- தமிழ்நாட்டில் நாயக்கர் மரபில் பெண்கள் முடிசூடி ஆட்சி செய்ததாக வரலாறு இல்லை.
- காப்பாட்சியாளராக ஆட்சி புரிந்து உள்ளனர்.
- மதுரையை ஆண்டு வந்த சொக்கநாத நாயக்கரின் மனைவி இராணி மங்கம்மாள்.
- இராணி மங்கம்மாளின் கணவர் இறந்தபோது அவர் மகன் அரங்க கிருஷ்ணமுத்துவீரப்பன் இளம் வயதினனாக இருந்தான், அவனுக்கு துணையாக இருக்க வேண்டும் என்னும் கடமை உணர்வினால் இராணி மங்கம்மாள் உடன்கட்டை ஏறவில்லை.
- மங்கம்மாள் தனது மகன் அரங்க கிருஷ்ணமுத்துவீரப்பனுக்குத் திருமணம் செய்வித்த பின்னர் முடிசூட்டினார்.
- அரசாட்சியை அடக்கத்தோடும் தந்திரத்தோடும் நாம் நோக்கவேண்டும்; முன்கோபமும் அதன் விளைவும் அரசியலில் ஒருபோதும் வெற்றியைத் தராது.
- பகைவரை எதிர்கொள்ள எப்போதும் ஆயத்த நிலையில் இருப்பதோடு மிகுந்த பொறுமையுடனும் செயல்பட வேண்டும்" என அறிவுரை கூறினார்.
- முத்துவீரப்பன், "நேர்மையை காட்டிலும் உயர்ந்த தெய்வம் இல்லை" என்ற கொள்கையுடன் ஆட்சி புரிந்தான்.
- முத்துவீரப்பன் இறந்த சில நாட்களில் அவன் மனைவி சின்னமுத்தம்மாள் ஒரு ஆண் குழந்தையை பெற்றெடுத்து, சில நாட்களில் அவரும் இறந்தார்.
- முத்துவீரப்பன் ஏழாண்டுக்காலம் ஆட்சி செய்தார்.
- அம்மைநோயால் பாதிக்கப்பட்டு உலக வாழ்வை நீத்தார்.
- கி.பி.1688 ஆண் ஆண்டு பெயரன் விசயரங்கச் சொக்கநாதன் பெயரளவில் அரியணை ஏற்றப்பட்டான்.
- பாட்டி மங்கம்மாள் காப்பாட்சியாளராக ஆட்சிப் பொறுப்பினை ஏற்றார்.
- அரசியல் பட்டறிவும், ஆட்சிப் பொறுப்பும் இராணி மங்கம்மாளின் மனத்தைக் கல்லாக்கியிருந்தன.
- கி.பி. 1688 ஆம் ஆண்டு பெயரன் விசயரங்கச் சொக்கநாதன் பெயரளவில் அரியணையில் ஏற்றப்பட்டான.
- மங்கம்மாள் துயரங்களைத் தாங்கிக்கொண்டு ஆட்சிக் கடமைகளை அழகுற ஆற்றக்கூடிய வீராங்கனை என மக்கள் போற்றிப் புகழ்ந்தனர்.
- திருவிதாங்கூரின் மன்னர் - இரவிவர்மா
- இராணி மங்கம்மாள் காலத்தில் மைசூர் மன்னன் - சிக்கதேவராயன்
- முகலாய பேரரசர் அவுரங்கசீப் தனது தக்கான நடவடிக்கை மேற்கொண்டிருந்த நேரம் மங்கம்மாள் பெரும் செல்வம் அவர்களுக்கு கொடுத்து தனது ஆட்சியை காப்பாற்றிக்கொண்டார்.
- முகலாயரின் உதவியோடு மராத்தியர்களிடம் இழந்த சில பகுதிகளை மீட்டார்.
- தளபதி நரசப்பையன் தலைமையில் மங்கம்மாள் அனுப்பிய படை திருவிதாங்கூர் மன்னர் இரவிவர்மாவை தோற்கடித்து வெற்றி பெற்றனர்.
- தளபதி நரசப்பையன் தலைமையில் சென்ற படை தஞ்சை மராத்திய மன்னர் ஷாஜியை தோற்கடித்து, தஞ்சை அமைச்சர் பாலாஜி பண்டிதரிடம் இருந்து பெரும் பொருள்களை பெற்றுவந்தது.
- மைசூர் மன்னர் சிக்கதேவராயன் காவிரியின் குறிக்கே அணைகட்டிய போது, அவரை மங்கம்மாள் எதிர்த்தார்.
- மங்கம்மாளுக்கு துணையாக தஞ்சை மராட்டியர் உதவினார்.
- அச்சமயம் பெரும் மழைப் பொழிவால் அணைகள் உடைந்தன. சிக்கல் தற்காலிகமாக முடிவடைந்தது.
- ஒவ்வொருவரும் தாம் சிறந்ததாக கருதும் சமயத்தைக் கைக்கொண்டு வாழவிடுவதே தருமம் என்ற கொள்கையை மங்கம்மாள் பின்பற்றினார்.
- சமயத் தொடர்பாக சிறை வைக்கப்பட்ட மெல்லோ பாதிரியாரை விடுதலை செய்து, போசேத் என்ற குருவைத் தம் அரசவையில் வரவேற்று விருந்தோம்பினார்.
- மதுரையில் பெரியதொரு அன்னச்சத்திரத்தைக் கட்டினார்.
- இவர் பல சாலைகளை அமைத்தார். கன்னியாகுமரிக்கும் மதுரைக்கும் இடையே அமைந்த நெடுஞ்சாலை, "மங்கம்மாள் சாலை" எனப்படுகிறது.
- ஆணித்திங்களில் "ஊஞ்சல் திருவிழா" நடத்தினார்.
- மங்கம்மாள் மத்தியச் சந்தை, மதுரைக் கல்லூரி, உயர்நிலைப்பள்ளிக் கட்டடம், இராமநாதபுர மாவட்ட ஆட்சித் தலைவரின் பழைய அலுவலகம் போன்றவற்றை கட்டினார்.
- மங்கம்மாளின் பெயர் மங்காத புகழோடு விளங்கும்.
இராணி மங்கம்மாள் - 9 ஆம் வகுப்பு சமச்சீர்
Subscribe to:
Posts (Atom)
இன்பத்தமிழ் - Class 6 Tamil New Syllabus Term 1
தமிழ் வணக்கம் தற்கால இலக்கிய மரபாகிவிட்டது பாரதிதாசனின் இயற்பெயர் சுப்புரத்தினம். பாரதியாரின் கவிைதகள் மீது கொண்ட பற்றின் காரணமா...
-
* தமிழை பக்தி மொழி (இரக்கத்தின் மொழி) என்று கூறியவர் மறைத்திரு தனிநாயக அடிகள். * சமய மறுமலர்ச்சிக் காலம் என்பதும், பக்தி இலக்கியக் க...
-
ஆற்றவும் கற்றார்அறிவுடையார் அஃதுடையார் நாற்றிசையும் செல்லாத நாடில்லை - அந்நாடு வேற்றுநா டாகா தமவேயாம் ஆயினால் ஆற்றுணா வேண்டுவ தில். ...
No comments:
Post a Comment