உடம்பார் அழியின் உயிரார் அழிவர்
திடம்பட மெய்ஞ்ஞானம் சேரவும் மாட்டார்
உடம்பை வளர்க்கும் உபாயம் அறிந்தே
உடம்பை வளர்த்தேன் உயிர்வளர்த் தேனே
- திருமூலர்
சொற்பொருள்:
- திடம் - உறுதி
- மெய்ஞ்ஞானம் - மெய்யறிவு
- உபாயம் - வழிவகை
- பெயர் - மூலன் என்னும் பெயர், திரு என்னும் பெயரடை பெற்று, அத்துடன் அர் என்னும் மரியாதைப்பன்மையும் பெற்று, திருமூலர் என ஆயிற்று.
- காலம் - ஐந்தாம் நூற்றாண்டின் முற்பகுதி.
- சைவத் திருமுறைகளின் பத்தாவது திருமுறை திருமந்திரம்.
- இதற்குத் "தமிழ் மூவாயிரம்" என்னும் வேறுபெயரும் உண்டு.
- இந்நூல் மூவாயிரம் பாடல்களைக் கொண்டது.
- "ஒன்றே குலம் ஒருவனே தேவன்" என்பது இந்நூலின் புகழ்பெற்ற தொடராகும்.
- திருமந்திரப் பாடல் மூன்றாம் தந்திரத்தில் எழுநூற்று இருபத்து நான்கு பாடல்களைக் கொண்டது.
No comments:
Post a Comment