Current Affairs in Tamil December 2014 - PART 2


  • கடலில் கண்ணிவெடிகளைக் கண்டறிந்து அகற்றக் கூடிய 8 போர்க் கப்பல்கள் இந்தியாவில் கட்டப்படும் என்று, பாதுகாப்புத் துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர் தெரிவித்தார்.
  • கிராமப்புற தொழிலாளர்களுக்கான தேசிய ஆணையம், நாடு முழுவதும் ஒரே மாதிரியான குறைந்தபட்ச கூலியை நிர்ணயிக்கும்படி பரிந்துரை செய்திருந்தது.தற்போது குறைந்த பட்ச கூலியாக ரூ.137 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. குறைந்தபட்ச கூலிச் சட்டம் 1948ன்கீழ் மத்திய மாநில அரசுகள், அட்டவணையிலிடப்பட்ட வேலைகளுக்கு குறைந்தபட்ச கூலியை நிர்ணயிக்கவும், திருத்தியமைக்கவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
  • ஆந்திர பல்கலைக்கழகங்களில் ஜப்பான் மொழி அறிமுகம் செய்யப் படும் என அம்மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார்.இங்கு உள்ள 3 பல்கலைக் கழகங்களில் ஜப்பான் மொழி கல்வி திட்டம் அறிமுகப்படுத்தப் படஉள்ளது. இதன் மூலம் ஜப்பானியர்கள் இங்கு வந்து கல்வி கற்க வாய்ப்பு ஏற்படும். மேலும் இந்த மொழியை நாம் கற்றுக் கொண்டால் ஜப்பானில் வேலை வாய்ப்பு கிடைக்கும். இவ்வாறு சந்திரபாபு நாயுடு கூறினார்.
  • விண்வெளித் திட்டங்களுக்கு கிரையோஜெனிக் என்ஜின்களை வழங்குவதே எச்.ஏ.எல். நிறுவனத்தின் எதிர்காலத் திட்டமாகும் என்று அந்த நிறுவனத்தின் தலைவர் ஆர்.கே.தியாகி தெரிவித்தார்.பெங்களூரு எச்.ஏ.எல். வளாகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், ஒருங்கிணைந்த கிரையோஜெனிக் என்ஜின் உற்பத்தி வளாகத்துக்கு இந்திய விண்வெளி ஆய்வுக் கழக (இஸ்ரோ) தலைவர் கே.ராதாகிருஷ்ணன் அடிக்கல் நாட்டினார்.இஸ்ரோவின் விண்வெளித் திட்டங்கள் அனைத்துக்கும் எச்.ஏ.எல். நிறுவனம் பல தொழில்நுட்ப உதவிகளைச் செய்து வந்துள்ளது."மங்கள்யான்' விண்கலத் திட்டத்திலும் எச்.ஏ.எல். நிறுவனத்தின் பங்களிப்பு பெருமைக்குரியது என்றார் ராதாகிருஷ்ணன்.
  • வடகிழக்கு மாநிலங்களில் 14 புதிய ரயில் பாதைகள் திட்டத்துக்காக மத்திய அரசு ரூ.28,000 கோடி ஒதுக்கீடு செய்ய உள்ளது என்று பிரதமர் நரேந்திர மோடி திங்கள்கிழமை அறிவித்தார். மேலும், இந்தப் பகுதிகளில் தொலைத்தொடர்பு, மின் வசதிகளை மேம்படுத்த மொத்தம் ரூ.10,000 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.நாகாலாந்து மாநிலத்தில் ஆண்டுதோறும் நடைபெறும் பாரம்பரியத் திருவிழாவான ஹார்ன்பில் திருவிழா, அந்த மாநிலத் தலைநகர் கொஹிமாவில் திங்கள்கிழமை தொடங்கியது. 7 நாள்கள் நடைபெறும் இந்தத் திருவிழாவை தொடங்கி வைத்து பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.
  • உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரியான அனூப் மிஸ்ராவை மக்களவைச் செயலராக நியமித்துள்ளதாக மக்களவைத் தலைவர் சுமித்ரா மகாஜன் திங்கள்கிழமை அறிவித்தார்.
  • சிபிஐ அமைப்பின் புதிய இயக்குநராக அனில் குமார் சின்ஹா, புதன்கிழமை (4th December)பொறுப்பேற்றுக்கொண்டார்.58 வயதான அனில் குமார், 1979ஆம் ஆண்டின் ஐபிஎஸ் பிரிவைச் சேர்ந்தவர். இவர், ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் பயின்றவர். உளவியல் பாடப்பிரிவில் முதுகலைப் பட்டமும் பெற்றுள்ளார்.
  • கேரள மாநிலத்தில் பேய் ஓட்டுதல் உள்ளிட்ட மூட நம்பிக்கைகளை ஒழிப்பதற்குச் சட்டம் கொண்டுவர மாநில அரசு திட்டமிட்டுள்ளது.
  • மகாகவி சுப்ரமணிய பாரதியாரின் பிறந்த நாளான டிசம்பர் 11-ஆம் தேதி, பெண்கள் கல்வி மையங்கள் உள்ள அனைத்துப் பல்கலைக்கழகங்களிலும் "பெண்களுக்கு அதிகாரமளித்தல்' என்ற தலைப்பிலான கட்டுரை, பேச்சுப் போட்டிகள், கருத்தரங்குகள் ஆகியவற்றை நடத்த வேண்டும் என்று பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) உத்தரவு பிறப்பித்துள்ளது.
  • வீலர் தீவில் நேற்று நடத்தப்பட்ட சோதனையில் சீறிப் பாயும் அக்னி-4 ஏவுகணை.அணுஆயுதங்களை சுமந்து செல்லும் திறன்படைத்த அக்னி-4 ஏவுகணை நேற்று வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டது.கடந்த 2011 நவம்பர் 15-ம் தேதி அக்னி-4 ஏவுகணை முதல் முறையாக சோதனை செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து 2012, 2014 ஜனவரியில் அடுத்தடுத்து சோதனைகள் நடத்தப்பட்டன.இதைத்தொடர்ந்து நான்காவது முறையாக ஒடிஸா மாநிலம் வீலர் தீவில் நேற்று அக்னி-4 ஏவுகணை சோதனை நடத்தப்பட்டது.

No comments:

Post a Comment

இன்பத்தமிழ் - Class 6 Tamil New Syllabus Term 1

தமிழ் வணக்கம்   தற்கால இலக்கிய மரபாகிவிட்டது  பாரதிதாசனின் இயற்பெயர்   சுப்புரத்தினம்.  பாரதியாரின் கவிைதகள்  மீது கொண்ட  பற்றின் காரணமா...