திருக்குறள் - வாய்மை -7 ஆம் வகுப்பு சமச்சீர்


1.வாய்மை எனப்படுவது யாதுஎனின் யாதுஒன்றும்
தீமை இலாத சொலல்.  
2.பொய்ம்மையும் வாய்மை இடத்த, புரைதீர்ந்த
நன்மை பயக்கும் எனின்.  
3.தன்னெஞ்சு அறிவது பொய்யற்க பொய்த்தபின்
தன்நெஞ்சே தன்னைச் சுடும்.  
4.உள்ளத்தால் பொய்யாது ஒழுகின் உலகத்தார்
உள்ளத்துள் எல்லாம் உளன்.  
5.மனத்தொடு வாய்மை மொழியின் தவத்தொடு
தானம்செய் வாரின் தலை.  
6.பொய்யாமை அன்ன புகழ்இல்லை எய்யாமை
எல்லா அறமும் தரும்.  
7.பொய்யாமை பொய்யாமை ஆற்றின் அறம்பிற
செய்யாமை செய்யாமை நன்று.  
8.புறந்தூய்மை நீரான் அமையும் அகந்தூய்மை
வாய்மையால் காணப் படும்.  
9.எல்லா விளக்கும் விளக்கல்ல: சான்றோர்க்குப்
பொய்யா விளக்கே விளக்கு.  
10.யாமெய்யாக் கண்டவற்றுள் இல்லை எனைத்தொன்றும்
வாய்மையின் நல்ல பிற.

சொற்பொருள்:
  • புரை - குற்றம்
  • பயக்கும் - தரும்
  • சுடும் - வருத்தும்
  • அன்ன - அவை போல்வன
  • எய்யாமை - வருந்தாமை
  • அகம் - உள்ளம்
  • அமையும் - உண்டாகும்.
ஆசிரியர் குறிப்பு:
  • திருவள்ளுவர் சுருங்க சொல்லி விளங்க வைப்பதில் வல்லவர்.
  • சிறப்பு பெயர்கள்: நாயனார், முதற்பாவலர், நான்முகனார், மாதானுபாங்கி, செந்நாப்போதார், பெருநாவலர்
நூல் குறிப்பு:
  • மனிதன் மனிதனாக வாழ, மனிதன் மனிதனுக்குக் கூறிய அறவுரை தான் திருக்குறள்.
  • இந்நூல் அறத்துப்பால், பொருட்ப்பால், இன்பத்துப்பால் என்னும் முப்பெரும் பிரிவுகளைக் கொண்டது.
  • ஒவ்வோர் அதிகாரத்திற்கும் பத்துக் குறட்பாக்கள் என ஆயிரத்து முந்நூற்று முப்பது குறட்பாக்கள் உள்ளன.
  • இது பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று.
  • இது 107 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

இன்பத்தமிழ் - Class 6 Tamil New Syllabus Term 1

தமிழ் வணக்கம்   தற்கால இலக்கிய மரபாகிவிட்டது  பாரதிதாசனின் இயற்பெயர்   சுப்புரத்தினம்.  பாரதியாரின் கவிைதகள்  மீது கொண்ட  பற்றின் காரணமா...