதகள்  மீது கொண்ட  பற்றின் காரணமா...